Tamilnadu

News January 8, 2026

சிவகங்கை: வாட்ஸ்அப் மூலம் 70 ஆயிரம் ரூபாய் மோசடி

image

இளையான்குடி அருகே பிராமணக்குறிச்சி பகுதியை சேர்ந்த 19 வயது இளைஞரின் வாட்ஸ் ஆப் எண்ணை தொடர்பு கொண்டு பேசிய ஒருவர் அவருக்கு பரிசு பொருட்கள் அனுப்புவதாக கூறி ரூ.70 ஆயிரம் பெற்றுள்ளார். பணத்தை பெற்ற அந்த நபர் பரிசு பொருட்களை அனுப்பவில்லை என கூறப்படுகிறது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த இளைஞர் சிவகங்கை சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளித்தார். சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News January 8, 2026

கோயில் இடிப்பு: திண்டுக்கல்லில் வெடித்த போராட்டம்!

image

திருப்பூர் பெருமாநல்லூர் பகுதியில் முருகன் கோயில் இடிக்கப்பட்ட சம்பவம் மற்றும் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்ரமணியம் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்ததாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக, பழனி ஆயக்குடி சந்தைப்பேட்டை அருகே இந்து முன்னணி சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

News January 8, 2026

ராமநாதபுரத்திற்கு கனமழை… மஞ்சள் எச்சரிக்கை.!

image

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு நாளை (ஜன.09) சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

News January 8, 2026

ராசிபுரத்தில் பீகார் வாலிபர் சடலமாக மீட்பு!

image

ராசிபுரம் அருகே போதமலையில் புதிய வனப்பாதை சாலை பணியில் ஈடுபட்டு வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பிரகாஷ் குமார் (20) வேப்ப மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கடந்த ஒரு மாதமாக சாலை பணியில் பணியாற்றி வந்த அவர், காதல் விவகாரத்தில் மனவேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் போதமலைச் சாலையில் உள்ள வேப்பமரத்தடியில் கயிற்றால் தூக்கிட்டவாறு சடலமாக மீட்பு. வெண்ணந்தூர் போலீஸார் விசாரணை.

கள்ளக்குறிச்சியில் இன்று முதல் பரிசு பொருள் வழங்கல்!

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் இன்று முதல் பொங்கல் பரிசு 4.45.269 தகுதி பெற்ற அரிசி அட்டைதாரர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கப்படும் என கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் அறிவித்துள்ளார். கைவிரல் ரேகை பயோமெட்ரிக் முறைப்படி சரிபார்த்து , முதியோர்கள் மாற்றுத்திறனாளிகளை வரிசையில் நிற்க வைக்காமல் வழங்குமாறு கூறியுள்ளார்.

News January 8, 2026

வேலூர்: மலிவு விலையில் Sleeper Ticket!

image

வேலூர் மாவட்ட மக்களே! வரும் பொங்கல் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு செல்ல, உறவினர்களை பார்க்கச் செல்ல டிக்கேட் போடலையா? கவலை வேண்டாம்! ஏஜெண்ட்களிடம் அதீத தொகை கொடுத்தும் பயணிக்க வேண்டாம்! உடனடியாக இங்கே கிளிக் செய்து, நீங்கள் செல்லும் ஊருக்கு மிக மலிவு விலையில் AC Sleeper பேருந்தில் டிக்கெட் எடுக்கலாம். அல்லது 9444018898 என்ற எண்ணிற்கு வாட்ஸ் ஆப்பில் ‘hi’ அனுப்பவும். இதை உடனே SHARE!

News January 8, 2026

குமரி: மூதாட்டியிடம் 5 பவுன் செயின் அபேஸ்!

image

வேங்கோடு குஞ்சாக்கோடு பகுதியை சேர்ந்த தங்கப்பன் மனைவி ஞான செல்வம். இவர் நேற்று முன் தினம் அப்பகுதியில் உள்ள வாய்க்காலில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் ஞான செல்வத்தின் கழுத்தில் இருந்த ஐந்து பவுன் நகையை பறித்து கொண்டு ஓடினார். இச்சம்பவம் குறித்து ஞான செல்வம் அளித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!