Tamilnadu

News April 25, 2024

பழமை வாய்ந்த திண்டல் முருகன் கோவில்

image

திண்டல் முருகன் கோவில், ஈரோட்டிலிருந்து பெருந்துறை செல்லும் வழியில் 60 மீட்டர் உயரத்தில் உள்ள மலைக்குன்றில் அமைந்துள்ளது. அருணகிரிநாதரால் பாடல் பெற்ற 178 தலங்களில், திண்டல்மலை வேலாயுத சுவாமி கோயிலும் ஒன்று. கொங்கு நாட்டு ஆலய அமைப்பில், தீபஸ்தம்பத்தைக் கோயில் வெளியே நிறுத்திக் கட்டுவதாக இக்கோவில் அமைக்கப்பட்டுள்ளது. ரச மரத்து விநாயகர் நாகர் படை சூழ அமர்ந்திருப்பது சிறப்பாக கருதப்படுகிறது.

News April 25, 2024

நாமக்கல்: வரும் 30ல் இலவச பயிற்சி

image

நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி வளாகத்தில், அமைந்துள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில், வரும் 30ம் தேதி காலை 10 மணிக்கு, கோடைக்கால பயிரில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள் என்ற தலைப்பில் ஒரு நாள் இலவசப் பயிற்சி நடைபெறுகிறது கலந்துகொள்ள ஆர்வமுள்ளவர்கள் 04286 266345, 266650, 7010580683, 9597746373, 9943008802 என்கிற தொலைபேசி எண்களை தொடர்புகொண்டு முன்பதிவு செய்துகொள்ளலாம்.

News April 25, 2024

கடலூர்: வெடிகுண்டு வீசிய 4 பேர் கைது!

image

கடலூர், குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச மர்ம நபர்கள் இன்று நள்ளிரவு முயற்சித்துள்ளனர். அப்போது அவர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலைக்கு பின்னால் இருக்கும் பழைய ஊராட்சி மன்ற கட்டிடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

News April 25, 2024

திருச்சி: கார் கவிழ்ந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

image

துவரங்குறிச்சி அருகே திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் யாகபுரம் என்ற இடத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மணப்பாறை யூனியன் அலுவலகத்தில் மேற்பார்வையாளராக பணிபுரியும் விஜயலட்சுமி மற்றும் அவரது கணவர் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து துவரங்குறிச்சி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News April 25, 2024

திண்டுக்கலின் அடையாளமான கோட்டை

image

திண்டுக்கல் மலைக்கோட்டை, சுமார் 290 அடி உயரம் கொண்ட இந்த மலைக்கோட்டை சுமார் 1210 அடி நீளமும், 900 அடி அகலமும் கொண்டது. இது புரட்சி காலகட்டத்தில் ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் ஆகியோர்களின் கட்டுப்பாட்டில் இருந்து, 1790 இல் இக்கோட்டையை ஆங்கிலேயர்கள் கைப்பற்றி 1860 வரை ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். கைதி அறைகள், ஆயுதக்கிடங்குகள்மற்றும் பீரங்கிகள் போன்றவையை இங்கு காணலாம்.

News April 25, 2024

புதுகை: கழுத்தை அறுத்து கொலை

image

பொன்னமராவதி அருகே கண்மாய்கரையில் இன்று பொதுமக்கள் சென்ற பொழுது அங்கு உடல் முழுவதும் கத்தியால் குத்தி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் கத்தியுடன் இளைஞர் ஒருவர் சடலமாக கிடைப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தகவலில் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பிரேதத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில் அஞ்புளிபட்டியை சேர்ந்த ராமன் மகன் அடைக்கப்பன் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

News April 25, 2024

நாமக்கல்: ஆண் சடலம் மீட்பு!

image

குமாரபாளையம் காவிரி ஆற்றின் பழைய காவேரி பாலம் அடியில், அடையாளம் தெரியாத 65 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் இருப்பதாக இன்று காலை குமாரபாளையம் பொதுமக்கள் காவல்துறையினரிடம் தகவல் கூறினர். இது குறித்து வி.ஏ.ஒ. முருகன் கொடுத்த புகாரின் பேரில், குமாரபாளையம் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி யார்? எந்த ஊர்? என்ற விபரம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

News April 25, 2024

புதுவை: அறுவை சிகிச்சை செய்த வாலிபர் பலி

image

முத்தியால்பேட்டையை சேர்ந்த ஹேமசந்திரன் என்பவர் டிசைனிங் பணியில் உள்ளார். உடல் பருமன் காரணமாக சென்னை பம்மலில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்துள்ளார். இந்நிலையில்,  நேற்று அறுவை சிகிச்சையின் போது அவர் கார்டியாக் அரெஸ்ட் காரணமாக இறந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவித்துள்ளனர். ஆனால், அவரது குடும்பத்தினர் பம்மல் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

News April 25, 2024

3 பேர் மீது வழக்கு

image

ஜோலார்பேட்டை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் இன்று திரியாலம் கூட்டு ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மதன் ராஜ் உள்பட 3 இளைஞர்கள் சாலையில் நின்று கொண்டு இந்த வழியாக யாரும் செல்ல கூடாது என தகாத வார்த்தைகளால் திட்டி கொண்டு இருந்தனர். இவர்கள் 3 பேர் மீது ஜோலார்பேட்டை போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 25, 2024

தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் நிலைபாடு

image

கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று (ஏப்.24) வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறுபான்மையினர் வாக்குகளை மொத்த அறுவடை செய்ய மதவாத அரசியலை செய்து வருவதே காங்கிரஸ் உள்ளிட்ட ‘இண்டி’ கூட்டணி கட்சிகள்தான். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ஒவ்வொருவரின் சொத்துகள் கணக்கிடப்படும்” என காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!