India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மன்னவனூர் மற்றும் பேரிஜம் வனப்பகுதியில் வனத்துறையினரின் உடந்தையுடன் 2,000-க்கும் மேற்பட்ட அந்நிய மரங்கள் வெட்டி கடத்தப்பட்டது ஆய்வில் அம்பலமானது. இந்த முறைகேடு தொடர்பாக திண்டுக்கல் கோட்ட வனப் பாதுகாவலர் அதிரடி நடவடிக்கை எடுத்து, 4 வனத்துறையினரை சஸ்பெண்ட் செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீது தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது. திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில் தீபம் ஏற்றலாம் என நீதிபதிகள் கேகே ராமகிருஷ்ணன், ஜெயசந்திரன் அமர்வு உத்தரவிட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி உமா(19) தென்காசி தனியார் காவலர் பயிற்சி பள்ளியில் படித்து வந்தார். இவர் நேற்று அதே கல்லூரியில் பயிலும் ராஜேஷ் (25) என்பவருடன் பைக்கில் தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு ராஜேஷ், உமாவின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின், வெம்பக்கோட்டை போலீசில் நேற்று சரண் அடைந்த ராஜேஷை கழுகுமலை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி உமா(19) தென்காசி தனியார் காவலர் பயிற்சி பள்ளியில் படித்து வந்தார். இவர் நேற்று அதே கல்லூரியில் பயிலும் ராஜேஷ் (25) என்பவருடன் பைக்கில் தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு ராஜேஷ், உமாவின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின், வெம்பக்கோட்டை போலீசில் நேற்று சரண் அடைந்த ராஜேஷை கழுகுமலை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

திருவண்ணாமலை, தண்டராம்பட்டு பகுதியில் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி காணாமல் போவதாக அப்பகுதி மக்கள் புகார் அளித்து வந்தனர். இந்த நிலையில், காவல் ஆய்வாளர் பொன்ராஜன் தலைமையில் நடைபெற்ற வாகன சோதனையில் கள்ளக்குறிச்சியை சேர்ந்த சல்மான் (29) & திருவடத்தனூரை சேர்ந்த முன்னா கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 15-க்கும் மேற்பட்ட டூவீலர்கள் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.

கோவை மாநகராட்சி சார்பில் பழைய படுக்கைகள், சோபாக்கள், மெத்தைகள், நாற்காலிகள் போன்ற பெரிய வீட்டு கழிவுப் பொருட்களை சேகரிக்கும் சிறப்பு முகாம்கள் ஜனவரி 10, 11, 12, 13 தேதிகளில் நடத்தப்படுகிறது. எனவே மக்கள் குறிப்பிட்ட சேகரிப்பு மையங்களில் பொருட்களை ஒப்படைக்குமாறு மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு www.ccmc.gov.in என்ற இணையதளத்தை பார்வையிடவும் என அறிவித்துள்ளது.

கிளியனூர் அருகே, அருவாப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் (29), நீண்ட நாட்களாகத் தனக்குத் திருமணம் செய்து வைக்குமாறு வற்புறுத்தி வந்துள்ளார். தை மாதம் பெண் பார்ப்பதாகக் குடும்பத்தினர் கூறியும், மனவேதனையில் இருந்த அவர் கடந்த 3-ம் தேதி விஷம் அருந்தினார். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஸ்ரீபெரம்பத்தூர் அருகே, மறைந்த தம்பியின் பிறந்தநாளை முன்னிட்டுச் சமாதி மீது பட்டா கத்தியால் கேக் வெட்டிய அண்ணன் உள்ளிட்ட மூவரை போலீசார் கைது செய்தனர். சந்தவேலூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி அய்யப்பன், தனது நண்பர்களுடன் விபத்தில் இறந்த தம்பியின் சமாதியில் கத்தியுடன் கொண்டாடிய வீடியோ வைரலானது. பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக அய்யப்பன், நரேஷ் மற்றும் நவீன்குமார் ஆகியோர் கைது.

செங்கல்பட்டு, வெடால் கிராமத்தில் குடியிருப்பு பகுதிகளில் உலா வந்த வெறிநாய் ஒன்று தேவி(50) என்பவரின் காலை கடித்துவிட்டு தப்பியோடியது.இதைத் தொடர்ந்து ரத்தினம் (50), கண்ணப்பன்(55), முனியம்மாள் (60),சீதா 40) உள்ளிட்ட 8பேரை அந்த வெறிநாய் கடித்துள்ளது. மேலும் கட்டி வைக்கப்பட்டிருந்த மூன்று பசு கன்றுகளையும் கடித்துள்ளது. காயமடைந்தோர் இடைக்கழிநாடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

ஓசூர் கெலவரப்பள்ளி அணை அருகே வருகைப் பதிவேடு விவகாரம் தொடர்பாக அகதி ஒருவர் செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த போலீசாரும் தீயணைப்புத் துறையினரும் நீண்ட போராட்டத்திற்குப் பின் அவரைப் சமாதானப்படுத்தி பத்திரமாக மீட்டனர். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது.
Sorry, no posts matched your criteria.