Tamilnadu

News July 1, 2024

பாஜக கைகழுவி விடும்: எம்.பி.வெங்கடேசன்

image

அயோத்தியை 20 ஆண்டுகளுக்கு மேலாக பாஜக மீண்டும் மீண்டும் சொல்லி வந்தது மதவெறி அரசியல் குறியீடு என எம்.பி. வெங்கடேசன் கடுமையாக சாடியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “அயோத்தியில் 1,000 ஆண்டு இருளை நீக்கி விட்டதாக கூறிய பிரதமர் மோடி, தேர்தலுக்கு பிறகான உரையில் அயோத்தி என்ற வார்த்தையை பேசவில்லை. எனவே, வாக்களிக்கவில்லை என்றால், ராமனே ஆனாலும் பாஜக கை கழுவி விடும்” எனத் தெரிவித்துள்ளார்.

News July 1, 2024

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

கால்நடை பராமரிப்புத்துறை மூலம் தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 2024-25 ஆண்டிற்கு தென்னை மற்றும் பழத்தோட்டங்களில் ஊடுபயிராக பசுந்தீவனம் வளர்க்க பெரம்பலூர் மாவட்டத்திற்கு 50 ஏக்கர் இலக்கீடு ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில், ஏக்கருக்கு ரூ.3000 முதல் ஹெக்டேருக்கு ரூ.7,500 வரை மானியம் வழங்கப்படுகிறது. இதனை பயன்படுத்தி கொள்ளும்படி மாவட்ட ஆட்சியர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

News July 1, 2024

பெரியகுளம் பி.எஸ்.ஏ அணி சாம்பியன்

image

தேனியில் மாவட்ட அளவில் நடைபெற்ற கூடைப் பந்தாட்ட போட்டியில் பி.எஸ்.ஏ அணி முதல் பரிசை வென்றது. நாடார் சரஸ்வதி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் பல்வேறு அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டியில், பாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி அணி அதிக புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. இதனையடுத்து, சாம்பியன் பட்டம் வென்ற பாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி அணியினருக்கு பரிசு கோப்பை வழங்கப்பட்டது.

News July 1, 2024

அரியலூர் ஆட்சியர் முக்கிய தகவல்

image

தமிழ்நாட்டில் சொந்த கட்டடங்களில் இயங்கும் கிறிஸ்துவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு நிதியுதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, அரியலூர் மாவட்டத்தில் இத்திட்டத்தின்கீழ் கூடுதல் பணி மேற்கொள்ளவும், கட்டடத்தின் வயதிற்கேற்ப மானிய தொகையை உயர்த்தியும் அரசு ஆணையிட்டுள்ளது. இதனை பயன்படுத்தி கொள்ளும்படி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News July 1, 2024

விஜயுடன் சேர முயற்சி: ஈவிகேஎஸ் இளங்கோவன்

image

நடிகர் விஜய்யுடன் சேர வேண்டும் என்பதற்காக சிலர் மிகப்பெரிய முயற்சி எடுப்பதாக ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறினார். மதுரை அவனியாபுரத்தில் நேற்று மாலை செய்தியாளர்களை சந்தித்த அவர், “இதுவரை தனியாக நின்று நான் தோற்பேன் என்று சொன்னவர்கள் எல்லாம், இன்றைக்கு விஜய்க்கு உள் அர்த்தத்துடன் பாராட்டுக்கள் தெரிவிப்பதும், , கூட்டணி குறித்து பேசுதுமாக இருக்கிறார்கள்” என சீமானை மறைமுகமாக விமர்சித்தார்.

News July 1, 2024

விசிக சார்பில் மது ஒழிப்பு மாநாடு: திருமாவளவன்

image

செப்.17ஆம் தேதி விசிக சார்பில் மது ஒழிப்பு மாநாடு நடத்தப்பட உள்ளது என திருமாவளவன் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “கள்ளச்சாராய மரணங்கள் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் நடந்து வருகின்றன. தேசிய அளவில் மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்தினால்தான் இதனை தடுக்க முடியும். முழு ஒழிப்பு மாநாடு பெண்கள் மூலம் நடத்தப்படும். விரைவில் இடம் அறிவிக்கப்படும்” எனக் கூறினார்.

News July 1, 2024

பள்ளி மாணவர்களுக்கு புதிய சேமிப்பு கணக்கு

image

தஞ்சை கோட்ட முதல்நிலை அஞ்சல் கண்காணிப்பாளர் தங்கமணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை மற்றும் இந்திய அஞ்சல் துறை சார்பில் மாணவர்களுக்கு புதிய சேமிப்பு கணக்கு தொடங்குவதற்கான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முகாம் மாணவர்கள் படிக்கும் அந்தந்த பள்ளிகளிலேயே நடைபெறும் என்றும், இம்முகாமில் மாணவர்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு அவர் தெரிவித்துள்ளார்.

News July 1, 2024

கரும்பு சாகுபடி: வேளாண் துறை அறிவுறுத்தல்

image

1.கரும்பு நடுவதற்கு முன் குளத்து மண் இட்டால் அதிக மகசூல் பெறலாம்; 2.ஆட்டு புழுக்கையை உரமாக பயன்படுத்தினால் சக்கரை தன்மை அதிகரிக்கும்; 3.கரும்பு வளர வளர சோகையை உரிப்பதால் செதில், மாவு பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தலாம். 4. அடிக்கடி நீர் பாச்சுவதால் கரையான் தாக்குதலை கட்டுப்படுத்தலாம். 5. பயிர் செய்து 3 மாதங்களில் சூளை சாம்பல், வேப்பங்கொட்டை தண்ணீர் தெளித்தால் இளந்தண்டு துளைப்பானை கட்டுப்படுத்தலாம்.

News July 1, 2024

வேட்பாளா்களின் கணக்குகள் சமா்பிப்பு

image

புதுச்சேரி மக்களவை தோ்தலில் 26 போ் போட்டியிட்டனா். தோ்தலில் அவா்கள் செலவழித்த தொகையை, இப்போது சமா்ப்பிக்க தோ்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி
போட்டியிட்ட அனைத்து வேட்பாளா்களும் செலவினக் கணக்குகளை, ஆட்சியர் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அதிகாரியும், ஆட்சியருமான குலோத்துங்கன், மத்திய தோ்தல் செலவினப் பாா்வையாளா்கள் முகமது மன்சூருல் ஹசன், லட்சுமிகாந்தா ஆகியோர் முன்னிலையில் ஒப்படைத்தனர்.

News July 1, 2024

நீலகிரியில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு

image

நீலகிரி மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (காலை 10 மணி வரை) இடியுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று முதல் ஜூலை 6ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!