Tamilnadu

News March 25, 2024

நாம் தமிழர் கட்சியினர் வேட்புமனு தாக்கல்

image

இன்று கரூரில் நம் தமிழர் கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்களவைத் தேர்தலுக்காக வேட்பு மனுவை ஆட்சியர் தங்கவேலிடம் வேட்பாளர் கருப்பையா வழங்கினார். இதில், மேற்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் நன்மாறன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனம் 25க்கும் மேற்பட்ட கார்களில் ஊர்வலமாக வந்து மனு தாக்கல் செய்தனர்.

News March 25, 2024

குத்தாலம் அருகே தீவிர வாகன சோதனை

image

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே சேத்திரப்பாலபுரத்தில் இன்று மயிலாடுதுறை மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி ஏ.பி.மகாபாரதி உத்தரவின் பெயரில் தீவிர வாகன சோதனை நடைபெற்றது. இதில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி முத்து தலைமையில் முதல் நிலை காவலர்கள் ஜெயசெல்வம் , சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அப்பகுதியில் வந்த வாகனங்களை நிறுத்தி பணம் பரிசுப் பொருட்கள் உள்ளதா என தீவிர சோதனை செய்தனர்.

News March 25, 2024

தேனி: நிர்வாகிகளை சந்தித்த வேட்பாளர்

image

தேனி மக்களவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் நாராயணசாமி இன்று மரியாதை நிமித்தமாக அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் தேனி மாவட்ட செயலாளர் எம்.பி.எஸ் முருகனை கட்சி அலுவலகத்தில் நேரில் சந்தித்து பேசினார்.  இந்நிகழ்வின் போது, அதிமுக (கிழக்கு) மாவட்ட கழக செயலாளர் முருக்கோடை இராமர், தேனி நகர செயலாளர் வழக்கறிஞர் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News March 25, 2024

நாகை: என் வாக்கு விற்பனைக்கு அல்ல

image

நாகை மாவட்டத்தில் 100 % வாக்களிப்பதன் அவசியத்தை உணர்த்தும் வகையிலும் மற்றும் நேர்மையான முறையில் வாக்கு செலுத்துதலை முன்னெடுத்தும் ” என் வாக்கு விற்பனைக்கு அல்ல” என்ற தலைப்பில் கையெழுத்து இயக்கம் மற்றும் விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சி நடைபெற்றது. 100 மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர்.

News March 25, 2024

கிருஷ்ணகிரியில் அதிமுகவினர் வேட்பு மனு தாக்கல்

image

கிருஷ்ணகிரி மாவட்ட அதிமுக சார்பாக வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஜே பி பிரகாஷ் இன்று (மார்ச்.25) அதிமுக துணை பொதுச் செயலாளர் கே பி முனுசாமி  முன்னிலையில் மாவட்ட ஆட்சியரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். நிகழ்ச்சியில் கூட்டணி கட்சியான தேமுதிகவினர் மற்றும் கழக முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News March 25, 2024

செங்கல்பட்டு: ஆட்சியர் வெளியிட்ட குறுந்தகடு

image

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகிற நாடாளுமன்றத் தேர்தல் குறித்து பொதுமக்கள் 100% வாக்களிக்க வேண்டும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேர்தலுக்கான விழிப்புணர்வு பாடலுக்கான குறுந்தகட்டை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண் ராஜ் இன்று பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட்டார்.

News March 25, 2024

வேட்புமனு தாக்கல் செய்த பாஜக வேட்பாளர்

image

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. அதையொட்டி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மத்திய சென்னை பாராளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் வினோஜ் பி. செல்வம் இன்று பெருநகர சென்னை மாநகராட்சி மத்திய வட்டார துணை ஆணையரிடம் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

News March 25, 2024

வேட்புமனு தாக்கல் செய்த அதிமுக வேட்பாளர்

image

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ளது. அதையொட்டி தென் சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜெயவர்தனை பெருநகர சென்னை மாநகராட்சி தெற்கு வட்டார துணை ஆணையர் அலுவலகத்தில் இன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா மற்றும் அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

News March 25, 2024

வாக்காளர் விழிப்புணர்வு தூதுவர்களுக்கு நியமன ஆணை

image

தென்காசி மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவு மற்றும் நேர்மையாக வாக்களித்தல் ஆகியவற்றை வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்த இன்று
கல்லூரி மாணவிகள் சுரண்டை காமராஜர் கல்லூரி அபிதா பெல்சியா, ஆலங்குளம் அரசு கல்லூரி சன்மதி, கடையநல்லூர் அரசு கல்லூரி பேச்சியம்மாள் ஆகியோருக்கு விழிப்புணர்வு தூதுவர்களுக்கான ஆணையை கலெக்டர் கமல் கிஷோர் வழங்கினார்.

News March 25, 2024

1950 -ஐ தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்

image

18 ஆவது நாடாளுமன்ற பொது தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது. இந்நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மூன்று மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் சம்பந்தப்பட்ட அனைத்து புகார்கள், சந்தேகங்கள் மற்றும் உதவிகளுக்கு பொதுமக்கள் 1950 வை தொடர்பு கொள்ளலாம் என மாநகராட்சி சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும்,
மாநகராட்சி உதவி எண் 1913 யையும் தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!