India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜன.09) திருவள்ளூர் மாவட்டத்தில் “உங்கள் கனவை சொல்லுங்க” என்ற திட்டத்தை தமிழகம் முழுவதும் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வை இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி மற்றும் இராணிப்பேட்டை ஆட்சியர் சந்திரகலா ஆகியோர் காணொளி காட்சி வாயிலாக பார்வையிட்டனர்.

தமிழ்நாட்டின் மிகப்பெரிய இளைஞர் விளையாட்டு திருவிழாவான “இது நம்ம ஆட்டம் 2026” இராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெற உள்ளது. இதில் 16 முதல் 35 வயது வரை உள்ள இளைஞர்கள் பங்கேற்கலாம்.
போட்டிகள் ஜன.22 முதல் பிப்.08 வரை ஊராட்சி, மாவட்டம் மற்றும் மாநில அளவுகளில் நடைபெறும்.
பதிவு செய்ய கடைசி தேதி ஜன.21. பங்கேற்க விரும்புவோர்
www.sdat.tn.gov.in, www.cmyouthfestival.sdat.in இணையதளங்களில் பதிவு செய்யலாம்.

காரைக்கால், தெற்கு கேரளா கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக காரைக்கால் மாவட்டத்தில், நாளை (ஜன.10) மிக கனமழை கொட்டும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. இதனால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் பாதுகாப்புடன் இருக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை (ஜன.10) சனிக்கிழமை முழு வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 2ஆம் தேதி கனமழை காரணமாக மாவட்ட ஆட்சியர் விடுமுறை அளித்ததால் அதை ஈடு செய்யும் பொருட்டு நாளை அனைத்து பள்ளிகளுக்கும் முழு வேலை நாளாக செயல்பட வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியைச் சந்தித்த மலேசியத் தமிழர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர். “இவ்வளவு எளிமையான முதலமைச்சரை இதுவரை பார்த்ததே இல்லை” எனத் தெரிவித்த அவர்கள், ரங்கசாமியின் பணிவு, நடத்தை, பேசும் முறை ஆகியவை மனதை கவர்ந்ததாகக் கூறினர். மலேசியத் தமிழர்கள், புதுச்சேரியின் முன்னேற்றத்திற்காக தாங்களும் பங்களிக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர்.

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், அரியலூர் மாவட்டம் சார்பில் முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா, இது நம்ம ஆட்டம்-2026 ஊராட்சி ஒன்றியம், மாவட்ட அளவில் நடத்துவது தொடர்பாக மாவட்ட விளையாட்டு நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுக்குழு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம், மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக ஷேர் பண்ணுங்க!

ராணிப்பேட்டை மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக ஷேர் பண்ணுங்க!

விழுப்புரம் மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக ஷேர் பண்ணுங்க!

காஞ்சிபுரம் மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக ஷேர் பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.