Tamilnadu

News March 27, 2024

காவலர்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கை

image

திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து போக்குவரத்து காவல்துறையினர் தங்களை தற்காத்துக் கொள்ளும் வகையில் தொப்பி, கண் கண்ணாடி போன்ற பொருட்களையும் வெயில் இருந்து தற்காத்துக் கொள்ள நீர் மோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் வழங்கினார்.

News March 27, 2024

குன்றத்தூர் அருகே நிவாரண பொருட்கள் வழங்கல்

image

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் கரசங்கால் கிராமத்தைச் சேர்ந்த செல்வி என்பவரது குடிசை வீடு நேற்று திடீரென தீப்பற்றி வீடு எரிந்து சாம்பலானது. இதையடுத்து இன்று மணிமங்கலம் காவல் ஆய்வாளர் அசோகன் பாதிப்படைந்த செல்வி வீட்டிற்கு நேரில் சென்று நிவாரண உதவியாக மளிகை பொருட்கள், ஆடைகள், சமையல் பாத்திரங்கள் வழங்கி ஆறுதல் கூறினார்.

News March 27, 2024

நாமக்கல்: ஒரே நாளில் 31 பேர் வேட்பு மனு தாக்கல்

image

மக்களவை 24 தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 20 ஆம் தேதி தொடங்கியது வேட்பு மனு தாக்கல் இன்றுடன் முடிவுற்றது நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் இது வரை 58 பேர் தங்களது வேட்பு மனுவை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மரு.ச.உமா அவர்களிடம் தாக்கல் செய்துள்ளனர் கடைசி நாளான இன்று ஓரே நாளில் மட்டும் 31 பேர் தங்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர் இதற்காக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

News March 27, 2024

திருப்பத்தூரில் பதட்டமான வாக்குச்சாவடி

image

மக்களவை தேர்தலையொட்டி வாணியம்பாடி அருகே பதற்றமான வாக்குச்சாவடிகள் கோணமேடு , கோவிந்தபுரம், முஸ்லிம்பூர் , தும்பேரி, அழிஞ்சி குளம், கவுக்கப்பாட்டு , பெத்தகல்லுபள்ளி , செட்டியப்பனூர், மதாஞ்சேரி , ஆகிய பகுதிகளில் உள்ள வாக்கு சாவடிகளை இன்று போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் ஆய்வு மேற்கொண்டார்.

News March 27, 2024

தேர்தல் செலவின பார்வையாளர்கள் நியமனம்

image

நீலகிரி மக்களவைத் தொகுதிக்கு இரண்டு தேர்தல் செலவின பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி ஊட்டி, கூடலூர் குன்னூர் சட்டமன்ற தொகுதிகளுக்கு கிரண், மேட்டுப்பாளையம், பவானிசாகர், அவிநாசி சட்டமன்றத் தொகுதிகளுக்கு சந்திப் குமார் மிஸ்ரா உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், தேர்தல் சம்பந்தமான புகார்கள் இருப்பின் 9489930709, 9489930710 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 27, 2024

மயிலாடுதுறையில் சிறப்பு கூட்டம்

image

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பாராளுமன்ற தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் வாக்குச்சாவடிகளில் எளிதாக வாக்களிக்க மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான ஏ.பி.மகாபாரதி தலைமையில் முன்னேற்பாடு கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது வருவாய் கோட்டாட்சியர் யுரேகா , அர்ச்சனா உட்பட பலர் பங்கேற்றனர்.

News March 27, 2024

திண்டுக்கல்லில் 26 பேர் வேட்புமனு தாக்கல்

image

2024 மக்களவை தேர்தலில் போட்டியிட விரும்புவோர் வேட்புமனு அளிக்க இன்றோடு முடிவடைந்தது. இந்நிலையில், திண்டுக்கல் தொகுதிக்கு 35 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளன. அதில் இதுவரை அனைத்து கட்சியினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என 26 வேட்பாளர்கள் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் பூங்கொடியிடம் மனு தாக்கல் செய்துள்ளனர்.

News March 27, 2024

கரூர்: 62 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்

image

கரூர் பாராளுமன்ற தொகுதியில் இதுவரை 62 வேட்பாளர்கள் 67 வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் நேற்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அதிமுக சார்பில் வேட்பாளர் தங்கவேல் 3 வேட்பு மனுக்களையும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கருப்பையா 2 வேட்பு மனுக்களையும் அதே நாளில் தாக்கல் செய்தனர். இன்று மட்டும் 39 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

News March 27, 2024

சர்ச்சையில் சிக்கிய டி.எம்.செல்வகணபதி

image

சேலம் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதிக்கு 2 இடங்களில் வாக்குரிமை உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2 இடங்களில் வாக்குரிமை இருப்பது உறுதிச் செய்யப்பட்டால் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவு 17,18 படி கிரிமினல் குற்றம் ஆகும். மேலும் அவரது வேட்பு மனுவும் நிராகரிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

News March 27, 2024

கிருஷ்ணகிரியில் தேர்தல் புறக்கணிப்பு

image

கிருஷ்ணகிரி ஒன்றியத்தை சேர்ந்த கம்மம் பள்ளி ஊராட்சி, பழையஊர் கிராமத்தில் சாலை வசதி கேட்டு அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் அதற்கு முறையான நடவடிக்கை எடுக்காததால் பழைய ஊர் கிராம வாக்காளர்கள் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் தேர்தலை புறக்கணிப்போம் என்றும்  ஊரில் ஆங்காங்கே போஸ்டர் ஒட்டி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

error: Content is protected !!