Tamilnadu

News April 8, 2024

பாஜக வேட்பாளருக்கு இன்று உற்சாக வரவேற்பு

image

திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் நயினார் நாகேந்திரன் இன்று (ஏப்ரல் 8) மானூர் வட்டாரம் தாழையூத்து மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அங்கு அவருக்கு பாரதிய ஜனதா கட்சி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தலைப்பாகை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

News April 8, 2024

அதிமுக முன்னாள் எம்எல்ஏ காலமானார்

image

திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் தொகுதி அதிமுகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகியும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஏ.கே.எஸ்.அன்பழகன் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். இவரது உடலுக்கு அதிமுக முக்கிய தலைவர்கள், அரசியல் கட்சியினர் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவர் எம்ஜிஆர் மன்ற இணை செயலாளராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

News April 8, 2024

நெல்லையில் இளைஞர் வெட்டிக் கொலை

image

திருநெல்வேலி மாவட்டம் நொச்சிகுளம் கலையரங்கம் அருகில் இன்று (ஏப்.8) அன்பு (32) என்ற இளைஞரை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News April 8, 2024

வேலூர் தபால் வாக்குகள் பெறும் பணிகள் தீவிரம்

image

பாராளுமன்ற பொது தேர்தல் முன்னிட்டு, வேலூர் மாவட்டத்தில் 85 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களின் தபால் வாக்குகளை அவர்களின் இருப்பிடங்களுக்கு சென்று பெறும் பணி இன்று (ஏப்ரல் 8) நடந்தது. வேலூர் தொரப்பாடி பகுதியில் தபால் வாக்குகளை முதியவர்கள் செலுத்தினர். இந்த பணியை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கவிதா பார்வையிட்டார்.

News April 8, 2024

வேப்பந்தட்டை பகுதியில் அணிவகுப்பு

image

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டத்திற்குட்பட்ட அரும்பாவூர் மற்றும் பூலாம்பாடி பகுதியில் நேற்று(ஏப்.7), மக்களவைத் தேர்தலை முன்னிட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சியாமளாதேவி உத்தரவின் பேரில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. மத்திய துணை காவல் படையினர், காவல் கண்காணிப்பாளர் ஹேம் ராம் மற்றும் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பழனிச்சாமி தலைமையில் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

News April 8, 2024

சேலம்: பொய் தகவல் பரப்புவோர் மீது நடவடிக்கை

image

தேர்தல் தொடர்பாக செல்போன் மூலம் சமூக வலைத்தளங்களில் பொய் தகவல் பரப்புவோர் மீது புகார் அளிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் தெரிவித்துள்ளார்.
இத்தகைய சைபர் குற்றங்கள் குறித்து புகார் அளிக்க 96293 90203 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

News April 8, 2024

திமுக கூட்டணி சார்பில் மீனவர் சந்திப்பு கூட்டம்

image

இந்திய கூட்டணி சார்பில் மீனவர் சந்திப்பு கூட்டம் பாம்பனில் இன்று நடந்தது. திமுக மாவட்ட செயலர் காதர் பாட்ஷா முத்து ராமலிங்கம் எம்எல்ஏ தலைமை வகித்தார். பனை தொழிலாளர் நலவாரியத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் முன்னிலை வகித்தார். அனிதா ராதாகிருஷ்ணன் பேசுகையில், ஓபிஎஸ் யாருக்காவது உதவி செய்துள்ளாரா? என்றார். அமைச்சர் ராஜகண்ணப்பன், நவாஸ் கனி எம்பி வாக்கு சேகரித்து பேசினர்.

News April 8, 2024

விருதுநகர் அருகே அடித்து கொலை

image

சாத்தூர் அருகே சிந்தப்பள்ளியை சேர்ந்த முனியாண்டி என்பவர் இறந்தார். நேற்று அவரது உடலை அடக்கம் செய்ய ஊர்வலமாக எடுத்து சென்றனர்.அதே ஊரை சேர்ந்த கலைமணியை (27) வீரஅபிமன்ன(51),வீர பூபதி(24),மற்றொருவர் சேர்ந்து தாக்கியுள்ளனர். உறவினர்கள் சாத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிக்சைக்கு கொண்டு சென்றனர்.அவரை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.சாத்தூர் போலீஸ் விசாரணை.

News April 8, 2024

ராணிப்பேட்டை: அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதல்!

image

சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காவேரிப்பாக்கம் அடுத்த கொண்டாபுரம் பகுதியில் சரக்கு லாரி மீது, பின்னால் வந்த மற்றொரு லாரி மோதியது. இதில் முன்னாள் சென்ற 2 கார்கள் மீதும் லாரி மோதியது. அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதிய விபத்தில் 3 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. சம்பவம் குறித்து அறிந்த அவலூர் போலீசார் விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

News April 8, 2024

அமைச்சர் மதிவேந்தன் வாக்கு சேகரிப்பு..

image

அமைச்சர் மதிவேந்தன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மாதேஸ்வரனை ஆதரித்து அப்ப நாயக்கன்பட்டி,போடிநாயக்கன்பட்டி, சிங்களாந்தபுரம் ஆகிய இடங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்நிகழ்வில் ராசிபுரம் ஒன்றிய சேர்மன் ஜெகநாதன் மற்றும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!