Tamilnadu

News March 24, 2024

ஆற்றில் குளித்த சிறுவன் நீரில் மூழ்கி பலி

image

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை கீழ முன்னீர் பள்ளம் புது கிராமம் அருகே தாமிரபரணி ஆற்றில் அருகில் உள்ள சாஸ்தா கோவிலுக்கு சாமி கும்பிட வந்த சிறுவன் ஆற்றில் மூழ்கி விட்டதாக பாளை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் இன்று (மார்ச் 24) வந்துள்ளது. இந்த தகவலின்பேரில் பாளையங்கோட்டை மீட்பு படையினர் விரைந்து சென்று சிறுவனை உடலை சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக தேடி மீட்டனர்.

News March 24, 2024

சேலத்தில் 30ம் தேதி கமல் பிரச்சாரம்

image

2024 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மார்ச் 29ஆம் தேதி ஈரோட்டிலும், சேலத்தில் 30ம் தேதியும், திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தை தொடங்குகிறார் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்.

News March 24, 2024

காஞ்சிபுரம் அருகே கோர விபத்து

image

வாலாஜாபாத் அருகே லிங்காபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் வ/45 செக்யூரிட்டியாக பணியாற்றி வந்தவர். இவர் வழக்கம் போல் பணிக்கு இன்று காலை சைக்கிளில் வாரணவாசி பகுதியில் வண்டலூர் வாலாஜாபாத் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது பின்னால் வந்த டிப்பர் லாரி மோதியதில் கணேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இந்த விபத்து குறித்து ஒரகடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News March 24, 2024

தி.மலை: மாணவிகளிடம் சில்மிஷம்

image

கண்ணமங்கலத்தைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். இவர் அந்த பகுதியில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகளிடம் தொடர்ந்து ஆபாசமாக பேசி வந்துள்ளார். மேலும் ஒரு மாணவியை கட்டிப்பிடித்து திருமணம் செய்து கொள்வதாக தகராறு செய்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கண்ணமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் மோகன் ராஜுவை கண்ணமங்கலம் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

News March 24, 2024

ராணிப்பேட்டை அருகே விபத்து

image

நெமிலி தாலுகா சயனபுரத்தை சேர்ந்தவர் சீனு( 55). இவர் நேற்று இரவு சேந்தமங்கலம் நெமிலி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த தனியார் தொழிற்சாலை பேருந்து இவர் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நெமிலி போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு விசாரிக்கின்றனர்.

News March 24, 2024

திருப்பத்தூர்: வாக்களிக்க ஊதியத்துடன் விடுமுறை

image

தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 இல் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. 1951 இல் உருவாக்கப்பட்ட மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 135-பி இன் கீழ் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக தேர்தல் தினத்தன்று அனைத்து வகையான நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும். இந்த விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படும்.

News March 24, 2024

பழனியில் விழாக்கோலம் பூண்டது

image

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவிலில் இன்று மாலை பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வான பங்குனி உத்திர தேரோட்டம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்தும், பால்குடம் எடுத்தும் பழனியை நோக்கி குவிந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் தீர்த்தம் எடுத்தும் காவடி எடுத்தும் ஆடிப்பாடி வருவதால் பழனி நகரமே விழாக்கோலம் பூண்டது.

News March 24, 2024

அரியலூர் அருகே 3 பேர் கைது

image

அரியலூர், ஜெயங்கொண்டம் ஆமணக்கந்தோண்டி கிராமத்தை சேர்ந்த சின்ன பொண்ணு என்பவருக்கும் அதே பகுதியைப் சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவருடைய குடும்பத்தினருக்கும் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்துள்ளது. கடந்த 22ம் தேதியன்று சுந்தரமூர்த்தியும் அவரது உறவினரும் சின்னபொண்ணை கீழே தள்ளி திட்டியுள்ளனர். இது குறித்து புகாரின் பேரில் வழக்கு பதிந்து சுந்தரமூர்த்தி அவரது உறவினர் 3 பேரை கைது செய்தனர்.

News March 24, 2024

செங்கல்பட்டு: முன்னாள் அமைச்சர் காலமானார்

image

மதுராந்தகம் அருகே உள்ள பெரும்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் இராமகிருஷ்ணன். அச்சரப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்று (1989) ஆதிதிராவிட நலத்துறை அமைச்சராக பதவி வகித்தார். அதன் பிறகு கட்சி மாறி அதிமுகவில் இணைந்து கட்சியில் அச்சரப்பாக்கம் சட்டமன்ற தனி தொகுதியில் (1991 To 95) சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த ராமகிருஷ்ணன் இன்று (மார்ச்-24) காலமானார்.

News March 24, 2024

மதுரை: வாகன சோதனையில் சிக்கிய ரூ.9 லட்சம்

image

மக்களவைத் தேர்தல் நடக்க உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் பறக்கும்படை, கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், கள்ளிக்குடி – விருதுநகர் 4 வழி சாலையில் காரியாபட்டி விலக்கு பகுதியில் கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, மதுரை நோக்கி வந்த காரில் ரூ.9 லட்சம் உரிய அனுமதியின்றி கொண்டு வந்தது தெரியவந்தது. பின்னர் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!