Tamilnadu

News January 9, 2026

தேனி: மகளிர் உரிமை தொகை வரலையா.? முக்கிய அறிவிப்பு

image

தேனி மக்களே மகளிர் உரிமை தொகை ரூ.1000 வராதவங்க மேல்முறையீடுக்கு இத பண்ணுங்க.

1.இங்கு <>கிளிக் செய்து<<>> கணக்கு உருவாக்குங்க.

2.அடுத்து, SERVICES-ஐ தேர்ந்தெடுத்து, அதில் KMU-101 KMUT APPEAL பகுதிக்குள் செல்லவும்.

3. ஆதார் எண், ஆண்டு வருமானத்தை பதிவு செய்து மேல்முறையீடு தாக்கல் செய்யுங்க.

தகவல்களுக்கு, உங்கள் பகுதி வட்டாச்சியர்/கோட்டாட்சியரை அணுகவும்.

தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News January 9, 2026

இராம்நாடு: ரேஷன் கடை குறித்து புகார் அளிக்க!

image

இராம்நாடு ரேஷன் கடைகள் குறித்து புகார் அளிக்க, 1967 அல்லது 18004255901 அழைத்து தெரிவிக்கலாம், அல்லது 044-28592828 (State Consumer Helpline) எண்ணை அழைக்கலாம், மேலும் consumer@tn.gov.in மின்னஞ்சல் முகவரியிலும் புகார் அளிக்கலாம். மேலும், TNPDS இணையதளம் மற்றும் கடைகளில் உள்ள புகார் பெட்டிகள் மூலமாகவும் தெரிவிக்கலாம். உங்க நண்பர்களுக்கும் SHARE செய்து அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க.

News January 9, 2026

குமரி: ரூ.75,000 பரிசு.. விளையாட்டு போட்டிக்கு விண்ணப்பிக்கலாம்

image

குமரியில் இளைஞர்களின் திறமையை மேம்படுத்த ’இது நம்ம ஆட்டம்-2026’ விளையாட்டு போட்டி நடைபெறவுள்ளது. இதில் 16-35 வயதுடையோர் பங்கேற்கலாம். தடகளம், கபாடி, கிரிக்கெட் உள்ளிட்ட பல விளையாட்டுகள் நடைபெறும். வெற்றி பெறுவோருக்கு ரூ.1,000 – ரூ.75,000 வரை பரிசு தொகை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஜன.21க்குள் இங்கு <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். மேலும், விபரங்களுக்கு 04652-232060 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

News January 9, 2026

புதிய தொழிற்பள்ளிகள் துவங்க அழைப்பு

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2026-27 கல்வியாண்டில் புதிய தொழிற்பள்ளிகள் தொடங்க விரும்புவோர் பிப்ரவரி 28-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அங்கீகாரம் புதுப்பித்தல் மற்றும் கூடுதல் இடங்களுக்கும் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தகுதியுள்ளவர்கள் www.skilltraining.tn.gov.in இணையதளத்தைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

News January 9, 2026

விழுப்புரம்: உங்க கனவ சொல்லுங்க திட்டம்

image

தமிழகத்திலுள்ள 1.91 கோடி குடும்பங்களை நேரில் சந்தித்து, அவர்களது கனவுகளை கேட்டறியும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி
விழுப்புரம் சட்டக்கல்லூரி கூட்டரங்கில் ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் நடைப்பெற்றது.இந்த விழாவில் முன்னாள் அமைச்சர் பொன்முடி எம்.எல்.ஏ சிறப்புரை ஆற்றினார். விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் லட்சுமணன், அன்னியூர் சிவா, செஞ்சி மஸ்தான், சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

News January 9, 2026

விருதுநகர்: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

image

விருதுநகர் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <>Tamil Nilam<<>> என்ற செயலியில் Location-ஐ On செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்பதை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். SHARE IT.!

News January 9, 2026

மதுரை: ரேஷன் கடை குறித்து புகார் அளிக்க!

image

மதுரை ரேஷன் கடைகள் குறித்து புகார் அளிக்க, 1800-599-5950 என்ற இலவச எண்ணை CS-CID-க்கு அழைத்து தெரிவிக்கலாம், அல்லது 044-28592828 (State Consumer Helpline) எண்ணை அழைக்கலாம், மேலும் consumer@tn.gov.in மின்னஞ்சல் முகவரியிலும் புகார் அளிக்கலாம். மேலும், TNPDS இணையதளம் மற்றும் கடைகளில் உள்ள புகார் பெட்டிகள் மூலமாகவும் தெரிவிக்கலாம். உங்க நண்பர்களுக்கும் SHARE செய்து அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க.

News January 9, 2026

பருவமழை காரணமாக விவசாயிகளுக்கு ஆட்சியர் அறிவுரை!

image

வானிலை ஆய்வு மையம் மழை குறித்த அறிவிப்பு வெளியிட்டிருப்பதால், விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு,ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளாா். வயலில் அறுவடைக்குத் தயாராக உள்ள பயிா்களை தாமதமின்றி அறுவடை செய்து முடித்து, மழையால் பயிா்கள் வயலில் சேதமடையாமல் இருக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

News January 9, 2026

பெரம்பலூர்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

பெரம்பலூர் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில், தேசிய சமையல் எண்ணெய் இயக்கம், எண்ணெய் பனைத்திட்ட மூலம் மானிய விலையில் எண்ணெய் பனைக்கன்றுகள் வழங்கப்படுகிறது. விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி அழைப்பு விடுத்துள்ளார்.

News January 9, 2026

“உங்க கனவை சொல்லுங்க” – அடையாள அட்டை வழங்கல்!

image

தமிழ்நாடு முதலமைச்சர் இன்று (09.01.2026) திருவள்ளூர் மாவட்டம்,
பொன்னேரி வட்டம், பாடியநல்லூரில் “உங்க கனவை சொல்லுங்க” திட்டத்தைத் தொடங்கி வைத்தார். அந்த நேரலை நிகழ்வினை, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் பிரசாந்த் நேரில் பார்வையிட்டு, “உங்க கனவை சொல்லுங்க” திட்ட கணக்கெடுப்பாளர்களுக்கு அடையாள அட்டையினை வழங்கினார்.

error: Content is protected !!