Tamilnadu

News March 27, 2024

ராம்நாடு: ஓபிஎஸ்ஸுக்கு வந்த அடுத்த சிக்கல்

image

ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். இவரின் பெயர் ஒற்றுமையைப் பயன்படுத்தி நேற்று 4 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். மனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று பரமக்குடி தாலுகா கங்கைகொண்டான் மலையாண்டி மகன் பன்னீர்செல்வம் (75) என்பவர் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்தார். ஆக மொத்தம் ராமநாதபுரத்தில் ஓ.பன்னீர்செல்வம் பெயரில் மொத்தம் 6 பேர் களத்தில் உள்ளனர்.

News March 27, 2024

கோவை திமுக வேட்பாளர் வேட்பு மனு

image

கோவை மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரனும், பாஜக சார்பில் மாநில தலைவர் அண்ணாமலையும், திமுக சார்பில் முன்னாள் மேயர் கணபதி ராஜ்குமாரும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் இன்று திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் கலெக்டர் கிராந்தி குமார் பாடியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அப்போது அமைச்சர் டிஆர்பி ராஜா, எம்பி நடராஜன், மாநகர் மா.செயலாளர் கார்த்தி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்

News March 27, 2024

தேர்தல் பணி: ஆய்வுசெய்த பொது பார்வையாளர்

image

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் பொது-பார்வையாளர் பண்டாரி யாதவ் தேர்தல் கட்டுப்பாட்டு அறை மற்றும் ஊடக கண்காணிப்பு அறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு ஆகியோர் இருந்தனர்.

News March 27, 2024

கடலூரில் தேமுதிக வேட்பாளர் இன்று முதல் பிரச்சாரம் 

image

கடலூர் அதிமுக கூட்டணி கட்சி சார்பில் தேமுதிக வேட்பாளர் சிவக்கொழுந்து வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வேட்பு மனு தாக்கல் செய்தார். இன்று சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவில் தெருவில் இருந்து அவர் பிரச்சாரத்தை துவக்கினார். இதில் அதிமுக மாவட்ட செயலாளர் மாஜி அமைச்சருமான எம்.சி சம்பத் மாவட்ட அவைத் தலைவர் சேவல் குமார் மற்றும் ஏராளமான அதிமுக மற்றும் தேமுதிக கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

News March 27, 2024

தஞ்சாவூர்: புகார் செய்ய எண்கள் அறிவிப்பு

image

தஞ்சாவூரில் தேர்தல் நடத்தை விதிமீறல் குறித்த புகார்களுக்கு, பொதுப் பாா்வையாளரான கிகேட்டோ சேமவை 93639 70331 என்ற எண்ணிலும், தேர்தல் செலவினங்கள் தொடா்பாக செலவின பாா்வையாளரான ஜன்வி திவாரியை 93639 62884 என்ற எண்ணிலும், சட்டம் – ஒழுங்கு மற்றும் சட்டத்துக்கு புறம்பான விதிமீறல்களுக்கு காவல் பாா்வையாளரான சரணப்பாவை 93639 72586 என்ற எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News March 27, 2024

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் கருத்தரங்கம்

image

கடலூர் தேவனாம்பட்டினம் பெரியார் அரசு கலை கல்லூரியில் அரசியல் அறிவியல் துறை மன்றம் தொடக்க விழா மற்றும் தெற்காசியாவில் இமயமலை நதிநீர் மேலாண்மை என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இதற்கு கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக பேராசிரியர் புருஷோத்தமன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

News March 27, 2024

விருதுநகர் அருகே செல்பி பாயிண்ட் திறப்பு

image

அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் இன்று (27.3.24) 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி செல்பி பாயிண்ட் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வள்ளிக்கண்ணு இந்த செல்பி பாயிண்ட் திறந்து வைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். மேலும் எனது வாக்கு விற்பனைக்கு அல்ல என்ற துண்டு பிரசுரங்களையும் தேர்தல் அதிகாரிகள் பொதுமக்களுக்கு வழங்கினர்.

News March 27, 2024

வேலூர் அமைச்சரை வரவேற்ற மாவட்ட செயலாளர்

image

மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக நேற்றிரவு (மார்ச் 26) வேலூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பழைய பஸ் நிலையம் அருகே வந்த திமுக இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினை வேலூர் மத்திய மாவட்ட செயலாளரும் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினருமான ஏ.பி.நந்தகுமார் மாலை அணிவித்து வரவேற்றார். இதில் வேலூர் எம்பி வேட்பாளர் கதிர் ஆனந்த் உடன் இருந்தார்.

News March 27, 2024

புதுகை: தேர்தல் விழிப்புணர்வு 

image

இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் வளாகத்தில், பாராளுமன்ற பொதுத் தேர்தல் – 2024 தொடர்பாக, புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில், தேர்தல் விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்களை
மாற்றுத்திறனாளிகளுக்கு, மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா இன்று வழங்கினார்.

News March 27, 2024

நாமக்கல் ஆட்சியர் விழிப்புணர்வு நிகழ்ச்சி 

image

நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் உமா தலைமையில் இன்று(27.03.2024) ஏப்ரல் 19 பாராளுமன்றத் தேர்தலில் 100 ஓட்டுப்பதிவு செய்வதை வலியுறுத்தும் வகையில் பொதுப்பார்வையாளர்‌ செல்வி ஹர்ஜித் கவுர் இ.ஆ.ப தேர்தல் செலவினப்பார்வையாளர்‌ அர்ஜுன் பானர்ஜி ஆகியோர் முன்னிலையில் நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார்.

error: Content is protected !!