Tamilnadu

News March 23, 2024

திருச்சி: சரியான ஆளுநரை தேர்ந்தெடுங்கள் -எம்எல்ஏ

image

தமிழக அமைச்சர் பொன்முடி தொடர்பான வழக்கில் ஆளுநர் ஆர்.என்.ரவி மன்னிப்பு கேட்டது உயர் பண்பு என்ற போதிலும், அவரது மரபு மீறல்கள் தமிழகத்தை அவமானப் படுத்துகிறது. என திருச்சி கிழக்கு எம்எல்ஏ இனிகோ இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் இதையே சாதகமாக வைத்துக்கொண்டு ஒருவர் தொடர்ந்து தவறுகள் செய்வது ஏற்கத்தக்கதல்ல எனவும், இனிமேலாவது சரியான நபரை ஆளுநராக பாஜக தேர்ந்தெடுக்க கூறியுள்ளார்.

News March 23, 2024

டி.எம்.செல்வகணபதிக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்

image

சேலத்தில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று பேட்டி அளித்தார். அதில்
டி.எம்.செல்வகணபதி யார் என்று உங்களுக்கு தெரியும். கட்சி மாறியதால் தான் அவர் அனுபவசாலி. அ.தி.மு.க.வால் தான் எம்.பி., எம்.எல்.ஏ., அமைச்சர் போன்ற பதவிகள் கிடைத்தன; சேலம் மக்கள் அவருக்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்று கூறினார்.

News March 23, 2024

தென்காசியில் தேர்தல் விழிப்புணர்வு குறும்படம்

image

மக்களவை பொதுத் தேர்தலை முன்னிட்டு தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் இன்று தேர்தல் விழிப்புணர்வு குறும்படத்தை தென்காசி மாவட்ட கலெக்டர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் கமல் கிஷோர் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி மகளிர் திட்ட இயக்குனர் இந்திரா பிரியதர்ஷினி மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

News March 23, 2024

புதுகை: நாட்டுப்புற கலைஞர்கள் ஆட்சியரிடம் மனு 

image

புதுகை நாட்டுப்புற கலைஞர்கள் உள்ளிட்டோர் இரவு 7 முதல் 10 மணி வரை கலை நிகழ்ச்சி நடத்த அனுமதிக்க ஆட்சியர் மெர்சி ரம்யாவை ஆட்சியரகத்தில் சந்தித்த ஆக்காட்டி ஆறுமுகம் மற்றும் கந்தர்வகோட்டை செல்ல தங்கையா ஆகியோர் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். தேர்தல் விதிகளின் அடிப்படையில் தேர்தல் நடைமுறைப்படி ஏழு மணி முதல் 10 மணி வரை நாட்டுப்புற நிகழ்ச்சி நடைபெறவும் காவல்துறை அனுமதி அளிக்கவும் கோரிக்கை மனு அளித்தனர்.

News March 23, 2024

கடலூர் மாவட்டத்தில் 181 துப்பாக்கிகள் போலீசில் ஒப்படைப்பு

image

பாராளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகளில் அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதனால் தேர்தலின் போது அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் தடுக்கும் வகையில், துப்பாக்கி பயன்படுத்துவோர் தங்கள் துப்பாக்கிகளை போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் தங்கள் பாதுகாப்பு கருதி உரிய அனுமதி பெற்று துப்பாக்கி பயன்படுத்தும் 181 பேர், இன்று போலீஸ் நிலையங்களில் ஒப்படைத்தனர்.

News March 23, 2024

மதுரை: தீவிர விசாரணையில் போலீசார்!

image

மதுரை கூடல்நகர் பகுதியில் 5 ஆம் வகுப்பு படித்து வந்த 11 வயது மாணவி நேற்று முன் தினம் மாலை வீட்டின் குளியலறையில் மயங்கிய நிலையில் கிடந்தார். இதையடுத்து, மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுமி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். இந்நிலையில், சிறுமி மரணம் இயற்கையானதா? சிறுமி கொலை செய்யப்பட்டாரா? பாலியல் வன்கொடுமையா ? என்ற அடிப்படையில் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

News March 23, 2024

பங்குனி உத்திர மகா தேரோட்டம் 

image

ஆரணி அருகே காமக்கூர் கிராமத்தில் பங்குனி உத்திர தேரோட்டம் இன்று நடைபெற்றது.

அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில்  அமிர்தாம்பிகை உடன் சந்திரசேகர சாமி அமர்ந்து காமக்கூர் கிராமத்தில் முக்கிய வீதிகளில் வழியாக உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மலர்களை தூவி தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

News March 23, 2024

திருநெல்வேலி அதிமுக வேட்பாளர் மாற்றம்.!

image

திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் வேட்பாளராக சிம்லா முத்துச்சோழன் கடந்த இரண்டு நாளுக்கு முன்பு வேட்பாளர் பட்டியலில் அறிவிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் திடீர் திருப்பமாக அதிமுக சார்பில் ஜான்சிராணி போட்டியிடுவார் என அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று (மார்ச் 23) தெரிவித்துள்ளார்.

News March 23, 2024

நாமக்கல்: பானை விற்பனை அதிகரிப்பு

image

கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் பொது மக்கள் குளிர்ச்சியான தண்ணீரை பெருவதில் அதிக ஆர்வம் காட்டுவர் இதற்காக நாமக்கல்லில் மண் பானை விற்பனை தொடங்கியுள்ளது ரூ.150 முதல் ரூ.450 வரை விற்பனை செய்யப்படுகிறது. மானாமதுரை திருச்சியில் இருந்து கொண்டு வந்து நாமக்கல்லில் விற்பனை செய்யப்படுகிறது மே 4ம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்க உள்ளதால் பானை விற்பனை மேலும் அதிகரிக்கும் என வியாபாரி நாகராஜன் கூறினார்.

News March 23, 2024

தென்காசி விடுதலை சிறுத்தைகள் ஆலோசனை

image

தென்காசியில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்ற செயலாளர் வர்கீஸை கடையம் ஒன்றிய செயலாளர் ஆதித்தமிழன் அன்பழகன் மற்றும் ஒன்றிய மாணவரணி நிர்வாகி கார்த்திக் நாடார், ஆழ்வை நகரச் செயலாளர் தங்கராஜா, தென்காசி ரீகன் குமார் ஆகியோர் சந்தித்து பேசினர்.
அப்போது நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற ஆலோசனை செய்தனர்.

error: Content is protected !!