Tamilnadu

News March 28, 2024

பழனி கிரிவல பாதை வழக்கு: மாற்றம்

image

திண்டுக்கல் மாவட்டம் பழனி கிரிவலப் பாதை பொதுநல வழக்கை வருகின்ற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் சுரேஷ்குமார் அமர்வு விசாரிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதில் மதுரை நீதிமன்ற பொதுநல வழக்கு விசாரணையில் ஆர் சுரேஷ் குமார் மற்றும் அருள் முருகன் நீதிபதிகள் அடங்கிய அமர்வு இனி கிரிவலப் பாதை வழக்கை விசாரிக்கும். மேலும் கிருஷ்ணகுமார் நீதிபதி சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 28, 2024

திருப்பத்தூர்: முக்கிய பிரபலம் விலகல்

image

திருப்பத்தூர் மாவட்ட இந்திய தேசிய லீக் மாவட்ட செயலாளர் M. R. அப்ரோஸ் இன்று அக்கட்சியில் இருந்து அதிமுக முன்னாள் அமைச்சர் K C. வீரமணி தலைமையில் அதிமுகவில் இணைந்தார். இதனையடுத்து அவருக்கு சால்வை அணிவித்து கே.சி.வீரமணி வரவேற்றார். இந்திய தேசிய லீக் கட்சியின் மாவட்ட செயலாளர் விலகிய சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News March 28, 2024

சிவகங்கை: 7 மனுக்கள் நிராகரிப்பு

image

சிவகங்கையில் பாஜக, காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் இன்று ஏற்கப்பட்டன. மொத்தமாக 28 வேட்புமனுக்கள் பெறப்பட்ட நிலையில், வேட்புமனுக்கள் மீதான பரீசிலனை இன்று நடந்தது. இதனிடையே, 7 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன என மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

News March 28, 2024

கன்னியாகுமரி அருகே இளம்பெண் தற்கொலை

image

மார்த்தாண்டம் அடுத்த பழுக்கல் பகுதியை சேர்ந்தவர் அபிலாஷ் (40) எலக்ட்ரீசியன், இவரது மனைவி சித்ரா தேவி (36) வீட்டில் தூக்கில் சடலமாக கிடந்தார். இதுகுறித்து கணவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சடலத்தை கைபற்றி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி விசாரித்து வருகின்றனர். 

News March 28, 2024

புதுவையில் 9 வேட்புமனுக்கள் நிராகரிப்பு

image

புதுச்சேரியில் பாஜக, காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட 6 அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் இன்று ஏற்கப்பட்டது. மேலும், வரும் 30 ஆம் தேதி வேட்பாளர்களுக்கான சின்னங்கள் ஒதுக்கப்பட்டு இறுதிப்பட்டியல் வெளியிடப்படும் எனவும், 9 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டது எனவும் புதுச்சேரி தேர்தல் நடத்தும் அதிகாரி குலோத்துங்கன் தெரிவித்துள்ளார்.

News March 28, 2024

திருவள்ளூர்: வேட்பு மனு நிராகரிப்பு

image

திருவள்ளூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வைத்திருந்த கரும்பு விவசாயி சின்னத்தை பெற்ற பாரதிய பிரஜா ஐக்கிய கட்சி வேட்பாளர் கந்தனின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. அவர் தாக்கல் செய்திருந்த மனுவில் சுயேட்சை என்றும் சில இடங்களில் பாரதிய பிரஜா ஐக்கிய கட்சி என்றும் குறிப்பிட்டிருந்ததாக, நாதக வேட்பாளர் ஜெகதீஷ் சந்தர் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

News March 28, 2024

திருச்சி அருகே கோர விபத்து

image

தொட்டியம் வட்டம் காட்டுப்புத்தூர் தொட்டியம் சாலையில் சுருட்ட பாளையம் பேருந்து நிலையம் அருகே இன்று டூவீலர், கார் மோதி விபத்துக்குள்ளானது. தகவலறிந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் சம்பவம் குறித்து காட்டுப்புத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News March 28, 2024

மதுரை: பட்டப்பகலில் ரைஸ் மில் அதிபர் கொடூர கொலை

image

மதுரை சிந்தாமணி சாலை ராஜம்மா நகரில் விஜயலட்சுமி அரிசி ஆலையை சௌந்தர குமார் (50) என்பவர் நடத்தி வருகிறார். இன்று அரிசி ஆலையில் இருந்த போது மர்ம கும்பல் சௌந்தர குமாரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியதாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் ஆலைக்கு அருகே கருவேலமரம் வெட்டுவதில் ஏற்பட்ட தகராறில் கொலை நடந்திருக்கலாம் எனத் தெரிவித்துள்ளனர்.

News March 28, 2024

தஞ்சாவூர் அருகே மோதல்: 4 பேர் கைது

image

பூதலூர் அருகே குணமங்கலத்தை சேர்ந்தவர் சுதீஷ் (25). இவருக்கும் அதே தெருவைச் சேர்ந்த கிரி என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் கிரி, ஜீவா, குணால், குமார் ஆகியோர் சுதீஷ் வீட்டிற்கு சென்று, அவரிடம் தகராறு செய்து சரமாரியா தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த சுதீஷ் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். குணாலை போலீசார் கைது செய்தனர்.

News March 28, 2024

திமுக வெற்றி பெறும் நடிகர் மன்சூர் அலிகான்

image

மக்களவைத் தேர்தலில் வேலூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் மனுக்கள் பரிசீலனை இன்று (மார்ச் 28) கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், நடிகர் மன்சூர் அலிகான் இருவரும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டனர். அப்போது மன்சூர் அலிகான் “தமிழகத்தில் 38 தொகுதிகளிலும் (திமுக) நீங்கள் தான் வெற்றி பெறப் போகிறீர்கள் ஆனால் வேலூரில் நான் வெற்றி பெறுவேன்” என கூறி வாழ்த்தினார்.

error: Content is protected !!