Tamilnadu

News January 11, 2026

தருமபுரி: படை வீரர்கள் குறைதீர்க்கும் கூட்டம் அறிவிப்பு!

image

தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் புதிய அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் முன்னாள் படை வீரர் மற்றும் அவரது சார்ந்தோர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், வரும் ஜனவரி-13 மாலை 4:30 மணி அளவில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் படை வீரர்கள் பல்வேறு குறைகளையும் கருத்துகளையும் தெரிவித்து பயன்பெறுமாறு, தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் அவர்கள் இன்று (ஜன.10) தெரிவித்துள்ளார்.

News January 10, 2026

நாமக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில், இரவு நேர காவல் ரோந்து பணிக்காக காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். குற்ற செயல்களை தடுக்கவும், சட்ட ஒழுங்கை பாதுகாக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவசர நிலை ஏற்பட்டால், பொதுமக்கள் தங்களது பகுதி காவல் அதிகாரியை நேரடியாக தொடர்பு கொள்ளலாம். இன்று (ஜன.10) ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

News January 10, 2026

திண்டுக்கல் இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று (ஜன.10) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News January 10, 2026

கடலூர்: ரோந்து செல்லும் அதிகாரிகள் எண் அறிவிப்பு

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று (ஜன.9) இரவு 10 மணி முதல் இன்று (ஜன.10) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News January 10, 2026

BREAKING: தூத்துக்குடியில் 2 டி.எஸ்.பி மாற்றம்

image

தூத்துக்குடி சரகம், விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய அசோகன் மதுரை மாவட்டம் தீடீர் நகர் உதவி காவல் ஆணையராக மாற்றம் செய்யபட்டுள்ளார். மணியாச்சியில் துணை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய அருள் மதுரை மாநகர உதவி காவல் ஆணையராக மாற்றம் செய்யபட்டுள்ளார். தமிழநாட்டில் மட்டும் 24 துணை காவல் கண்காணிப்பாளர் மாற்றம் செய்யபட்டுள்ளனர்.

News January 10, 2026

ஆவடி இரவு ரோந்து காவல் விவரங்களுக்கு

image

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி காவல் ஆணையரகத்தின் கீழ் இன்று (09.01.2026) இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை தீவிர இரவு ரோந்து நடைபெற உள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கூடுதல் ரோந்து குழுக்கள் நியமிக்கப்ப அவசர சூழ்நிலையில் தொடர்பு கொள்ள காவல் துறை வெளியிட்ட ரோந்து எண்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன

News January 10, 2026

கிருஷ்ணகிரி மக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை!

image

கிருஷ்ணகிரி மக்களுக்கு மாவட்ட காவல் துறை எச்சரிக்கை உங்களது. அலைபேசியில் நீங்கள் வெற்றி பெற்றீர்கள் அல்லது நீங்கள் அதிர்ஷ்டசாலியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள் எனக்கூறி அதிக விலை மதிப்புடைய பொருள்களை குறைந்த விலைக்கு தருவதாக கூறி உங்களிடம் இருந்து பணம் பறிக்கும் மோசடி என்று கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது. இது போன்ற குறுஞ்செய்திகளை யாரும் நம்ப வேண்டாம், என அறிவுறுத்துள்ளனர்.

News January 10, 2026

கோவையிலிருந்து இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள்

image

பொங்கல் பண்டிகைக்கு கோவையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளுக்காக, TNSTC (கோவை) (ஜன.10) அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, ஜன.13-15 வரை சிறப்புப் பேருந்துகள் சிங்காநல்லூர் பேருந்து நிலையம்: மதுரை, தேனி மற்றும் தென் மாவட்டங்கள். சூலூர் பேருந்து நிலையம்: கரூர், திருச்சி மார்க்கமாகச் செல்லும் ஊர்கள். காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம்: சேலம், திருப்பூர், ஈரோடு, மேட்டுப்பாளையம் ஆகும்.

News January 10, 2026

குடியரசு தின முன்னேற்பாடு குறித்து ஆலோசனைக் கூட்டம்

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் குடியரசு தின விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் இன்று (ஜன.10) நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் கி. அரிதாஸ் மற்றும் பல முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News January 10, 2026

சென்னையில் இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

சென்னையில் இன்று (ஜன.10) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!