Tamilnadu

News April 24, 2024

கோடநாடு எஸ்டேட் கொலை கொள்ளை வழக்கு ஒத்திவைப்பு

image

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை கொள்ளை தொடர்பாக வழக்கு இன்று உதகை சார்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஸ்ரீதர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட யாரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அதனால்  நீதிபதி ஸ்ரீதர் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 10 பேர் ஆஜராகாததால் வழக்கை 29 தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

News April 24, 2024

தேர்தல் ஆணையத்திற்கு இரங்கல் தெரிவித்த அமைச்சர்

image

ராஜஸ்தானில் இஸ்லாமிய சமூகம் குறித்து பிரதமர் மோடி சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். ‘இந்துக்களின்
சொத்துகளை காங்கிரஸ் முஸ்லீம்களுக்கு கொடுத்து விடும்’ எனக் கூறினார். அவரின் பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காததை சுட்டிக்காட்டும் வகையில் “Rest in Peace” இந்திய தேர்தல் ஆணையம்” என்று அமைச்சர் பிடிஆர் தன் X பக்கத்தில் இன்று பதிவிட்டுள்ளார்.

News April 24, 2024

தி.மலையில் 101.48 101.48 டிகிரி பாரன்ஹீட்

image

தி.மலை மாவட்டத்தில் கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர அஞ்சுகின்றனர். இந்நிலையில், இன்றைய அதிகபட்ச வெப்பநிலை 101.48 டிகிரி பாரன்ஹீட், 38.6 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

News April 24, 2024

பரமக்குடியில் நாளை உள்ளூர் விடுமுறை

image

பரமக்குடியில் சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழா நாளை நடைபெறுவதை முன்னிட்டு ஏப்ரல் 23 ஆம் தேதி பரமக்குடியில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் அறிவித்துள்ளார். மேலும் இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக வரும் 04.05.2024 (சனிக்கிழமை) வேலை நாளாக ஈடுசெய்யப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

News April 24, 2024

கோவை: 7 லட்சம் பேர் வாக்களிக்க வில்லை

image

100% வாக்களிப்பு என்ற பிரச்சாரத்தை முன்னிறுத்தி தேர்தல் ஆணையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில், கோவை மக்களவைத் தொகுதியில் மொத்தம் 21 லட்சத்து 6,124 வாக்காளர்கள் உள்ளனர். நடந்து முடிந்த தேர்தலில் 64.81 % வாக்குப் பதிவு ஆகியுள்ளது. அதாவது, 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வாக்களிக்கவில்லை என கோவை ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.

News April 24, 2024

அரசு பேருந்து மோதி விபத்து

image

உடுமலை அருகே வேடப்பட்டி பகுதி வழியாக பொள்ளாச்சி முதல் திண்டுக்கல் வரை நான்கு வழி சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் இன்று அதிகாலை உடுமலை செல்லும் வழித்தடத்தில் வேகத்தடை இல்லாத காரணத்தால் சாலையின் நடுவே உள்ள தடுப்பில் அரசு பேருந்து மோதியதில் ஒரு சில பேர் காயம் அடைந்தனர். எனவே இந்த பகுதியில் முறையான அறிவிப்பு பலகை வேகத்தடை அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

News April 24, 2024

நெல்லை நீதிமன்றம் உத்தரவு

image

மேலதட்டப்பாறை சேர்ந்த சிவா ராணுவத்தில் பணியாற்றினார். இவர் கடந்த 2018-ல் சென்னையில் டூ தூத்துக்குடிக்கு ஆம்னி பேருந்தில் சென்ற போது விபத்தில் பலியானார். மனைவி ஸ்ரீபிரியா நஷ்ட ஈடு கேட்டு நெல்லை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். வழக்கை விசாரித்த நீதிபதி திருமகள் சிவா குடும்பத்துக்கு 1 கோடியே 3 லட்சத்து 63 ஆயிரத்து 224 ரூபாய் 7% வட்டியுடன் வழங்க பேருந்து காப்பீட்டு கழகத்துக்கு இன்று உத்தரவிட்டார்.

News April 24, 2024

திருச்சி: மனநலம் பாதிக்கப்பட்டவர் அழுகிய நிலையில் மீட்பு

image

வையம்பட்டி அடுத்த பஞ்சந்தாங்கி சொரூபம் வனப்பகுதியில் இன்று காலை ஆண் சடலம் ஒன்று தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளது. தகவலின் பேரில் வனத்துறையினர் மற்றும் வையம்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மேற்கொண்ட விசாரணையில் அந்த நபர் மீனாட்சியூர் காளை எனவும், மனநலம் பாதிக்கப்பட்டவர்
என்றும் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து இது குறித்து வையம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News April 24, 2024

திருப்பத்தூர்: 104.11 பாரன்ஹீட் வெப்பம்

image

திருப்பத்தூில் கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் வெப்பம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் மதிய நேரங்களில் வெளியே செல்லாமல் வீட்டிற்குள்ளே முடங்கினர். இந்நிலையில் இன்று திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 104.11 பாரன்ஹீட் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. குறைந்த பட்சமாக 77.90 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகியுள்ளதாக திருப்பத்தூர் தாசில்தார் தெரிவித்துள்ளார்.

News April 24, 2024

கடலூர்: பெரியார் கல்லூரியில் ஆட்சியர் ஆய்வு

image

கடலூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் கடலூர், அரசு பெரியார் கலைக் கல்லூரியில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு மூன்றடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட தேர்தல் அலுவலர் (ம) மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண் தம்புராஜ் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

error: Content is protected !!