Tamilnadu

News March 27, 2024

தமாக மூத்த தலைவருடன் டிடிவி சந்திப்பு

image

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், தேனி மாவட்டம், கம்பம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஓ.ஆர் ராமச்சந்திரனை இன்று மரியாதை நிமித்தமாக  டிடிவி தினகரன்  நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். உடன் தேனி தெற்கு மாவட்ட தமாகா தலைவர் செல்வேந்திரன், கம்பம் நகரத் தலைவர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News March 27, 2024

கடலூர் மாவட்ட காவல்துறை முக்கிய அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில் தினமும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (27/03/2024) இரவு கடலூர் உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன், சிதம்பரம் காவல் ஆய்வாளர் சுஜாதா, விருத்தாச்சலம் காவல் ஆய்வாளர் சந்திரசேகர், நெய்வேலி காவல் ஆய்வாளர் சந்திரன் மற்றும் திட்டக்குடியில் உதவி ஆய்வாளர் சுபிக்ஷா ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 27, 2024

 தி.மு.கவேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

image

தஞ்சாவூர் தொகுதி நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி தி.மு.க வேட்பாளர் முரசொலி இன்று  தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான தீபக் ஜேக்கப் அவர்களிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இதில், எஸ்.எஸ் பழநி மாணிக்கம் எம்பி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் உடன் இருந்தனர்.

News March 27, 2024

திருவள்ளூர்: தேர்தல் பொது பார்வையாளர் நியமனம்

image

இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைக்கினங்க, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு பொது பார்வையாளராக அபுஇம்ரான் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், ஆட்சியர் அலுவலக சுற்றுலா மாளிகையில் அறை எண் 7-இல் தங்கி உள்ளார். பொதுமக்கள் இவரை 90037 60953 எண்ணிலோ நேரிலோ தங்கள் புகார்களை தெரிவிக்கலாம் என ஆட்சியர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.

News March 27, 2024

நெல்லை தொகுதியில் 49 மனுக்கள் தாக்கல்

image

நெல்லை பாராளுமன்ற தொகுதியில் கடைசி நாளான இன்று 26 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வேட்பு மனு தாக்கல் ஆரம்பம் முதல் கடைசி நாளான இன்று வரை மொத்தம் 49 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அரசியல் கட்சிகள் சுயேச்சை வேட்பாளர்கள் போட்டி வேட்பாளர்கள் மற்றும் டம்மி வேட்பாளர்கள் உட்பட 49 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் கார்த்திகேயன் (மார்ச் 27) இன்று தெரிவித்தார்.

News March 27, 2024

காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு எதிராக இருவர் போட்டி

image

நெல்லையில் காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு எதிராக கடைசி நேரத்தில் இருவர் இன்று (மார்ச் 27) வேட்பு மனு தாக்கல் செய்தனர். குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ராபர்ட் ப்ரூஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்பி ராமசுப்பு மற்றும் தேசிய நிர்வாகி வானமாமலை ஆகியோர் காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிராக மனு தாக்கல் செய்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

News March 27, 2024

பதற்றமான வாக்குச்சாவடிகளை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்

image

வருகிற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் திருவாரூர் நகராட்சிக்கு உட்பட்ட பதற்றமான வாக்குச்சாவடிகள் எவை என கண்டறிந்து அந்தந்த வாக்குச்சாவடி மையத்தினை இன்று திருவாரூர் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி சாரு ஸ்ரீ நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில் திருவாரூர் நகராட்சி துறை அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

News March 27, 2024

தேர்தல் தொடர்பான பணிகள் குறித்து ஆலோசனை

image

சிவகங்கை மாவட்டம், பாராளுமன்ற பொதுத்தேர்தல்-2024ஐ முன்னிட்டு, 31-சிவகங்கை பாராளுமன்றத் தொகுதிக்கு பொது தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள எஸ்.ஹரிஷ் இன்று (27.03.2024) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட தேர்தல் அலுவலர் /  ஆஷா அஜித் அவர்களுடன் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

News March 27, 2024

திருச்சியில் காவல்துறையினர் கொடி அணிவகுப்பு

image

வரும் நாடாளுமன்ற தேர்தல் 2024 முன்னிட்டு வாக்காளர்கள் திருச்சிக்கு வந்துள்ள மத்திய பாதுகாப்பு படையினர் மற்றும் திருச்சி மாவட்ட காவல்துறையினர் இணைந்து ஊர்க்காவல் படையினரின் வாத்திய குழு இசையுடன் இன்று கொடி அணி வகுப்பு நடைபெற்றது. திருச்சி சமயபுரம் ரெட்டியார் மஹால் அருகே நடந்த இந்த அணிவகுப்பை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

News March 27, 2024

வாக்குபதிவு மையத்தில் பாகம் எண் எழுதும் பணி

image

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தலை முன்னிட்டு மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியர் கற்பகம் வழிகாட்டுதலின் படி பல்வேறு முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குசாவடி மைய கட்டிடத்தில் வாக்கு பதிவு நாள் அன்று தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் மற்றும் வாக்காளர்கள் மையத்தை தெரிந்து கொள்ள சுவரில் சட்டமன்ற தொகுதி எண், பாகம் எண் எழுதும் பணி நடைபெற்றது‌.

error: Content is protected !!