India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மயிலாடுதுறை, தரங்கம்பாடி அருகே செம்பனார்கோவிலில் நகை மற்றும் பணத்துடன் இருந்த பர்ஸை செந்தில்குமார் என்பவர் தவறவிட்டார். அதனை கண்டெடுத்த ராதாகிருஷ்ணன் என்பவர் முகவரியை பார்த்து தொடர்பு கொண்டு உரியவரிடம் பர்சை ஒப்படைத்தார். தொடர்ந்து ராதாகிருஷ்ணனின் செயலை காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் இன்று பாராட்டினர்.
பாராளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு இ.ஆ.ப., அவர்கள் இன்று 23.03.2024 நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் ஓசூர் சார் ஆட்சியர் பிரியங்கா இ.ஆ.ப., துணை காவல் கண்காணிப்பாளர் பாபு பிரசாந்த் ஆகியோர் உள்ளனர்.
திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் அதிமுக வேட்பாளராக அருணாச்சலம் அறிவிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து இன்று திருப்பூர் கொங்கு மெயின் ரோடு பகுதியில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் அதிமுக வேட்பாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார் உள்ளிட்டார் தேமுதிக நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினர்.
மதுரையைச் சேர்ந்த தினேஷ் குமார் 19 , ஸ்ரீதர் 20 ஆகிய இரு நண்பர்கள் இன்று மதுரையிலிருந்து உசிலம்பட்டி நோக்கி பைக்கில் சென்றுள்ளனர். அப்போது செக்கானூரணி அருகே அழகுசிறையில் வைத்து சாலையின் இடதுபுறம் இருந்த மரத்தின் மீது பைக் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
பாராளுமன்றத் தேர்தல் 2024 நடைபெறுவதை முன்னிட்டு விருதுநகரில் தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 31ம் தேதி அன்று காலை 7 மணி அளவில் கல்லூரி மாணவ மாணவியர் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெற உள்ளது.எனவே கல்லூரி மாணாக்கர் இந்த போட்டியில் கலந்துகொண்டு தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருநெல்வேலி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக இன்று (மார்ச் 23) மாலை அறிவிக்கப்பட்ட ஜான்சி ராணி திசையன்விளை பேரூராட்சி தலைவராகவும் நெல்லைப் புறநகர் மாவட்ட இணை செயலாளராகவும் உள்ளார். இவர் பி.ஏ பட்டதாரி ஆவார். இவர் திசையன்விளையில் வசிக்கிறார். இவருக்கு கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தச்சநல்லூர் மேக்கரையை சேர்ந்த மணிகண்டன் (37) என்பவர் மீது 5 கொலை வழக்கு, 12 கொலை முயற்சி உள்ளிட்ட 25 குற்ற வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் வழிப்பறியில் ஈடுபட்ட அவரை போலீசார் துப்பாக்கி மற்றும் 6 தோட்டாக்களுடன் பிடித்து கைது செய்தனர். துணை போலீஸ் கமிஷனர் கீதா பரிந்துரையின்படி போலீஸ் கமிஷனர் மூர்த்தி உத்தரவின் படி மணிகண்டன் இன்று (மார்ச் 23) குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் I.N.D.I.A கூட்டணி சார்பில் வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடக்க உள்ளது. அமைச்சர்கள், மாவட்ட செயலாளர், திமுக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர். அந்த பொதுக்கூட்ட மேடையின் அருகில் இஸ்லாமியர்கள் தொழுகைக்காக சிறப்பு அரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டது.
விருதுநகர் மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான புகார்களை அளிக்க ஏற்கனவே தேர்தல் தொடர்பு கட்டுப்பாட்டு மைய எண்களான 1950, 0452-234600 என்ற எண்ணிலும் புகார் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. மேலும் இந்திய தேர்தல் ஆணையத்தின் C-VIGIL என்ற செல்போன் செயலியின் மூலமாகவும் பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், உள்துறை அமைச்சராக உள்ள நமச்சிவாயத்திடம் காவல்துறை
உள்ளிட்ட முக்கிய துறைகள் உள்ளன. எனவே தேர்தலின் போது அவர் துறைசார்ந்த அரசு இயந்திரம் அவருக்கு ஆதரவாக செயல்படக் கூடிய சூழல் உருவாகும். ஆகவே உள்துறை அமைச்சர் பதவியை நமச்சிவாயம் ராஜினாமா செய்துவிட்டு தேர்தலை சந்திக்க வேண்டும் என்று இவ்வாறு தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.