India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காரைக்காலில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனை அடுத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறிஞர் அண்ணா அரசு கல்லூரி வளாகத்தில் உள்ள பாதுகாப்பு அரையில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்ட நிலையில் இன்று மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான மணிகண்டன் அந்த மையத்திற்கு சென்று அங்கு அமைக்கப்பட்டுள்ள சி.சிடிவி கேமராவில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தி.மலை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2024 – 2025 ஆம் ஆண்டுக்கான முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி தொடங்கப்பட உள்ளது. இப்பயிற்சியில் சேர விரும்பும் மாணவா்கள் இணைய வழியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, தி.மலை கூட்டுறவு மேலாண்மை நிலையம், கீழ்நாச்சிப்பட்டு என்ற முகவரியில் நேரிலோ அல்லது 04175-254793, 9942011945 என்ற எண்களிலோ அல்லது மின்னஞ்சல் மூலமோ தொடா்பு கொள்ளலாம்.
மழை பெய்து வெப்பம் தணிவதற்காகவும், கோடையில் குடிநீர் தட்டுப்பாடு நீங்கவும், விவசாயிகள் நலன் காக்கவும், நாடு செழிக்கவும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. கருங்கல்பாளையம் காவேரிக்கரையில் சிவாச்சாரியார்கள்,வருணபகவானுக்கு சிறப்பு வழிபாடு நடத்தினர். 21 சிவாச்சாரியார்கள் காவிரிக்கரை படித்துறையில் அமர்ந்து பூஜை செய்தனர். பிறகு காவிரி ஆற்றில் ஒரு மணி நேரம் சிவாச்சாரியார்கள் இறங்கி ஜெபித்தனர்.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலுக்கா, மோர்தானா அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதை தொடர்ந்து அக்ராவரம் ஏரிக்கு வரும் தண்ணீரை மலர் தூவி வரவேற்றார் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலு. இதில் விவசாயிகள், ஊர் பொதுமக்கள், திராவிட முன்னேற்ற கழகம் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடன் இருந்தனர்.
மே 5 வணிகர் தின மாநாடு முன்னிட்டு தமிழக முழுவதும் கடைகள் அடைப்பது தொடர்பாகவும் மற்றும் மார்க்கெட்டில் அடிப்படை வசதிகளை பெறுவது தொடர்பாகவும் ஆலோசனை கூட்டம் கோத்தகிரி மார்க்கெட் வியாபாரிகள் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட தலைவர், செயலாளர், பொருளாளர் தலைமை தாங்கினர். உடன் கோத்தகிரி மார்க்கெட் சங்க பொறுப்பாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஏஜி&பி பிரதான் நிறுவனம் சார்பில் குழாய் மூலம் வீடுகளுக்கு சமையல் இணைப்பு விரிவாக்கம் குறித்து பிராந்திய மேலாளர் இசக்கி முத்து பூமாரி கூறியதாவது: ராமநாதபுரம், பரமக்குடி, ராமேஸ்வரம் ஆகிய நகரங்களில் அடுத்த 8 ஆண்டுகளில் 41 ஆயிரம் வீடுகளுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயு வழங்க ஏஜி&பி நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. சிறப்பு திட்டத்தில் டெபாசிட் இல்லாத எரிவாயு இணைப்பு வழங்கப்படும் என்றார்.
போக்குவரத்து துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், போக்குவரத்து ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து சங்க ஒன்றிப்பு ஊழியர்கள் இன்று ஒரு நாள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதனால் கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தொழிலாளர்கள் யாரும் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
திண்டுக்கல் நகரில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் இன்று (ஏப்.24) கோடை கால வெயிலின் பொதுமக்களின் தாகத்தை தீர்க்க திண்டுக்கல் வடக்கு காவல் துறையினரும் தனியார் மாத பத்திரிக்கை நிறுவனமும் இணைந்து ரவுண்ட் ரோடு பகுதியில் தண்ணீர் பந்தல் அமைத்துள்ளனர். துவக்க நாளான இன்று நீர்மோர், தர்பூசணி பழம், குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட மழை வெள்ளத்தின் போது பாதிக்கப்பட்ட திரேஸ்புரம் பகுதியில் மாநகராட்சி சார்பில் புதிதாக மழைநீர் வடிகால் அமைக்கும் பணி துவங்கியுள்ளது. இந்தப் பணிகளை இன்று மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
நாமக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் அமைந்துள்ள நீச்சல் குளத்தில் முறையான பயிற்சியாளர்களைக் கொண்டு சிறப்பாக நீச்சல் பயிற்சி அளிக்கப்படுகிறது. மூன்றாம் கட்ட பயிற்சி ஏப்ரல் 27 முதல் மே 8 வரை நீச்சல் தெரிந்தவர்களுக்கு காலை 9 முதல் மாலை 5 வரை 1 மணி நேரத்திற்கு 1 நபருக்கு ரூ.59 செலுத்தி நீந்தலாம்.
மேலும் விபரங்களுக்கு பயிற்சியாளர் சிங்குதுரையை 8508641786 என்ற மொபைல் போனில் தொடர்பு கொள்ளலாம்.
Sorry, no posts matched your criteria.