India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பல்கலைக்கழக மின்னஞ்சலுக்கு இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, போலீசார் மோப்ப நாய்கள் உதவியுடன் சோதனை செய்தனர். சோதனையில் வெடிகுண்டுகள் எதுவும் சிக்காததால், அது வதந்தி என்று உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மிரட்டல் விடுத்தது யார் என்று கோட்டுர்புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுவை பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் கனடா சென்றுள்ளார். அவர் அங்கு நாளை தொடங்கி 6ஆம் தேதி வரை நடக்கும் கனடா, பிரெஞ்சு எம்.பி.க்கள் மாநாட்டில் கலந்து கொள்கிறார். அங்கிருந்து அமெரிக்கா செல்லும் அவர் 8 மற்றும் 9ஆம் தேதிகளில் டெக்சாஸ் மாகாணத்தில் நடைபெறும் மாண்ட் ரிஸ் தமிழ்ச்சங்க விழாவில் பங்கேற்கிறார். நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர் வருகிற 16ஆம் தேதி புதுச்சேரி திரும்புகிறார்.
மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரியில், பள்ளிகளுக்கிடையேயான மாநில ஐவர் கால்பந்து போட்டிகள் வரும் ஜூலை 11, 12 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது. நாக் – அவுட் முறையில் நடைபெறும் இப்போட்டியில், முதல் 2 இடங்கள் பிடிக்கும் அணியினருக்கு கோப்பை, சான்றிதழ், பதக்கங்களும், 3ஆம் இடம் பிடிக்கும் அணிக்கு பதக்கம், சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளன. முன்பதிவிற்கு 9080361863 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் ராதாகிருஷ்ணன் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், காந்திய சிந்தனையால் ஈர்க்கப்பட்டு, தேசிய விடுதலை இயக்கத்தில் இணைந்து புதுச்சேரியை பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து விடுவிக்க பாடுபட்ட தியாகி அன்சாரி துரைசாமி என்றும் ஏற்றத்தாழ்வுகள் அற்ற ஒரு சமத்துவ சமுதாயத்தை உருவாக்க பாடுபட்ட அவரது பணிகளை வரலாறு என்றும் நினைவு கூறும் என்று தெரிவித்துள்ளார்
புதுச்சேரி பாஜக மாநில தலைவர் செல்வகணபதி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசும் போது இந்துக்கள் மீதான காழ்ப்புணர்ச்சியை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தி உள்ளார்.இந்நிலையில் இந்துக்களை அவமதித்து பேசிய அவர் மன்னிப்பு கேட்க வேண்டும், அவருடைய கருத்தை புதுச்சேரி பாஜக வன்மையாக கண்டிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி கூட்டுறவு கல்வியியல் கல்லூரி மேலாண் இயக்குநர் மாறன் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், புதுச்சேரி கூட்டுறவு கல்வியியல் கல்லூரியில் 2024 – 25ஆம் கல்வியாண்டிற்கான பி.எட். பட்டப்படிப்புக்கு புதுவை மாநிலத்தைச் சேர்ந்த பட்டப்படிப்பு முடித்த மாணவ, மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பங்களை இன்று முதல் இணையத்தில் பதிவேற்றம் செய்யலாம் என தெரிவித்துள்ளார்.
சாத்தான்குளம் விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த அதிமுக அரசு முன்வரவில்லை என முதல்வர் தெரிவித்தது தவறு என இபிஎஸ் தெரிவித்துள்ளார். சேலத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், “கள்ளச்சாரயம் விவகாரத்தில், அரசின் அழுத்தம் காரணமாகவே ஆட்சியர் தவறான செய்தியை வெளியிட்டார். சிபிசிஐடி விசாரித்தால் உண்மை குற்றவாளி தப்பிவிடுவார். இதற்கு தீர்வு வேண்டும் என்றால் சிபிஐ தான் விசாரிக்க வேண்டும்” எனக் கூறினார்.
சங்கரன்கோவில் மற்றும் தென்காசி தலைமை அஞ்சலகங்களில், ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவைகள் வரும் 7ஆம் தேதி முதல் ஆக.31ஆம் தேதி வரை அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் நடைபெறும் என கோவில்பட்டி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். பள்ளி குழந்தைகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும், காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை ஆதார் மையங்கள் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் பயிர் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு கால தாமதம் இன்றி அடங்கல், விதைப்புச் சான்று வழங்க வேண்டும் என வருவாய்த்துறை ஆய்வாளர்களுக்கும், கடன் பெறும் மற்றும் கடன் பெறாத விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வங்கி மேலாளர்களுக்கும், பொது சேவை மையங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது என்றும் ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டுள்ள 3 குற்றவியல் சட்டங்கள் குறித்த பயிற்சி தேனி எஸ்பி அலுவலகத்தில் மே 14 அன்று துவங்கியது. பயிற்சிக்காக விசாரணை அதிகாரிகள் உள்ளிட்ட 1829 பேர் தேர்வுசெய்யப்பட்டனர். அவர்களுக்கு தேனி சட்டக்கல்லூரி பேராசிரியர்கள் பயிற்சி அளித்தனர். இதுவரை 1590 பேர் பயிற்சியை நிறைவுசெய்துள்ள நிலையில் எஞ்சிய 239 பேர் பயிற்சி பெற உள்ளனர் என மாவட்ட காவல்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.