India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராமநாதபுரம் அரண்மனை அருகே உள்ள ஒரு பிரபல ஓட்டலில், பதப்படுத்தி பல நாட்களான மட்டனை பயன்படுத்தி தயாரான பிரியாணி விற்பனை குறித்து வாடிக்கையாளர் ஒருவர் உணவு பாதுகாப்பு துறையினருக்கு இன்று புகாரளித்தார். அங்கு வந்த அதிகாரிகள் மிகுந்த துர்நாற்றம் வீசிய பிரியாணி மற்றும் பதப்படுத்திய மட்டன் துண்டுகளை எடுத்து ஆய்வுக்கு அனுப்பினர். இதுகுறித்து ஓட்டல் உரிமையாளரிடம் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
சென்னை: காசிமேடு எஸ்என் செட்டி சாலை அருகே இன்று தேசிங் என்ற ரவுடி படுத்திருந்த போது 3 பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடியது. இது தொடர்பாக காசிமேடு போலீசார் தேசிங்கின் பிரேதத்தை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் காசிமேடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனை அதிகரித்துள்ளது. வழக்கமான விற்பனையில் இருந்து 60% பீர் விற்பனை கூடியுள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் வெயிலின் தாக்கம் குறையாததால் பீர் விற்பனை அதிகாரிக்கும் என விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஊத்தங்கரை அடுத்த காட்டேரி பகுதியில் நேற்று மதியம் இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்து வந்த ஊத்தங்கரை போலீசார் பிரேதத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் அவர் தர்மபுரி மாவட்டம் சந்திராபுரம் பகுதியை சார்ந்த ராஜா என்பது தெரியவந்தது. இதுகுறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அரக்கோணம் அடுத்த கடம்பநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நித்திஷ்( 19). இவர் இன்று பைக்கில் தக்கோலம் கூட்ரோடு வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி நித்திஷ் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். பிரேத பரிசோதனைக்கு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டது. தக்கோலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி, தென்பெண்ணை ஆற்றில் அருகில் உள்ள திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றானது. இக்கோயிலின் சிறப்பாக பெருமாள் ஒரு காலில் நின்ற நிலையில், மற்றொரு காலை மட்டும் நீட்டி தூக்கியபடி நிற்கின்றார். இது நிலத்தை அளக்கும் கோலமாகும். கோபுர நுழைவாயில்கள் கோயிலை ஒட்டி இல்லாமல், கோயிலை ஒட்டிய தெருக்களின் நுழைவாயில்களாக உள்ளது தனித்துவமானது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடப்பு கோடைப் பருவத்தில் உளுந்து, எள் மற்றும் நிலக்கடலை ஆகிய பயிர்களை சாகுபடி செய்வதற்கான கோடை சாகுபடி சிறப்பு திட்டமானது தற்போது வேளாண்மைத் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மானியமில்லா இடுபொருட்களான நுண்ணூட்ட கலவைகள் மற்றும் நோய் தாக்குதலை தடுக்க பயன்படுத்தப்படும் இடுபொருட்களை வேளாண்துறை மூலம் பெறலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
தர்மபுரி: ரேக அள்ளி அண்ணாநகர் பகுதி சேர்ந்த எல்லம்மாள் 51. கடந்த 22ம் தேதி இரவு 10 மணிக்கு சாலை கடக்கும்போது பொம்மிடி பகுதியில் இருந்து வந்த மினி சரக்கு வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காயமடைந்த எல்லம்மாள் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது மகள் மகேஸ்வரி இன்று பொம்மிடி போலீசில் புகார் அளித்தார். புகார் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட நியோமேக்ஸ் நிதி நிறுவனம் மோசடி செய்த வழக்கில் ஏற்கனவே 30 முக்கிய நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்நிறுவனத்தின் கிளை நிறுவன இயக்குனர்களான சார்லஸ், இளையராஜா, சஞ்சீவ் குமார் உள்ளிட்ட 4 பேரை மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இன்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரணியலிருந்து நேற்று இரவு கேரளா மாநிலம் திருவனந்தபுரத்திற்கு லாரியில் நைலான் கயிறு ஏற்றி சென்று கொண்டிருந்த போது ஆழ்வார் கோவில் பகுதியில் நான்கு வழிசாலை வளைவான இடத்தில் திரும்பும்போது லாரி ஒட்டுனரின் கட்டுபாட்டை இழந்து குளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் ஒட்டுனர் ஆனந்த் மற்றும் வினோத் இருவரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
Sorry, no posts matched your criteria.