Tamilnadu

News April 5, 2024

புதுவைக்கு தமிழக முதல்வர் வருகை

image

புதுச்சேரி பாராளுமன்ற தொகுதியில் இந்திய கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து புதுச்சேரியில் பிரசாரம் மேற்கொள்வதற்காக வருகின்ற ஏப்ரல் 7ஆம் தேதி அன்று தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வருகை தர உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

News April 5, 2024

100% வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு 

image

மக்களவைத் தேர்தலையொட்டி நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் மருத்துவர் ச.உமா, தேர்தல் பொதுப்பார்வையாளர் ஹர்குன்ஜித்கவுர் முன்னிலையில் இன்று (5.4.2024) மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மக்களவை பொதுத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் விழிப்புணர்வு ஒட்டுவில்லைகளை 20 லிட்டர் குடிநீர் கேன்களில் ஒட்டி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். 

News April 5, 2024

ஈரோடு: 40 ஆயிரம் பேலட் பேப்பர் அச்சடிக்கும் பணி தீவிரம்

image

வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்களுக்கு தெரியும்படி முன் பகுதியில் வேட்பாளர் பெயர் சின்னங்களுடன் கூடிய பேலட் பேப்பர் பார்வைக்கு வைக்க வேண்டி உள்ளதால், 40 ஆயிரம் பேலட் பேப்பர்கள் அச்சடிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 50 சதவீதம் பேலட் பேப்பர்கள் அச்சடிக்கப்பட்டுவிட்டதாகவும், முழுமையாக அச்சடிக்கப்பட்ட பிறகு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பொருத்தும் பணி தொடங்கும் என தெரிவித்தனர்.

News April 5, 2024

கோவை: மாநகராட்சி கமிஷனர் நேரில் ஆய்வு

image

கோவை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையம் தடாகம் சாலையில் உள்ள ஜிசிடி கல்லூரியில் நடைபெற உள்ளது. அங்கு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் உதவி ஆட்சியர் (ப) ஆசிக் அலி, துணை ஆணையர் சிவகுமார், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் செல்வராஜ் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

News April 5, 2024

ஆம்பூரில் மனித நேய மக்கள் கட்சி தலைவர் பேட்டி

image

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடவுள்ள கதிர் ஆனந்தை ஆதரித்து தேர்தல் பரப்புரை செய்ய வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், மோடி அரசை மீறியவர்கள் நலனில் பாஜகவுக்கு ஒரு துரும்பு கூட அக்கறை இல்லை என்று குற்றஞ்சாட்டினார்.

News April 5, 2024

100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு

image

பாராளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு கடலூர், 100% வாக்களிப்பது குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இன்று கடலூர் மாநகராட்சி அலுவலகம் முன்பாக மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் சார்பில் மனித சங்கிலி நடைபெற்றது. இதில் மாவட்ட தேர்தல் அலுவலர் (ம) கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், மாநகராட்சி ஆணையர் உட்பட பலர் பங்கேற்று மனித சங்கிலியாக கைகோர்த்து நின்றனர்.

News April 5, 2024

நாமக்கல்: பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா

image

நாமக்கல், திருச்செங்கோடு அடுத்த எலச்சிப்பாளையம் மேற்கு ஒன்றியத்தில் உள்ள கோவில் பாளையத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. இதில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் உடன் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

News April 5, 2024

குன்னூர் : வாக்காளர் விழிப்புணர்வு கூட்டம்

image

குன்னூர் புனித அந்தோணியார் தொழிற்பயிற்சி  மையத்தில்  குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு கூட்டம் இன்று (5 தேதி ) நடைபெற்றது. முதல்வர் ஆனந்த் தலைமை தாங்கினார். சங்க தலைவர் மனோகரன்  பேசும்போது
‘ ஓட்டுக்கு காசு வாங்குபவர்கள் சுயமரியாதையை இழக்கிறோம் என்பதை புரிந்து  கொள்ளுங்கள் ‘ என்றார். கூட்டத்தில் அனைவரும் தேர்தலில் ஓட்டு போடுவதாக உறுதிமொழி ஏற்றனர்.

News April 5, 2024

தேர்தல் பணியாளர்களுக்கு பயிற்சி வகுப்பு

image

கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலக கூட்டரங்கில் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி தேர்தல் பணியில் ஈடுபட உள்ள மண்டல அலுவலர்கள் மற்றும் உதவியாளர்கள் ஆகியோருக்கான பயிற்சி வகுப்பு இன்று ஏப்.5 தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், கோவில்பட்டி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜேன் கிறிஸ்டி உடனிருந்தனர்.

News April 5, 2024

மன்னார்குடி மின் தட்டுப்பாடு கோடை விவசாயம் பாதிப்பு

image

காவிரி டெல்டா மாவட்டங்களில் கோடை சாகுபடி மின்சார தட்டுப்பாட்டால் கருதி வருகின்றது. குறிப்பாக 120 கிலோவாட் மின்சாரம் கிடைக்க வேண்டிய நிலையில் 90 கிலோவாட் மின்சாரம் மட்டுமே கிடைக்கிறது. இதனை உடனே சீர் செய்து கருகும் பயிா்களை பாதுகாத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என நேற்று மன்னார்குடியில் விவசாய சங்க பிஆர். பாண்டியன் கூறினார்.

error: Content is protected !!