India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெண் காவலர்களை இழிவாக பேசியதாக பிரபல யூடியூப்பர் சவுக்கு சங்கர் தேனியில் கைதான போது கஞ்சா வைத்திருந்ததாக தேனி PC பட்டி போலீசார் பதிவு செய்த வழக்கில் இன்று சவுக்கு சங்கர் சென்னை சிறையிலிருந்து மதுரை மாவட்ட NDPS நீதிமன்றத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் நீதிபதி முன் இன்று ஆஜரானார். அதைதொடர்ந்து, ஜூன் 19ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி செங்கமல செல்வன் உத்தரவிட்டார்.
புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் மொத்தம் 26 வேட்பாளர் களமிறங்கினர். தேசிய கட்சியான பாஜக, காங்கிரஸ், பகுஜன் சமாஜ், மாநில கட்சிகளான அதிமுக, நாம் தமிழர், சுசி கம்யூனிஸ்ட், ஒருங்கிணைந்த இந்திய குடியரசு கட்சிகளை தவிர மற்ற 19 பேர் சுயேட்சைகளாக போட்டியிட்டனர்.
இவர்களில் காங்கிரஸ், பாஜகவை தவிர அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.
தருமபுரி புதியதாக கட்டப்படும் வரும் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி அவர்கள் மரக்கன்றுகள் நட்டார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பிலிப்பின்ஸ் ராஜ்குமார், கோட்டாட்சியர் காயத்ரி, வட்டாட்சியர் ஜெயசெல்வன் , வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தாமோதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட சமூக நல அலுவலகத்தின் மூலம் வரும் 21ஆம் தேதி அன்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. எனவே மாவட்டத்தில் உள்ள திருநங்கைகள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி சட்டப்பணிகள் ஆணைய உறுப்பினர் செயலரும், மாவட்ட நீதிபதியுமான அம்பிகா இன்று வெளியிட்டுள்ள செய்தியில், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் காரைக்கால் மாவட்ட நீதிமன்ற வளாகம், மாகே, ஏனாம் நீதிமன்ற வளாகங்களில் வரும் ஜூன்.8ஆம் தேதி காலை 10 மணிக்கு தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது. தங்கள் வழக்குகளை சமாதானமான முறையில் தேசிய மக்கள் நீதிமன்றத்தின் மூலம் தீர்வு பெற்று பயனடையுமாறு தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று சுதந்திர தின விழாவில் தமிழக முதலமைச்சர் அவர்களால் சிறந்த சமூக சேவகர் மற்றும் சிறந்த தொண்டு நிறுவனங்களுக்கு சுதந்திர தின விருது வழங்கப்பட உள்ளது. எனவே சிவகங்கை மாவட்டத்தில் விருது பெறுவதற்கு தகுதிகளையுடைய நபர்கள் தமிழக அரசின் https://awards.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார்.
தர்மபுரி மாவட்டத்தில் இன்று மாலை 5 மணி வரை இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கோடை முடிந்தும் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில், இந்த மழை குறித்த அறிவிப்பு சற்று நிம்மதியை தந்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று மாலை 5 மணி வரை இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கோடை முடிந்தும் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில், இந்த மழை குறித்த அறிவிப்பு சற்று நிம்மதியை தந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று மாலை 5 மணி வரை இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கோடை முடிந்தும் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில், இந்த மழை குறித்த அறிவிப்பு சற்று நிம்மதியை தந்துள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் இன்று மாலை 5 மணி வரை இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கோடை முடிந்தும் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில், இந்த மழை குறித்த அறிவிப்பு சற்று நிம்மதியை தந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.