Tamilnadu

News April 13, 2024

புதுவை: வெளிப்புற சிகிச்சை பிரிவு இயங்காது

image

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, புதுச்சேரியில் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல்.19 ஆம் தேதி அன்று நடைபெறுகிறது. அன்று அரசு விடுமுறை தினம் என்பதால் ஜிப்மர் மருத்துவமனையின் வெளிப்புற சிகிச்சை பிரிவு இயங்காது. இந்த தேதியில் வெளிப்புற சிகிச்சை பெற வருவதை தவிர்க்க வேண்டும். அவசர சிகிச்சை பிரிவுகள் வழக்கம் போல் இயங்கும் என்றும் புதுவை ஜிப்மர் நிர்வாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 13, 2024

மதுரை மழைப்பொழிவு விவரம்

image

மதுரை மாவட்டத்திற்கான நேற்றைய (ஏப்.12) மழைப்பொழிவு விவரங்களை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. பேரையூரில் 4 செ.மீட்டரும், புலிப்பட்டியில் 3 செ.மீட்டரும், மேலூர், மேட்டுப்பட்டி, பெரியபட்டி ஆகிய பகுதியில் 2 செ.மீட்டரும், தல்லாகுளம், கல்லந்திரி, சித்தம்பட்டி, மதுரை விமான நிலையம், விரகனூர் அணை ஆகிய பகுதிகளில் 1 செ.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

News April 13, 2024

சென்னையில் போலீசார் வாகனம் மோதி பலி

image

திருவொற்றியூர் அங்காளம்மன் கோயில் பீச் ரோட்டில் உள்ள போலீஸ் பூத் அருகே போக்குவரத்து போலீசாரின் ரெக்கவரி வாகனத்தை தர்மராஜ் என்ற காவலர் பின்பகுதியில் இயக்கும்போது பின்னால் படுத்திருந்த மஞ்சுளா (38) என்ற பெண்மணி மீது தலையில் ஏறியதால்  சம்பவ இடத்திலேயே பலியானர். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

News April 13, 2024

தஞ்சாவூர் மழைப்பொழிவு விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்திற்கான நேற்றைய (ஏப்.12) மழைப்பொழிவு விவரங்களை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. ஈச்சன்விடுதியில் 5 செ.மீட்டரும், வெட்டிகாடில் 3 செ.மீட்டரும், குறுங்குளத்தில் 2 செ.மீட்டரும், மற்றும் அய்யம்பேட்டை, அதிராமப்பட்டினம் ஆகிய பகுதிகளில் 1 செ. மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

News April 13, 2024

ராம்நாடு: அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் உஷ்ணம் அதிகமாக இருந்தது. இதை தொடர்ந்து நேற்று ராமநாதபுரத்தில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது. இந்நிலையில் தமிழகத்தில் ராமநாதபுரம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு இன்று மாலை 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News April 13, 2024

தர்மபுரி கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

தருமபுரி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட தேர்தல் பணியில் ஈடுபடும் பிற பாராளுமன்ற தொகுதி வாக்காளர் பட்டியலில் பதிவுள்ள அலுவலர்கள் தபால் வாக்களிக்க ஏதுவாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக முதல் தளத்தில் சிறப்பு வாக்குப்பதிவு மையம் வசதி உள்ளது.
இன்று பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை தேர்தல் பணியில் ஈடுபடும் காவல்துறையினர், அலுவலர்கள் தபால் வாக்குகள் செலுத்தலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

News April 13, 2024

ஆட்டுக்குட்டியுடன் வாக்கு சேகரித்த பாஜகவினர்

image

கோவை நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவு திரட்டும் வகையில் கோவை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்லடம் சட்டமன்ற தொகுதி வீரபாண்டி பகுதியில் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பாளர்கள் இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது ஆடு, மாடு, பால் கேன்களுடன் சென்று பொது மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

News April 13, 2024

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அழைப்பு

image

அம்பேத்கர் பிறந்த நாள் விழா நாளை நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே புல்லந்தை கிராமத்தில் அமைந்துள்ள அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நாளை காலை (ஏப்.14) மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார். இந்த நிகழ்வில் நிர்வாகிகளும், தொண்டர்களும் தவறாது கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

News April 13, 2024

திருவள்ளூர்: குவிக்கப்பட்ட துணை ராணுவத்தினர்

image

மக்களவைத் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க மத்திய பாதுகாப்பு படை போலீசார், துணை ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
அதன்படி செங்குன்றம் காவல் மாவட்டத்தின் சார்பில் ஆவடி காவல் ஆணையர் சங்கர் உத்திரவின் பேரில் ஆய்வாளர் காளிராஜ் தலைமையில் மீஞ்சூர் அரியன் வாயல், பஜார் வீதியில் அணிவகுத்து சென்றனர்.

News April 13, 2024

கிருஷ்ணகிரி ஆட்சியர் விழிப்புணர்வு

image

கிருஷ்ணகிரி மாவட்டம் குள்ளம்பட்டியில் 100% வாக்கு செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் சரயு அங்குள்ள வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தினார். மேலும் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு வாக்களிப்பதின் அவசியம் குறித்த துண்டு பிரசுரங்களை சுவர்களில் ஒட்டி அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

error: Content is protected !!