India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஆன்லைனில் பேருந்து டிக்கெட் புக் செய்த போது கூகுளில் தேடிய தவறான கஸ்டமர் கேர் எண்ணை தொடர்பு கொண்டு ரூ.1 லட்சம் பணத்தை இழந்த அகமது அஸ்லாம் என்பவர் இராமநாதபுரம் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், சைபர் கிரைம் காவல்துறையினர் விரைவாக விசாரணை மேற்கொண்டு முழு தொகையையும் மீட்டு இன்று காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ்.IPS முன்னிலையில் உரிய நபரிடம் ஒப்படைத்தார்.

பணத்தை மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட 2 வழக்குகளில் இருந்தும் தன்னை விடுவிக்கக்கோரி முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தரப்பில் ஶ்ரீவி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை தள்ளுபடி செய்ய கோரி குற்றப்பிரிவு போலீசார் பதில் மனு தாக்கல் செய்தனர். விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் கே.டி.ஆர் உள்பட 3 பேர் ஆஜராகததால் வழக்கு விசாரணையை ஜன.23 -ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

ஆம்பூரில் சுமார் 25 வயது தக்க வாலிபர் நேற்று (ஜன.6) ஈரோட்டில் இருந்து காட்பாடி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது ஆம்பூர்- மேல் ஆலத்தூர் ரயில் நிலையங்களுக்கு இடையே செல்லும் போது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். இதையடுத்து ஜோலார்பேட்டை ரயில்வே போலிசார் இறந்தவர் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகங்கை: வருகின்ற 21.1.2026ம் தேதியன்று திருப்பூர் மாவட்டத்தில் குறளாசிரியர் மாநாடு, குறள் வினாடி வினா போட்டிகள் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்பதற்கு, அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களைத் தேர்வு செய்யும் கொள்குறி வடிவிலான எழுத்துத் தேர்வு வருகின்ற 9.12026 அன்று சிவகங்கை, அரசு மகளிர் கலைக்கல்லூரியில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் கா.பொற்கொடி நேற்று தெரிவித்துள்ளார்.

தென்காசி முகாம்களில் புதிய வாக்காளர்கள் சேர்த்திட படிவம் 6 – 22,629, நீக்கல், ஆட்சேபனைக்கான படிவம் 7,236, முகவரி மாற்றம் மற்றும் திருத்தங்களுக்கான படிவம் 8 – 6,818 என எண்ணிக்கையில் பெறப்பட்டுள்ளது. மேலும், 01.01.2026 அன்று 18 வயது நிரம்பிய அனைத்து தகுதியான நபர்களும் 18.01.2026 வரை தங்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் படிவங்களை பெற்று, பூர்த்தி செய்து கொடுக்கலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார்.

நாகை மாவட்டம், திருக்குவளை அருகே எட்டுக்குடியில் முருகனின் ஆதிபடை வீடு என அழைக்கப்படும் ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு மார்கழி மாத செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு, இன்று காலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, முருகப்பெருமானை தரிசனம் செய்து வருகின்றனர் மேலும். விபூதி காப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

திருச்சி மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பிற்காக டோக்கன் வழங்கும் பணி கடந்த 4 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தொகுப்பு வழங்கும் பணி குறித்த புகார்கள் ஏதும் இருப்பின் அதனை சம்பந்தப்பட்ட உணவுப் பொருள் வழங்கள் தனி வட்டாட்சியர்கள், வட்ட வழங்கல் அலுவலர்களிடம் தெரிவிக்கலாம். மேலும் 0431-2411474 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டை போக்குவரத்து காவலர் நந்தினி, நேற்று போதையில் பைக்கில் ஒன்-வே சாலையில் வந்த நான்கு பேரை நிறுத்தியபோது, திருவல்லிக்கேணி சேர்ந்த பெருமாள் (28), மயிலாப்பூர் சேர்ந்த பிரேம் குமார் (28) ஆகியோர் தாக்குதல் நடத்தினர். பொதுமக்கள் உதவியுடன் இருவரும் பிடிக்கப்பட்டனர். பின்னர் தப்பியோடிய ஜீவா (23), சீனிவாசனையும் போலீசார் கைது செய்தனர். இவர்களில் பல வழக்குகள் இருப்பது விசாரணையில் தெரிந்தது.

மயிலாடுதுறையில் இருந்து தரங்கம்பாடிக்கு மீண்டும் ரயில் சேவை தொடங்கி வேளாங்கண்ணி வரை நீட்டிக்க குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் மயிலாடுதுறை-தரங்கம்பாடி ரயில் மீட்புக்குழு செயலா் கே.ராஜேந்திரன் வலியுறுத்தினாா். இதுகுறித்து அவா் அளித்த மனுவில் தரங்கம்பாடி வரை இயக்கப்பட்ட ரயில் சேவை நிறுத்தப்பட்டு பல ஆண்டுகள் ஆன நிலையில் அந்த ரயில் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

மதுரையில் கடந்த ஆண்டு கார்த்திகை தீபத்தை ஒட்டி, ஒட்டுமொத்த தமிழகத்திலும் பரபரப்பை ஏற்படுத்திய பிரச்னை திருப்பரங்குன்றம் மலை தூணில் தீபம் ஏற்றும் விவகாரம். இந்நிலையில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீது இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
Sorry, no posts matched your criteria.