India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை நேற்று ஜமால் முகமது கல்லூரிக்கு கொண்டுவரப்பட்டு அறைகளில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டது. ஆட்சியர் பிரதீப் குமார் நிருபர்களிடம் கூறியதாவது, திருச்சி, நாடாளுமன்ற தொகுதியில் 67. 52சதவீத வாக்குகளே பதிவாகி உள்ளன. பெரும்பாலான மக்கள் வாக்களிக்க வராததால் வாக்கு சதவீதம் குறைந்துள்ளது என்று கூறினார்.
குறிஞ்சிப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை தோறும் இறைச்சி வாங்கி சாப்பிடுவது வழக்கம்.
இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பெரும்பாலான இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நாமக்கல் உழவர் சந்தையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ பீன்ஸ் அதிகபட்சமாக ரூ.72க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது கடந்த சில தினங்களாக தொடர்ந்து ஒரு கிலோ பீன்ஸ் குறைந்தபட்சமாக ரூ.100-க்கும் மேல் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று புதிய உச்சமாக ஒரு கிலோ பீன்ஸ் அதிகபட்சமாக ரூ.110-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனிடையே வரத்து குறைவு காரணமாக விலை உயர்வடைந்துள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்
பழனி, சின்னகலையம் புத்தூர்,சிவகிரிபட்டி பகுதிகளில் இறைச்சி கடைகள் இன்று திறந்து விற்பனை நடைபெறுகிறது.மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு இறைச்சி கடைகள் திறக்க இன்று அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அரசு உத்தரவை மீறி இறைச்சிக் கடைகள் திறந்து விற்பனை செய்யப்படுகிறது. சுகாதாரத் துறை அதிகாரிகள் , ஊராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நீலகிரியில் மலை ரயில் பயணம் செய்ய உள்நாட்டு வெளிநாட்டு உல்லாச பயணிகள் விரும்பி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மேட்டுப்பாளையத்தில் இருந்து காலையில் புறப்பட வேண்டிய ரயில் இன்ஜின் கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டது. இதையடுத்து பயணிகளுக்கு அவர்களது கட்டணம் திருப்பி கொடுக்கப்பட்டது.. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்தியாவில் சிறந்த உயர்கல்வி நிறுவனங்கள் குறித்த தகவல்களை மத்திய கல்வி அமைச்சகம் மற்றும் தனியார் அமைப்புகள் ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் மாநிலங்களில் கல்வி உலகம் (எஜூகேசன் வேல்டு) என்ற அமைப்பு 2024-25-ம் ஆண்டுக்கான சிறந்த உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. அதில் வேலூர் முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரி இடம்பெற்றிருக்கிறது.
சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், “கோவையில் இருந்து ஏப்.23 முதல் ஜூன்.25 வரை கோவை விடுமுறையை முன்னிட்டு கோவை – பரௌனி இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் திருப்பூா், ஜோலாா்பேட்டை, காட்பாடி, பெரம்பூா் , நெல்லூா், விஜயவாடா, முனிகுடா , சம்பல்பூா் , ரூா்கேலா, ஹாட்டியா, தன்பாத் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரலாற்று சிறப்புமிக்க நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோயிலில் இந்த ஆண்டிற்கான சித்ரா பௌர்ணமி தீர்த்தவாரி நிகழ்ச்சிகள் வருகின்ற 23ம் தேதி சிந்துபூந்துறை தாமிரபரணி ஆறு தீர்த்தவாரி மண்டபத்தில் நடைபெற உள்ளது. பகல் 12:30 மணிக்கு சுவாமி அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் கோயிலில் இருந்து புறப்பட்டு தீர்த்த வாரி மண்டபத்தில் அடைவர். அங்கு நிகழ்ச்சிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் பாடலூர் அருகே காரை பிரிவு ரோடு அருகில் நேற்று மாலை(ஏப்.20), கள்ளத்தனமாக விற்பனை செய்வதற்காக வைத்திருந்த 92 மது பாட்டில்களை போலீசார் கண்டுபிடித்தனர். இது தொடர்பாக இருர் கிராமத்தை சேர்ந்த கணேசன் என்பவரை பிடித்து விசாரித்து வருகின்றனர். மது பாட்டில்களையும் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
கள்ளிக்குடி அருகே தனியார் கழிவு சுத்திகரிப்பு தொழிற்சாலையை மூடக் கோரி 5 கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்தனர். இந்நிலையில் இங்கு நடத்திய ஆய்வு முடிவு குறித்து ஆட்சியர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், கெமிக்கல் கழிவுகளோ , மருத்துவக் கழிவுகளோ கையாளப்படவில்லை. தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை முறையை பின்பற்றியே ஆலை செயல்பட்டு வருகிறது என தெரவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.