India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நடப்பாண்டில் கோடைகாலத்தில் வழக்கத்தை விட அதிக வெப்பம் பதிவாகும் சூழல் உள்ளது. இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திண்டுக்கல், குஜிலியம்பாறை, நிலக்கோட்டை, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் மிதமானது முதல் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் ராமநாதபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நடப்பாண்டில் கோடைகாலத்தில் வழக்கத்தை விட அதிக வெப்பம் பதிவாகும் சூழல் உள்ளது. இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருப்பத்தூர், வாணியம்பாடி, நாட்றம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் மிதமானது முதல் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
நடப்பாண்டில் கோடைகாலத்தில் வழக்கத்தை விட அதிக வெப்பம் பதிவாகும் சூழல் உள்ளது. இந்நிலையில், தேனி மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆண்டிபட்டி, தேனி, தேவாரம் உள்ளிட்ட பகுதிகளில் மிதமானது முதல் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் மதுரை மாவட்டத்தில் வாக்குப்பதிவு நடைபெறும் மையங்களில் வயது மூத்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தன்னார்வலர்கள் மூலம் சக்கர நாற்காலியில் அழைத்து சென்று வாக்களித்தல் மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் இன்று ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநகராட்சி ஆணையாளர் தினேஷ் குமார் உள்ளிட்டோர் பங்கேற்று ஆலோசனை நடத்தினர்.
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டரங்க வளாகத்தில், 100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி அமைக்கப்பட்டுள்ள செல்பி பாயிண்ட் மையத்தில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு இ.ஆ.ப., மற்றும் கூடுதல் ஆட்சியர் வந்தனா கர்க்
ஆகியோர் இன்று புகைப்படம் எடுத்துகொண்டனர்.
அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் வழக்கறிஞர் கே. பாலு அரக்கோணம் அடுத்த வட மாம்பாக்கத்தில் இன்று தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். பாலு பேசுகையில் தமிழகத்தில் உள்ள டாஸ்மார்க் கடைகள் மூட நடவடிக்கை எடுப்பேன் என்றார். பாமக மாவட்ட செயலாளர் துணை செயலாளர் ராமமூர்த்தி, துணை சேர்மன் தீனதயாளன் பாஜக மாவட்ட தலைவர் விஜயன், அமமுக ஒன்றிய செயலாளர் மணிவண்ணன் கலந்துகொண்டனர்.
தஞ்சாவூர் மேலவீதியில் புகழ்பெற்ற மூலை அனுமார் கோவில் அமைந்துள்ளது. இங்கு நேற்று 1ம்தேதி திங்கட்கிழமை இரவு பங்குனி மாத மூல நட்சத்திரத்தை முன்னிட்டு மூலை அனுமாருக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து கோயில் உட்பிரகாரத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. பக்தர்கள் பிரதி மூல நட்சத்திரம் மற்றும் அமாவாசை மூலை அனுமாரை தரிசனம் செய்தனர்.
வந்தவாசி தாலுகா தையூர் கிராமத்தைச் சேர்ந்த நந்தகுமார். இவர் வந்தவாசியில் உள்ள வழக்கறிஞரிடம் குமாஸ்தாவாக பணிபுரிந்து வந்தார். நந்தகுமாருக்கும் அவரது சித்தப்பா ஜெயேந்திரன் என்பவருக்கும் சொத்து பிரச்னை இருந்து வந்தது. இந்நிலையில், ஜெயேந்திரன் மற்றும் அவரது மகன் சதீஷ் கண்ணன் ஆகிய இருவரும் நந்தகுமாரை ஆசிட் ஊத்தி கொலை செய்த வழக்கில் ஆரணி நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளில் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து இன்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் சார்பில் தென்காசி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ஜான்பாண்டியனை ஆதரித்து, ஸ்ரீவில்லி பகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதில் கூட்டணி கட்சி மாவட்ட செயலாளர்கள் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.