India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்செந்தூரை சேர்ந்தவர் சுடலைமுத்து (ஆட்டோ டிரைவர்). இவருக்கும் சாத்தான்குளம் அருகே உள்ள தட்டார் மடத்தைச் சேர்ந்த சுகன்யா என்ற பெண்ணுக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனை கண்டித்த சுகன்யாவின் உறவினர்கள் வினித் ராஜ் , பரத் ஆகியோர் நேற்று முன்தினம் சுடலைமுத்து சுகன்யாவையும் அறிவாளால் வெட்டியுள்ளனர். இது பற்றி தட்டார்மடம் போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பழனி இலக்குமி நாராயணப் பெருமாள் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. வண்ண பட்டாடைகள் அணிவிக்கப்பட்டு நகைகள் சாா்த்தப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பட்டா்கள் சிறப்பு யாகம்நடத்தி பூஜைகள் செய்ய, மேளதாளம் முழங்க மங்கலநாண் அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நாளை(செவ்வாய்க்கிழமை) காலை 7.35 மணி அளவில் தேரோட்டம் நடைபெறவுள்ளது
உதகை அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில், மக்களவைப் பொதுத்தேர்தலில் வாக்குப்பதிவான மின்னணு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதை தேர்தல் பொதுப்பார்வையாளர் மஞ்சித் சிங் பரார், மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான மு.அருணா மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் பார்வையிட்டார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இருந்தார்.
தேனியில் அமமுக பொதுச்செயலாளர் TTV தினகரன் தேனி அருகே அல்லிநகரம் காவல் நிலையம் அருகில் தங்கி உள்ளார். இந்நிலையில் போடி அருகே மீனாட்சிபுரம் சேர்மன் S. திருப்பதி அவரது இல்லத்திற்கு சென்று நேரில் சந்தித்தார். பின்பு நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் வெற்றி வாய்ப்பு குறித்து ஆலோசித்தார். சேர்மன் திருப்பதி ஓபிஎஸ் அணியினை சேர்ந்தவர் ஆவார்.
தென்காசி மாவட்டத்தில் கோடை வெயில் தாக்கம் தொடர்ந்து இன்றும் (ஏப்ரல் 21) காலை முதல் வெயில் தாக்கம் அதிகமாக இருந்தது. இன்றைய அதிகபட்ச வெப்ப பதிவு 101.8 டிகிரியாக உயர்ந்தது. சாலைகளில் சென்றவர்கள் மட்டுமின்றி வீடுகளுக்குள் முடங்கி கிடந்தவர்களும் வெப்பம் காரணமாக அவதிப்பட்டனர். இரவிலும் புழுக்கம் உணரப்பட்டது.
தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 7 லட்சத்து 24 ஆயிரத்து 200 பேரும், பெண் வாக்காளர்கள் 7 லட்சத்து 90 ஆயிரத்து 301 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 129 பேர் என மொத்தம் 15 லட்சத்து 14 ஆயிரத்து 630 வாக்காளர்கள் உள்ளனர். இதில் நாடாளுமன்ற தேர்தலில் மொத்தம் 10 லட்சத்து 24 ஆயிரத்து 949 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. இதில் ஆண்களை விட பெண்களே அதிகளவில் வாக்கு அளித்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் தினமும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று இரவு கடலூர் உதவி ஆய்வாளர் மணிவண்ணன், சிதம்பரம் காவல் ஆய்வாளர் சுஜாதா, விருத்தாச்சலம் உதவி ஆய்வாளர் தனசேகர், நெய்வேலி காவல் ஆய்வாளர் இராஜராஜன் மற்றும் பண்ருட்டியில் உதவி ஆய்வாளர் ஜவ்வாது ஹுசைன் ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் திருக்கோவிலில் இன்று பிரதோஷத்தை முன்னிட்டு ஸ்ரீநந்திகேஸ்வரர் மற்றும் ஈசனுக்கு பால், தயிர், சந்தனம், பழ வகைகள், வாசனை திரவியுடன் சிறப்பு அபிஷேகம் முடித்து, மகா தீபாராதனை காண்பித்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் ரிஷப வாகனத்தில் ஈசன் எழுந்தருளி உட்பிரகாரம் மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
கோயம்புத்தூர் – பருணி இடையே திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி சென்னை பெரம்பூர் வழியாக வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. வண்டி எண் 06059 கோவையில் இருந்து ஏப்.23 ம்தேதி பகல் 11.50க்கு புறப்படுகிறது இதேபோல் வண்டி எண் 06060 பருணியில் இருந்து 26ஆம் தேதி இரவு 11.45க்கு புறப்படுகிறது. ஜூன் 28ம் தேதி வரை சிறப்பு ரயில் இயங்கும்.
பழனி முருகன் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். மலை மீது செல்லும் பக்தர்களுக்கு உடல் நல குறைவு ஏற்பட்டால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வசதியாக புதிய ஆம்புலன்ஸ் வாகனம் வாங்கப்பட்டுள்ளது. நவீன மருத்துவ உபகரணங்கள் பொருத்தப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கும் வகையில் ஆம்புலன்ஸ் வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் வசதிக்காக இன்று முதல் ஆம்புலன்ஸ் வாகனம் இயக்கப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.