Tamilnadu

News January 7, 2026

தஞ்சை: பொங்கல் பரிசு வரலையா..? உடனே CALL!

image

தஞ்சை மக்களே, பொங்கல் பரிசுத் தொகுப்புடன் சேர்த்து ரூ.3000 பணத்தை, வரும் ஜன.13-ம் தேதிக்குள் அனைவருக்கும் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இதனை பெறுவதில் ஏதாவது சிக்கல் ஏற்பட்டாலோ, ஸ்டாக் இல்லை என அலுவலர்கள் பதிலளித்தாலோ அல்லது டோக்கன்கள் வீடுகளுக்கு சென்று வழங்கப்படாமல் இருந்தால், உடனே 1967 (அ) 1800-425-5901 என்ற எண்ணை தொடர்பு கொண்டு நீங்கள் புகார் அளிக்கலாம். SHARE பண்ணுங்க!

News January 7, 2026

சிவகங்கை மாவட்டத்துக்கு மஞ்சள் அலர்ட்

image

சிவகங்கை மாவட்டத்திற்கு, ஜன.9-ஆம் தேதி ‘மஞ்சள் ’ எச்சரிக்கை இந்திய பெருங்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு வலுப்பெற்றதால், சிவகங்கை மாவட்டத்தில் கனமழையும், மணிக்கு 60 கி. மீ. காற்று வீச வாய்புள்ளதால் சிவகங்கை மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட் அறிவித்துள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

News January 7, 2026

மதுரை: காணாமல் போனவர் கிணற்றில் சடலமாக மீட்பு..

image

பேரையூர் அருகே கொலவீரன்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம் மனைவி கற்பகவல்லி (64). இவரை காணவில்லை என கல்லுப்பட்டி போலீசில் இரு தினங்களுக்கு முன்பு இவரது மகன் முத்து புகார் அளித்துள்ளார். இந்நிலையில் வில்லூர் கண்மாய் எதிரே உள்ள இந்திராணி என்பவருக்கு சொந்தமான தோட்டத்து கிணற்றில் கற்பகவல்லி பிணமாக நேற்று முன்தினம் ( ஜன.5 ) மிதந்துள்ளார். உடலை மீட்டு பேரையூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News January 7, 2026

தென்காசியில் பைக்கில் சென்ற வாலிபர் பலி

image

தென்காசி, சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த மணிகண்டன்(24) என்பவர் கடந்த மூன்று நாளுக்கு முன்பு பைக்கில் மது போதையில் திருச்செந்தூருக்கு சென்று கொண்டிருந்த போது திருநெல்வேலி சாலை பனவடலிசத்திரத்தில் எதிர்பார விதமாக தவறி விழுந்து படுகாயம் ஏற்பட்டது. இவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுக்குறித்து பனவடலிசத்திரம் போலீசார் விசாரணை.

News January 7, 2026

மதுார் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை (ஜன.08) பல்வேறு இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 09:00 மணி முதல் மதியம் 03:00 மணி வரை கீழ் கண்ட இடங்களில் மின்தடை செய்யப்படுகிறது. மதுார், அருங்குன்றம், சித்தாலபாக்கம், வடக்குப்பட்டு, எழிச்சூர், பாலுார், மேலச்சேரி, உள்ளாவூர், பழையசீவரம், வாலாஜாபாத், கிதிரிபேட்டை, புத்தகரம், கீழ்ஒட்டிவாக்கம், வெண்குடி.

News January 7, 2026

வேதனையின் உச்சத்தில் வேடசந்துார் விவசாயிகள்!

image

வேடசந்துார்: நரசிங்கபுரம் அருகே கட்டப்பட்டுள்ள தடுப்பணையால், ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கம் மற்றும் குடகனாறு அணைக்கு வர வேண்டிய தண்ணீர் திசைமாறிச் செல்கிறது. இதனால் கடந்த 10 ஆண்டுகளாகப் பாதிப்படைந்துள்ள விவசாயிகள், நீரை மீட்டெடுக்கப் போராடி வருகின்றனர். இது தொடர்பாக 2020-ல் அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவின் அறிக்கை இன்னும் வெளியாகாததால் வேதனை. தமிழக முதல்வர் இதில் தலையிட்டுத் தீர்வு காண வேண்டும்

News January 7, 2026

சேலம் அம்மாபேட்டையில் துடிதுடித்து பலி!

image

சேலம்: அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்த இளநீர் வியாபாரி சின்னபையன் (56), கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தனது வீட்டின் அருகே மின்கம்பியை ஒட்டி இருந்த இலைகளைப் பறிக்க முயன்றபோது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். பலத்த காயமடைந்த அவர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து அம்மாபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 7, 2026

அரியலூர்: 3 நாட்களுக்கு சிறப்பு சேவை அறிவிப்பு

image

பாஸ்போர்ட் சம்மந்தப்பட்ட சேவைகள் மக்களுக்கு எளிதாக கிடைக்கும் வகையில் இந்திய வெளியுறவு துறை பி.எஸ்.கே. மொபைல் வேன் என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதன்படி, அரியலூர் மாவட்ட பொதுமக்களின் தேவைக்காக இந்த வாகனம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், ஜன.8 (நாளை) முதல் ஜன.10-ம் தேதி வரை 3 நாட்களுக்கு நடைபெற உள்ளது. இதனை மக்கள் பயன்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

News January 7, 2026

கிளம்பாக்கத்திலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்க

image

பொங்கல் திருநாளை முன்னிட்டு, வரும் ஜன.9 முதல் 14-ந்தேதி வரை கிளாம்பாக்கத்தில் இருந்து 22,797 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. இதேபோல் பொங்கல் முடிந்து சென்னை திரும்பும் பயணிகளுக்காக வரும் ஜன.16 முதல்19-ந்தேதி வரை 15,188 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். இதற்கான முன்பதிவு www.tnstc.in என்ற இணைய தளம் (ம) 9444018898 என்ற வாட்ஸாப் எண் மூலம் பெறலாம்.

News January 7, 2026

வாங்கல் அருகே மர்மமான முறையில் கிடந்த சடலம்!

image

வாங்கல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 16 கால் மண்டபம் அருகே, நேற்று காலை சுமார் 10 மணியளவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வாங்கல் போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர் யார்? மரணத்திற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!