Tamilnadu

News January 9, 2026

திண்டுக்கல்: சிலிண்டர் மானியம் – ஒரே ஒரு SMS போதும்!

image

உங்களுக்கு கேஸ் சிலிண்டர் மானியம் வருகிறதா? என்பதை SMS அனுப்பி தெரிந்து கொள்ளலாம். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கும் அனுப்பி தெரிந்து கொள்ளலாம். மேலும், UMANG என்ற App மூலமும் தெரிந்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்.

News January 9, 2026

கடலூர்: கடலுக்குள் செல்ல தடை!

image

தென் கிழக்கு வங்கக் கடல் மற்றும் கிழக்கு பூமத்திய ரேகை இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கடலூா் மாவட்ட மீனவா்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று மாவட்ட மீன் வளம் மற்றும் மீனவா் நலத் துறை உதவி இயக்குநா் தெரிவித்துள்ளார்.

News January 9, 2026

சேலம்: சிலிண்டர் மானியம் – ஒரே ஒரு SMS போதும்!

image

உங்களுக்கு கேஸ் சிலிண்டர் மானியம் வருகிறதா? என்பதை SMS அனுப்பி தெரிந்து கொள்ளலாம். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கும் அனுப்பி தெரிந்து கொள்ளலாம். மேலும், UMANG என்ற App மூலமும் தெரிந்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்.

News January 9, 2026

குளித்தலை அருகே பயங்கர விபத்து!

image

கரூர் மாவட்டம் கோட்டமேட்டைச் சேர்ந்த பிரவீன் குமார் (21), திண்டுக்கல் ஓதுவார் பள்ளியில் பயிற்றுனராகப் பணியாற்றி வந்தார். இன்று இவர் தனது பைக்கில் குளித்தலை – மணப்பாறை சாலையில் கோட்டமேடு யூனியன் அலுவலகம் அருகே சென்றபோது, எதிரே ஞானவேல் என்பவர் ஓட்டி வந்த பைக்குடன் நேருக்கு நேர் மோதியது.இந்த விபத்தில் பிரவீன் குமார் உயிரிழந்தார். இது குறித்து குளித்தலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 9, 2026

நெல்லை: கீழே விழுந்து பெயிண்டிங் தொழிலாளி பலி.!

image

ராமானுஜம்புதூரை சேர்ந்தவர் இளம்வழுதி (வயது 58). பெயிண்டிங் தொழிலாளியான இவர் நாவல் குளம் கிராமத்தில் ஒரு வீட்டில் பெயிண்டிங் தொழில் செய்து கொண்டிருந்தார். அப்போது ஏணியில் கால் தவறி கீழே விழுந்தார். தலையில் படுகாயம் அடைந்த அவர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சைக்கு பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். இதுக்குறித்து மூலைகரைப்பட்டி போலீசார் விசாரணை.

News January 9, 2026

வேலூர் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம்!

image

வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் தனியார் நிறுவனத்தின் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நேற்று (ஜன.8) நடைபெற்றது. இந்த முகாமை கல்லூரி தலைவர் ரமேஷ் தொடங்கி வைத்தார். இதில் 182 மாணவர்கள் கலந்து கொண்டதில் 112 பேர் தேர்வு செய்யப்பட்டனர். கல்லூரியின் வேலை வாய்ப்பு அலுவலர் அருண்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News January 9, 2026

புதுச்சேரி: சாலை விபத்தில் காய்கறி வியாபாரி பலி

image

புதுச்சேரி பூரணாங்குப்பத்தைச் சேர்ந்த காய்கறி வியாபாரி லதா (60), நேற்று தவளக்குப்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பும்போது விபத்தில் சிக்கினார். புதுச்சேரி – கடலூர் சாலையை அவர் கடக்க முயன்றபோது, அதிவேகமாக வந்த டெம்போ டிராவலர் மோதியதில் அவர் உயிரிழந்தார். இந்த நிலையில், கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் தற்போது இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 9, 2026

வேலூரில் 70 சிறப்பு பஸ்கள் இயக்கம்!

image

வேலூர் மண்டலத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. வேலூரில் இருந்து சென்னைக்கு 40 பஸ்கள், பெங்களூருவுக்கு 10 பஸ்கள், ஓசூருக்கு 10 பஸ்கள், திருச்சிக்கு 5 பஸ்கள் உள்பட மொத்தம் 70 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. சிறப்பு பஸ்கள் வருகிற 11-ந்தேதி முதல் 14-ந்தேதி வரையும், அதன் பின்னர் 17,18-ந்தேதிகளில் இயக்கப்பட உள்ளாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

News January 9, 2026

ராம்நாடு: தேர்வு இல்லை.. ரூ.56,100 சம்பளத்தில் ARMY வேலை

image

இந்திய ராணுவத்தில் SSC (Technical) பிரிவில் 381 காலியிடங்கள் உள்ளன. இதற்கு ஆண்/பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். BE., B.Tech ல் ஏதேனும் ஒரு பிரிவில் பயின்றவர்கள் பிப்.5 க்குள் இந்த <>லிங்கை<<>> கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை வழங்கப்படும். தேர்வு கிடையாது. மதிப்பெண் மற்றும் நேர்காணல் மூலம் பணி வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை உங்க நண்பர்களுக்கும் SHARE

News January 9, 2026

போக்குவரத்து நெரிசலில் தவிக்கும் கள்ளக்குறிச்சி

image

கள்ளக்குறிச்சி நகரின் முக்கிய பகுதிகளில் இருசக்கர வாகனங்களை சீரற்ற முறையில் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் மற்றும் அலுவலகம் செல்லும் ஊழியர்கள் தாமதத்திற்கு உள்ளாகின்றனர். அவசர தேவைக்காக வரும் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களும் செல்ல முடியாமல் சிரமம் ஏற்படுகிறது.

error: Content is protected !!