Tamilnadu

News March 28, 2024

கிருஷ்ணகிரி: ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி

image

ஓசூர்:கெலமங்கலம் அடுத்த சின்னட்டியை சேர்ந்தவர் முருகேசன்(48). இவர் நேற்று முன்தினம் இரவு, கர்நாடகம், அத்திப்பள்ளிக்கு பைக்கில் சென்றார். அப்போது குந்துமாரனப்பள்ளி அருகே தரைமட்ட பாலம் கட்ட தோண்டப்பட்ட பள்ளத்தில் பைக்குடன் தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார். நேற்று காலை கெலமங்கலம் போலீசார் சடலத்தை மீட்டனர். அவரது சாவிற்கு காரணம், அலட்சியமான சாலை பணிதான் என உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

News March 28, 2024

தூத்துக்குடி: வங்கி அதிகாரி மீது தாக்குதல்

image

தூத்துக்குடி பாரதி நகரை சேர்ந்தவர் சிவகுமார். இவர் பிரபல தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார். சிவகுமார் சங்கராபுரத்தை சேர்ந்த பழனிகுமார் வீட்டிற்கு சென்று வங்கியில் பெற்ற கடனை திருப்பி செலுத்த வலியுறுத்தியுள்ளார். அப்போது, பழனி குமார், அவரது மகன் ஷியாம் ஆகியோர் சேர்ந்து இவரை கத்தியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News March 28, 2024

கடலூர்: செல்போன் வெடித்து விபத்து

image

கடலூர் அடுத்த வழிசோதனைபாளையத்தை சேர்ந்தவர் புஷ்பராஜ். இவர் நேற்று மாலை கடலூரில் உள்ள தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க அவரது தாய் மற்றும் பாட்டியுடன் பைக்கில் சென்றார். அப்போது புஷ்பராஜ் சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் திடீரென வெடித்து சிதறியது. இதனால், மூவரும் நிலைகுலைந்து பைக்குடன் கீழே விழுந்து படுகாயமடைந்தனர். இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீசார் விசாரணை நடத்தினர்.

News March 28, 2024

செங்கல்பட்டு: வேட்பாளருக்கு இப்படி ஒரு சின்னமா?

image

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் வேட்பாளராக சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஆறுமுகம் ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில்,  இன்று வேட்பாளர் விரும்பி கேட்ட சின்னமான டம்ளர் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

News March 28, 2024

தாளாளர் பதவியை ராஜினாமா செய்த எம்பி

image

திருநெல்வேலியில் ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் திருநெல்வேலி மாவட்டம் மட்டுமல்லாமல் அருகே உள்ள தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியின் தாளாளராக தற்போதைய திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர் ஞான திரவியம் பதவி வகித்து வந்தார். இந்நிலையில் அவர் இன்று (மார்ச் 28) தாளாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News March 28, 2024

அக்காவை கொன்ற தம்பிக்கு ஆயுள் தண்டனை

image

ஒகேனக்கல்லை சேர்ந்த ராஜம்மாள் 56, இவரது தம்பி காமராஜ் 54. இருவருக்கும் சொத்து தகராறு இருந்த நிலையில் 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் அவர் ராஜம்மாளை கத்தியால் குத்தியதில் உயிரிழந்தார். இதுகுறித்த வழக்கு தர்மபுரி விரைவு மகளிர் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அதில் காமராஜ் மீதான குற்றச்சாட்டு உறுதியானதை அடுத்து காமராஜுக்கு ஆயுள் தண்டனை & 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி சுரேஷ் தீர்ப்பளித்தார்.

News March 28, 2024

பல மாதங்களாக தேங்கி கிடக்கும் வாகனங்கள்

image

நந்திவரம்- – கூடுவாஞ்சேரி நகராட்சி, ஜிஎஸ்டி சாலையில் உள்ள கூடுவாஞ்சேரி காவல் நிலைய வளாகத்தில், அனைத்து மகளிர் காவல் நிலையம்,போக்குவரத்து, மதுவிலக்கு, உதவிகமிஷனர் அலுவலகம் உள்ளிட்டவை இயங்குகின்றன. இந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், விபத்தில் சிக்கிய வாகனங்கள், வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், பல மாதங்களாக தேங்கிக் கிடக்கின்றன.

News March 28, 2024

அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

image

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சிவசாமி வேலுமணி தீவிர வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இன்று அவர் அதிமுக வர்த்தக அணி செயலாளர் சி த செல்லப்பாண்டியன் உடன் முத்துநகர் கடற்கரை பகுதியில் நடை பயிற்சி செய்பவரிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

News March 28, 2024

கோவை: 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சார்பில் மனு 

image

கோவை மாவட்ட தலைமை தேர்தல் அலுவலர் கிராந்தி குமாரிடம் கோவை மாவட்ட 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்க செயலாளர் க.பாலாஜி இன்று மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், கோவையில் 108 அவசர ஊர்திகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஜனநாயக கடமையாற்ற முடிவதில்லை. எனவே தபால் ஓட்டுரிமையை எங்களுக்கும் வழங்கிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News March 28, 2024

செங்கல்பட்டு: விதிகளை மீறும் அரசியல் கட்சியினர்

image

செங்கல்பட்டு புறநகர் பகுதிகளில் செல்லும் ஏராளமான கட்சியினரின் கார்களில் , கட்சிக் கொடிகளை அகற்றாமல் கட்சி நிர்வாகிகள் சுற்றி வருகின்றனர்.
அதேபோல், விலைஉ யர்ந்த கார்களின் முன்புறம் , துருப்பிடிக்காத இரும்பாலான முன் தடுப்பு கம்பி பொருத்தக்கூடாது என, நீதிமன்றம் மூன்று ஆண்டுகளுக்கு முன் உத்தரவிட்டும், கட்சியினர் அதை பின்பற்றுவதில்லை என புகார் எழுந்துள்ளது.

error: Content is protected !!