India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

அருமனை பகுதியில் தனியார் பள்ளி ஆசிரியர் ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அவரது WhatsApp, Instagramஐ.டிக்கு பல எண்களில் இருந்து ஆபாச குறுஞ்செய்தி வந்துள்ளது. மேலும் போலி Instagram ஐ.டி உருவாக்கி அவருக்கு ஆபாச செய்தி அனுப்பி மிரட்டலும் வந்துள்ளது. இதுகுறித்து ஆசிரியர் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் பைங்குளத்தை சேர்ந்த அருள்லிங்கம் என்பவரை நேற்று கைது செய்தனர்.

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் நகராட்சி அம்பாசமுத்திரம் அகத்தியர் கோவில் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த அம்பாசமுத்திரம் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக IMD கணித்துள்ளது. அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் இன்று(ஜன.11) காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. (ஈரோடு மக்களே உங்க ஏரியால் மழை பெய்தால் கமெண்ட் பண்ணுங்க)

கெலமங்கலம், குந்துமாரனப்பள்ளியை சேர்ந்தவர் குரு பிரசாத், கடந்த 7ம் தேதி குத்திக் கொலை செய்யப்பட்டார். பணப் பிரச்னை காரணமாக கொலை செய்யப்பட்டதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலையில் பதுங்கி இருந்த சுரேஷ், பாபு, நவீன், தேவராஜ், வெங்கடேஷ் ஆகிய 4 பேரை நேற்று போலீசார் கைது செய்தனர்.

ஆலடி அடுத்த இருளக்குறிச்சியை சேர்ந்தவர் முத்து மகன் மணிகண்டன் (17). தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மணிகண்டன், அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று மின்சாரம் இல்லாததால், அங்குள்ள மின்கம்பத்தில் ஏறி சரிசெய்ய முயன்றார். அப்போது அவர் மீது மின்கம்பி உரசியதில், மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே மணிகண்டன் உயிரிழந்தார். இதுகுறித்து ஆலடி போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.

புதுவை ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் அம்பேத்கர் யாத்திரை’ திட்டத்தில், டாக்டர் அம்பேத்கர் நினைவிடங்களுக்கு 8 நாள் இலவச டூர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார். பிப்.25ம் தேதி அன்று தொடங்குகிற இந்த டூரில் பங்குபெற விரும்புவோர், அலுவலகத்தை அணுகி விண்ணப்பங்களை பெற்று ஜன.19-க்குள், புதுவை ஆதிதிராவிட நலத்துறைக்கு அனுப்ப வேண்டும் என கூறியுள்ளார்.

தஞ்சை கீழவாசல் பகுதியை சேர்ந்தவர் முகமது இஸ்மாயில். இவர் பழைய பஸ் நிலையம் அருகில் துணிக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று அதிகாலையில் திடீரென அவரது கடையிலில் தீ விபத்து ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்ததாக கூறப்படுகிறது.

மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் இலவச பஸ் பயண அட்டை பெறுவதற்கு இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வருகிற 31-ந் தேதி வரை முகாம் நடைபெறுகிறது. அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து மற்ற நாட்களில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முகாம் நடைபெறும். எனவே, மாற்றுத்திறனாளிகள் இம்முகாமில் கலந்துகொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

மணப்பட்டி இந்திரா நகரை சேர்ந்தவர் அம்மாகண்ணு(70). இவர் மதுரை – திருச்சி நான்கு வழிச்சாலையில் இன்று காலை, புரண்டிபட்டி அருகே சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சென்னையை நோக்கி சென்ற கார் இவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே மூதாட்டி உயிரிழந்தார். இவ்விபத்து குறித்து கொட்டாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து கார் டிரைவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

தென்மேற்கு வங்ககடல் காற்றழுத்த தாழ்வு நிலை கரையினை கடக்க உள்ளதால் கடல்சார் வாரிய துறைமுக அலுவலகத்தில் திடீர் காற்றுடன் மழை பெய்வதை குறிக்கும் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.