India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாகை நகராட்சியில் வசிக்கும் வணிகர்கள், பொதுமக்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியினை ஏப்.,30 -க்குள் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. முழுமையாக செலுத்துபவர்களுக்கு சிறப்பு ஊக்க தொகையாக 5 சதவிகிதம் வழங்கப்படும். மேலும், சொத்து உரிமையாளர்களின் வசதிக்காக சனி மற்றும் ஞாயிறு ஆகிய விடுமுறை நாட்களிலும் நகராட்சி வரிவசூல் மையம் செயல்படும் என்று ஆணையர் நாராயணன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறவுள்ளது. இதையடுத்து, வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் ஓட்டுக்காக பணம் கொடுப்பதை தடுக்க, தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மயிலாப்பூர், சேப்பாக்கம், எழும்பூர், பெசன்ட் நகர் பகுதியில் இன்று காலை முதலே பறக்கும் படை சோதனை நடைபெறுகிறது. நேற்று இரவு ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தில் கடந்த ஓராண்டில் ரயில்களில் டிக்கெட் இன்றியும், முறைகேடாகவும் பயணித்த 2 லட்சத்து 74 ஆயிரம் பேரிடமிருந்து ரூ.19 கோடி அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 22% அதிகம் என நேற்று(ஏப்.6) தெற்கு ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் டிக்கெட் இன்றி முறைகேடாக பயணிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பயிற்சி நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து, நேற்று(ஏப்.6) மாவட்டத்திலுள்ள வெடிகுண்டு துப்பறிதல் மற்றும் அகற்றும் படையினரின் எண்ணிக்கையை அதிகரித்து கூடுதலாக 20 நபர்களுக்கு வெடிகுண்டு துப்பறிதல் மற்றும் அகற்றும் படையினரால் தீவிர செய்முறை விளக்கத்துடன் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
தஞ்சாவூர் பெரியகோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று(ஏப்.7) தொடங்கியது. இந்த சித்திரை திருவிழா 18 நாட்கள் நடைபெறுகிறது. இதில் முக்கிய நிகழவான தோராட்டம , விழாவின் 15வது நாள், அதாவது வருகிற 20ம் தேதி(சனிக்கிழமை) நடைபெறுகிறது. அன்று காலை 7 மணிக்கு மேல் 7.20 மணிக்குள் தேர் வடம்பிடித்து இழுக்கப்படுகிறது.
சேலம் மாவட்டம் முழுவதும் கடும் வெயில் காரணமாக ஏசி மற்றும் ஏர் கூலர் விற்பனை 30% அதிகரித்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 1ம் தேதி 102.4 டிகிரி பதிவான நிலையில், நேற்று 106.7 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. அனல் காற்றும் வாட்டி எடுப்பதால் பொதுமக்கள் குளிர்சாதன கருவிகளை நாடி வருகின்றனர்.
புதிய நீதிக் கட்சி நிறுவனர் ஏ.சி.சண்முகத்திற்கு சொந்தமான, ஏ.சி.எஸ்., மருத்துவ கல்லூரி திருவேற்காடு அருகே வேலப்பன்சாவடியில் இயங்கி வருகிறது இந்த கல்லூரியில் நேற்று மாலை மர்ம கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது இச்சம்பவம் குறித்து திருவேற்காடு போலீசார் விசாரணை நடத்திய போது மிரட்டல் கடிதம் வெறும் புரளி என தெரியவந்தது. மேலும் கடிதத்தை அனுப்பிய லட்சுமணன் என்பவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்
கோரிமேடைச் சேர்ந்த பாஸ்கர், அவருக்கு நெஞ்சுவலி என மனைவி ஷர்மிளா நேற்று அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார். தொடர்ந்து நடைபெற்ற உடற்கூறாய்வில் அவரது கழுத்து நெரிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து கோரிமேடு போலீசார் நடத்திய விசாரணையில் திருமணம் மீறிய உறவால் அவரது மனைவி ஷர்மிளாவே பாஸ்கரை கொலை செய்தது தெரியவந்தது.
நெல்லையில் இருந்து சரக்கு ஏற்றிக்கொண்டு நேற்று மாலை ஒரு லாரி மதுரை சென்று கொண்டிருந்தது. கோவில்பட்டி அருகே உள்ள சாலைப்புதூர் விலக்கு அருகே சென்றபோது எதிரே வந்த மற்றொரு லாரியுடன் நேருக்கு நேர் மோதியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் இடிபாடுகளில் சிக்கிய இரண்டு லாரி ஓட்டுநர்களையும் பலத்த காயங்களுடன் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
வத்தலக்குண்டு அக்ரஹாரம் கோயில் தெருவை சேர்ந்தவர் சூரியநாராயணன் (78). இவரது மனைவி வசந்தா (75) ஏப் 2 உடல்நிலை பாதிப்பால் இறந்தார். இதைத்தொடர்ந்து சூரிய நாராயணன், அவரது சகோதரர் சுந்தரராஜன் (81) வீட்டில் இருந்தனர். அன்று முதல் வீடு பூட்டிய நிலையில் இருந்தது. நேற்று துர்நாற்றம் வீசத் தொடங்கியது. வத்தலக்குண்டு போலீசார் வீட்டை திறந்து பார்த்த போது சூரிய நாராயணன், சுந்தர்ராஜன் இறந்த நிலையில் கிடந்தனர்.
Sorry, no posts matched your criteria.