India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருவண்ணாமலை மாவட்ட மதுவிலக்கு காவல்துறையினரால் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 130 வாகனங்கள் பொது ஏலத்தில் விடப்படுகின்றன. இதில் 122 இருசக்கர வாகனங்கள், ஒரு முச்சக்கர வாகனம் மற்றும் 7 நான்கு சக்கர வாகனங்கள் அடங்கும். வரும் 12-ம் தேதி காலை 9 மணி முதல் எஸ்பி அலுவலக ஆயுதப்படை மைதானத்தில் இந்த ஏலம் நடைபெறும். விருப்பமுள்ளவர்கள் உரிய ஆவணங்களுடன் கலந்து கொள்ளலாம் என காவல்துறை அறிவித்துள்ளது.

காஞ்சிபுரம் மக்களே.., பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

திருவள்ளூர் மக்களே.., பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

கடலூர் புதுநகர் காவல்நிலையத்திற்குட்பட்ட கஞ்சா வழக்கு ஒன்றில் தேடப்பட்டு வந்த முகமது பைசல் (37) என்பவர் நீண்ட நாட்களாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில், அவர் வெளிநாட்டில் இருப்பது போலீசாருக்கு தெரிய வந்தது. இதையடுத்து நேற்று கேரளா திரும்பிய அவரை ஏர்போர்ட்டில் வைத்து போலீசார் கைது செய்து, கடலூர் சிறையில் அடைத்தனர்.

தருமபுரி உழவர் சந்தையில் இன்றைய (ஜன.10) காய்கறி விலை நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி (1 கிலோ) தக்காளி: ரூ.24, கத்தரிக்காய்: ரூ.14, வெண்டைக்காய்: ரூ.32, முள்ளங்கி: ரூ.10, அவரைக்காய்: ரூ.18, கொத்தவரை: ரூ.65, பச்சைமிளகாய்: ரூ.24 ,பப்பாளி: ரூ.30, கொய்யா: ரூ.50 மற்றும் முருங்கைக்கீரை (50 கிராம்) ரூ.15 என விற்பனை செய்யப்படுகின்றன.

திருச்சுழி அருகே வேளாண்மை கல்லூரி உதவி பேராசிரியை நகைகள் மாயமான வழக்கில் மாணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முத்துராமலிங்கபுரம் வேளாண்மை கல்லூரியில் பணியாற்றும் மோகனப்பிரியா (34) தனது 8½ பவுன் தங்க நகைகளை கல்லூரி நூலகத்தில் காணாமல் போனது. சிசிடிவி ஆய்வில் மாணவர் ஹரிஹரன் (19) சென்றது தெரிய வந்ததை தொடர்ந்து ம. ரெட்டியபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அழகர்கோவில் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள மேல்நிலைத் தொட்டி கீழே, சுமார் 65 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று கிடப்பதாக அ.வலையப்பட்டி விஏஓ விக்னேஷ் அப்பன்திருப்பதி போலீசில் புகார் செய்தார். அப்பன்திருப்பதி போலீசார் உடலை கைப்பற்றி மதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த நபர் யார் ? எந்த ஊர்? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

பெருந்துறை பகுதியைச் சேர்ந்தவர் சரவணமூர்த்தி. இவரது நண்பர் தங்கராஜ். இருவரும் பைக்கில் கவுந்தப்பாடி அருகே சென்று கொண்டு இருந்தனர். அப்போது, அவ்வழியாக எதிரே வந்த பைக் இவர்களது பைக் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த சரவணமூர்த்தி, மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு சிசிகிச்சை பலனின்றி சரவணமூர்த்தி இறந்தார். இதுகுறித்து புகாரின் படி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

பெரியகுளத்தை சேர்ந்தவர் விக்னேஷ். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த நந்தகிருஷ்ணா என்பவருக்கும் சொத்து பிரச்சனை இருந்து வந்தது. இது தொடர்பாக நந்தகிருஷ்ணா மீது ஏற்கனவே நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் விக்னேஷ் போனிற்கு நந்தகிருஷ்ணா பாலியல் தொந்தரவு சம்பந்தமாக ஆபாச படங்களை அனுப்பி மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து தென்கரை போலீசார் நந்தகிருஷ்ணா மீது வழக்குப்பதிவு செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலத்தில் இருந்து வடகாட்டிற்கு நேற்று குணசேகரன் (60) பைக்கில் சென்றுள்ளார். அப்போது வடகாடு அம்புலி ஆற்றின் அருகே உள்ள சாலையில் பைக்கிலிருந்து தவறி விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.