India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோத்தகிரி கோடநாடு பகுதியில் மாற்றுத்திறனாளி மக்கள் வசிக்கும் பிரியா காலனி குடிநீர் தொட்டியில் மர்ம நபர்கள் மனித கழிவு கலந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கிராம தலைவர் மணிகண்டன் மாவட்ட கலெக்டரிடம் நேற்று நேரில் புகார் மனு அளித்தார். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர், அதிகாரிகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். அதன்படி இன்று அரசு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.
திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களுக்கு இரு போக பாசனத்தின் முதல் போக பாசனத்திற்காக வைகை அணையிலிருந்து தண்ணீரை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி, தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா, மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா ஆகியோர் இன்று (03.07.2024) திறந்து வைத்தனர். உடன் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன், தேனி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் ரேணுகா, செயற்பொறியாளர் தமிழ்ச்செல்வன் இருந்தனர்.
சர்வதேச பிளாஸ்டிக் ஒழிப்பு தின பேரணி புதுக்கோட்டையில் இன்று நடைபெற்றது. இதனையொட்டி, தனியார் பள்ளி மாணவர்களின் மாரத்தான் விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதில், ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு உறுதிமொழி ஏற்றனர்.
கோவை ஆட்சியர் அலுவலகம் நேற்று விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தமிழ்நாடு தினத்தையொட்டி கோவை மாவட்டத்தில் உள்ள 6-12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சுப்போட்டி நடத்தப்படுகிறது. இப்போட்டி வரும் 10 ஆம் தேதி காலை டவுன்ஹாலில் உள்ள புனித மைக்கேல் பள்ளியில் நடைபெற உள்ளது. இதில் முதல் 3 இடங்களை பிடிக்கும் மாணவர்களுக்கு ரொக்க பரிசும், சான்றிதழும் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில அளவிலான வாட்டர் போலோ நீச்சல் போட்டி, சென்னை வேளச்சேரியில் நடந்தது. இதில் சிறப்பாக விளையாடிய, 13 வீராங்கனையர் தமிழக அணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். இதில் ஈரோடு கருங்கல்பாளையம் நகரவை மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி அல்பியாகான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வரும், 7ம் தேதி முதல் 11ம் தேதி வரை மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் நடக்கும் தேசிய வாட்டர் போலோ போட்டியில் தமிழக அணி பங்கேற்கவுள்ளது.
நீலகிரி மக்களவை தொகுதிக்கான பாஜக ஆய்வு கூட்டம் நாளை பகல் 12 மணிக்கு மேட்டுப்பாளையம் (EMS) மகாலில் நடைபெறுகிறது. கூட்டத்துக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தலைமை வகிக்கிறார். இதில் நயினார் நாகேந்திரன் MLA பங்கேற்கிறார். இதில் மாநிலம், மாவட்டம், மண்டலம் நிர்வாகிகள் பங்கேற்பதாக மாவட்ட பாஜக தெரிவித்துள்ளது.
சென்னை மெரினா கடற்கரை எதிரே சுதந்திர தின அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளதால், நாகை மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்களிடம் உள்ள சுதந்திர போராட்ட ஆவணங்கள், நினைவு சின்னம், செய்திதாள்கள், அஞ்சல் உறைகள், ரூபாய் தாள், நாணயங்கள் உள்ளிட்டவைகளை நாகை அருங்காட்சியகத்தில் தர வேண்டுமென ஆட்சியர் ஜானிடாம் வர்கிஸ் கேட்டு கொண்டுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆங்கிலத்தில் இருந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் மொழி பெயர்பதற்கான 8 பணியிடங்கள் காலியாக உள்ளது. இதற்கு பட்டப்படிப்பு முடித்து இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய 3 மொழிகள் தெரிந்தவர்கள், ஆங்கிலம், ஹிந்தி, ஆங்கிலம், மலையாளம், ஆங்கிலம், கன்னடம் தெரிந்தவர்கள் வரும் 29ஆம் தேதிக்குள் www.mhc.tn.gov.in என்ற இணைய தளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் உணவு பாதுகாப்பு துறை சார்பில் நடமாடும் உணவுப் பொருட்கள் பரிசோதனை விழிப்புணர்வு வாகனத்தை நேற்று (ஜூலை 2) ஆட்சியர் ஸ்ரீதர் துவக்கி வைத்து ஆய்வுக் கூடத்தை பார்வையிட்டார். தொடர்ந்து, தரமற்ற உணவுப் பொருட்கள் குறித்த புகார்களை 9444042322 என்ற whatsapp எண் மூலம் தெரிவிக்கலாம் என ஆட்சியர் ஸ்ரீதர் அறிவித்தார்.
அம்ரித் திட்டத்தின் கீழ் ரூ.347 கோடி மதிப்பீட்டில், மதுரை ரயில் நிலையம் நவீனமயமாக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில், ரயில் பயணிகளுக்கு சிரமாக இருந்த பார்க்கிங் பிரச்சனையை தீர்க்கும் வகையில், 500 வாகனங்கள் ஒரே நேரத்தில நிறுத்தும் வகையில் 3 மல்டி லெவல் வாகன நிறுத்தும் தளம் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ரயில் பயணிகள் தங்களது வாகனங்களை சிரமமின்றி நிறுத்த முடியும்.
Sorry, no posts matched your criteria.