Tamilnadu

News January 10, 2026

வேலூர்: G Pay பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

image

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

News January 10, 2026

கல்வராயன் மலையில் ஒளிந்திருக்கும் ரகசியம்!

image

இந்தியா 1947 ஆகஸ்ட் 15ல் சுதந்திரம் அடைந்ததாக அறிவிக்கப்பட்ட போது, இயற்கை வனப்பு மிக்க கல்ராயன் மலைப்பகுதிகள் தனியாக தான் இருந்து வந்தது. ஜாகிர்தார்கள் எனப்படும் ஆட்சியாளர்களால் நிர்வகிக்கப்பட்டு வந்த இப்பகுதி, நீண்ட முயற்சிக்கு பின்னர் 1976-ம் ஆண்டில் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. 1996-ம் ஆண்டுக்கு பிறகு தான் அப்பகுதி மக்களுக்கு வாக்குரிமை கிடைத்தது. மற்றவர்களும் தெரிந்து கொள்ள ஷேர் பண்ணுங்க!

News January 10, 2026

சேலத்தில் வேலை வேண்டுமா? கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மையம் சார்பில் வரும் ஜன.24-ஆம் தேதி ஜங்சன் அருகே உள்ள சோனா கல்லூரி வளாகத்தில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் 5,000-க்கும் அதிகமான பணியிடங்களை நிரப்ப உள்ளன. 8-ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, ஐடிஐ மற்றும் நர்சிங் முடித்தவர்கள் இதில் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு<> இங்கே கிளிக்<<>> செய்யவும் அல்லது 0427 2401750, 99437 10025 அழைக்கவும்.SHAREit

News January 10, 2026

நெல்லை: மாணவி கழுத்தை நெரித்து கொலை

image

நெல்லை வீரவநல்லூர் பகுதியை சேர்ந்தவர் வரதராஜன் (52). இவரது மகள் வர்ஷினி (22) சேலம் தனியார் சித்த மருத்துவ கல்லூரியில் பயின்று வந்தார். இவர் கடந்த ஜன.7ம் தேதி தான், தங்கியிருந்த வீட்டில் கழுத்து நெரித்து கொலை செய்ப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொள்கையில் வர்ஷினியின் தந்தை தலைமறைவானது தெரிந்தது. இதனால், அவரை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

News January 10, 2026

மயிலாடுதுறை: உதவித்தொகை அறிவிப்பு

image

மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் பதிவு செய்துள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். தகுதியானவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் விண்ணப்பங்களை இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம். மேலும் தகவலுக்கு 04364-299790 என்ற எண்ணிற்கு அழைத்து உரிய அறிவுரைகளைப் பெறுவது அவசியமாகும்.

News January 10, 2026

தென்காசி மக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்

image

தென்காசி மாவட்டத்தில் போகிப்பண்டிகையின் போது பழைய பொருட்களை எரிப்பதை தவிர்த்து காற்றின் தரத்தை பாதுகாக்க தென்காசி மாவட்டத்தில் உள்ள பொது மக்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. புகையில்லா போகியை கொண்டாடுவோம் சுற்றுச் சூழலை பேணி காப்போம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கமல்கிஷோர் கேட்டுக் கொண்டுள்ளார்.

News January 10, 2026

கிருஷ்ணகிரி: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க

News January 10, 2026

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

மானிய விலையில் எண்ணெய் பனை கன்றுகள் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி தெரிவித்துள்ளார். மானிய விலையில் ஒரு எக்டேருக்கு ரூ.29 ஆயிரம் எண்ணெய் பனை கன்றுகள் வழங்கப்படுகிறது. மேலும் ஏற்கனவே எண்ணெய் பனை சாகுபடி செய்து வரும் விவசாயிகளுக்கு எக்டேர் ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.5,250 வழங்கப்பட உள்ளது. மேலும், தகவலுக்கு வட்டார தொட்டக்கலை உதவி இயக்குனரை அனுகவும்.

News January 10, 2026

தூத்துக்குடி: இளம் பெண் மீது சரமாரி தாக்குதல்

image

தூத்துக்குடி மந்தி தோப்பு துரைசிங்க நகரை சேர்ந்தவர் சரண்யா (25). இவருக்கும் இவரது வீட்டின் அருகே வசிக்கும் ஆறுமுகம் (35) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், நேற்று இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் ஆறுமுகம், சரண்யாவை அவதூறாக பேசி சரமாரியாக தாக்கியுள்ளார். இது தொடர்பாக கோவில்பட்டி மேற்கு போலீசார் ஆறுமுகத்தை நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 10, 2026

திருப்பூர்: ஆன்லைனில் பணம் அனுப்புபவரா நீங்கள்?

image

தற்போது அனைவரும் UPI மூலமே பணத்தை அனுப்பி வருகின்றனர். இந்த சூழலில், தவறுதலாக மாற்றி தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பி விட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!