India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் கலெக்டர் பிருந்தாதேவி நேற்று(ஜூன் 25) தெரிவித்திருப்பதாவது, மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து மாநில அளவிலான விருதுகள் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்கும் விருதாளர்கள் https://awards.tn.gov.in என்ற வலைத்தளத்தில் விவரங்களை பதிவு செய்து ஜூலை 5க்குள் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகில் தனியார் பேருந்து விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை, மாவட்ட ஆட்சித்தலைவர் மெர்சி ரம்யா இன்று நேரில் சந்தித்தார். உடன், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா, இருக்கை மருத்துவ அலுவலர் மரு.இந்திராணி, வட்டாட்சியர் பரணி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் மற்றும் அதனை பயன்படுத்துவோர் குறித்து தகவல் அறிந்தால் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என கலெக்டர் க.கற்பகம் நேற்று(ஜூன் 25) தெரிவித்துள்ளார். மாநில கட்டுப்பாட்டு அறைக்கான கட்டணமில்லா தொலைபேசி எண் – 10581, ஆட்சியர் – 94441 75000, காவல் துறையினரின் Whatsapp No. 790413 6038 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.
தமிழகம் முழுவதும் உள்ள துணை சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி தமிழ்நாடு அரசு பொது சுகாதாரத் துறை கிராம/பகுதி/சமுதாய செவிலியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு ஒருங்கிணைப்பாளர்கள் நிர்மலா, கோமதி, தமிழ்ச்செல்வி, ராஜலட்சுமி உள்ளிட்டோர் கலெக்டர் விஷ்ணு சந்திரனிடம் நேற்று (ஜூன் 25) மனு அளித்தனர்.
கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண் தம்புராஜ் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியின் வாயிலாக நடைபெறும் திட்டப்பணிகள் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் நடைபெறும் அனைத்து திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்தும் துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக, 270 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயணச் சலுகை அட்டைகளை மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு நேற்று (ஜூன் 25) வழங்கினார். உடன், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் முருகேசன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் இன்று காலை 9.10 மணியளவில் காவல்துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து தூய நெஞ்சக் கல்லூரி வளாகம் வரையில் போதைப் பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சியிலிருந்து பெங்களூருக்கு ரயில் இயக்கப்பட வேண்டுமென ரயில் பயணிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்திருந்தனர். அந்த வகையில், பகல் நேரத்தில் திருச்சியில் இருந்து வந்தே பாரத் ரயில் சேவை இயக்கப்பட உள்ளது. இது பயணிகளிடையே நல்ல வரவேற்பு பெறும் என்ற நம்பிக்கை ரயில்வேதுறைக்கு உள்ளது. தற்போது, மதுரையிலிருந்து திருச்சி வழியாக பெங்களூருக்கு வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
சித்தோடு அடுத்த எல்லீஸ்பேட்டை பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரியில் நாளை (ஜூன் 27) மாவட்ட அளவிலான பி.எப். விழிப்புணர்வு மற்றும் குறைதீர் கூட்டம் (நிதி ஆப்கே நிகட்) நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் சந்தாதாரர்கள், தொழில் அதிபர்கள் மற்றும் விலக்களிக்கப்பட்ட நிறுவனங்கள் பங்கேற்று பயன்பெறலாம் என ஈரோடு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் மண்டல ஆணையாளர் வீரேஷ் தெரிவித்துள்ளார்.
கோவையில் அம்பேத்கர் சிலை வைக்க மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றியத. இதையடுத்து அனைத்து துறைகளும் அனுமதி அளித்துள்ளது. கோவை மாநகர காவல் துறை மட்டும் அனுமதி மறுக்கப்பட்டு வருவதை எதிர்த்து டெல்லியில் உள்ள தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் கோவை மாவட்ட ஆட்சியருக்கும், மாநகர காவல் ஆணையருக்கும் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Sorry, no posts matched your criteria.