India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சுதந்திர தின விழாவின் போது சமூகத்தில் தாமாக முன்வந்து தைரியமாகவும், தனித்தன்மையுடன் கூடிய துணிச்சலுடன் எதையும் எதிர்கொள்ள கூடிய ஆற்றல் மிக்க ஒரு பெண்மணிக்கு கல்பனா சாவ்லா விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. அதற்கான விண்ணப்பங்கள் தற்போது விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரவேற்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார்.
புதிய தமிழகம் கட்சி ஆலோசனை கூட்டத்தில் பேசிய அக்கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களுக்காக 20 ஆண்டுகளாக போராடி வருகிறோம். அந்த மக்களுக்கு வேறு வாழ்வாதாரம் கிடையாது. 100 ஆண்டுகளாக வசிப்பவர்களை கட்டாய விருப்ப ஓய்வு கடிதம் பெற்று வெளியாற்ற நினைப்பத்தாக கூறினார். இன்று(ஜூலை 1) மாஞ்சோலை மக்களை சந்திப்பதாகவும் தெரிவித்தார்.
குமரி மேற்கு மாவட்ட மீனவர் காங்கிரஸ் தலைவராக குழித்துறை பகுதியை சேர்ந்த ஜெரோம் நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினுலால் சிங் பரிந்துரையின் பேரில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை ஒப்புதலின் பேரில் நியமிக்கப்பட்டுள்ள அவரை கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பிர் ராஜேஷ்குமார் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.
1.கரும்பு நடுவதற்கு முன் குளத்து மண் இட்டால் அதிக மகசூல் பெறலாம்; 2.ஆட்டு புழுக்கையை உரமாக பயன்படுத்தினால் சக்கரை தன்மை அதிகரிக்கும்; 3.கரும்பு வளர வளர சோகையை உரிப்பதால் செதில், மாவு பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தலாம். 4. அடிக்கடி நீர் பாச்சுவதால் கரையான் தாக்குதலை கட்டுப்படுத்தலாம். 5. பயிர் செய்து 3 மாதங்களில் சூளை சாம்பல், வேப்பங்கொட்டை தண்ணீர் தெளித்தால் இளந்தண்டு துளைப்பானை கட்டுப்படுத்தலாம்.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியில் அதிகபட்சமாக 3 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. நேற்று காலை 6 மணி முதல் இன்று(ஜூலை 1) காலை 6 மணி வரை கும்மிடிப்பூண்டியில் 1.6 செ.மீ, பொன்னேரி 1.5 செ.மீ, ஆவடி 1 செ.மீ, திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, ஆர்.கே.பேட்டையில் தலா 3 மி.மீ, சோழவரத்தில் 2 மி.மீட்டரும், செங்குன்றத்தில் 1 மி.மீட்டர் மழை பதிவானது. மாவட்டத்தில் சராசரியாக 5.47 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
காரைக்கால் பகுதியில் கடந்த 2 நாட்களாக இந்து முன்னணி மாநில செயற்குழு கூட்டம் சிறப்பாக நடந்து முடிந்தது. இக்கூட்டத்தில் கன்னியாகுமரி மாவட்ட இந்து முன்னணி துணை தலைவராக நாகர்கோவில் பகுதியை சேர்ந்த இந்து சமுதாய போராளி ஜெயராம் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது பணி சிறக்க குமரி மாவட்ட இந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அயோத்தியை 20 ஆண்டுகளுக்கு மேலாக பாஜக மீண்டும் மீண்டும் சொல்லி வந்தது மதவெறி அரசியல் குறியீடு என எம்.பி. வெங்கடேசன் கடுமையாக சாடியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “அயோத்தியில் 1,000 ஆண்டு இருளை நீக்கி விட்டதாக கூறிய பிரதமர் மோடி, தேர்தலுக்கு பிறகான உரையில் அயோத்தி என்ற வார்த்தையை பேசவில்லை. எனவே, வாக்களிக்கவில்லை என்றால், ராமனே ஆனாலும் பாஜக கை கழுவி விடும்” எனத் தெரிவித்துள்ளார்.
கால்நடை பராமரிப்புத்துறை மூலம் தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 2024-25 ஆண்டிற்கு தென்னை மற்றும் பழத்தோட்டங்களில் ஊடுபயிராக பசுந்தீவனம் வளர்க்க பெரம்பலூர் மாவட்டத்திற்கு 50 ஏக்கர் இலக்கீடு ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில், ஏக்கருக்கு ரூ.3000 முதல் ஹெக்டேருக்கு ரூ.7,500 வரை மானியம் வழங்கப்படுகிறது. இதனை பயன்படுத்தி கொள்ளும்படி மாவட்ட ஆட்சியர் கற்பகம் தெரிவித்துள்ளார்.
தேனியில் மாவட்ட அளவில் நடைபெற்ற கூடைப் பந்தாட்ட போட்டியில் பி.எஸ்.ஏ அணி முதல் பரிசை வென்றது. நாடார் சரஸ்வதி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் பல்வேறு அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டியில், பாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி அணி அதிக புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. இதனையடுத்து, சாம்பியன் பட்டம் வென்ற பாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி அணியினருக்கு பரிசு கோப்பை வழங்கப்பட்டது.
தமிழ்நாட்டில் சொந்த கட்டடங்களில் இயங்கும் கிறிஸ்துவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு நிதியுதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, அரியலூர் மாவட்டத்தில் இத்திட்டத்தின்கீழ் கூடுதல் பணி மேற்கொள்ளவும், கட்டடத்தின் வயதிற்கேற்ப மானிய தொகையை உயர்த்தியும் அரசு ஆணையிட்டுள்ளது. இதனை பயன்படுத்தி கொள்ளும்படி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.