India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கேரள மாநிலத்திலிருந்து தமிழகத்திற்கு தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கடத்தி வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தென்காசி மாவட்டம் புளியரை வழியாக 34 கிலோ புகையிலைப் பொருட்கள் கொண்டு வந்த ஆய்க்குடி பகுதியை சேர்ந்த மாரிமுத்து என்பவரும் தென்மலை பகுதியை சேர்ந்த ஜோபின் ஜாய் என்பவரும் புளியறையில் நடைபெற்ற வாகன தணிக்கையில் புகையிலை பொருட்களோடு பிடிபட்டனர். போலீசார் கைது செய்து விசாரணை.

விளாத்திகுளம் அருகே உள்ள மிட்டா வடமலாபுரத்தை சேர்ந்தவர் பேச்சியம்மாள்(70). ஜன.3 அன்று காணாமல் போன இவர் அங்குள்ள காட்டுப் பகுதி ஊரணி கிணற்றில் கை, கால்கள் கட்டப்பட்டு உடலை கல்லால் சேர்த்து கட்டப்பட்டு அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேச்சியம்மாள் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டாரா? என்ற கோணத்தில் காடல்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாளை (ஜன.13) கொண்டாடப்படவுள்ள போகிப் பண்டிகையை முன்னிட்டு பழைய டயர்கள், பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று அரியலூர் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்கும் வகையில் புகையில்லா போகி கொண்டாடவும், விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

நாளை (ஜன.13) கொண்டாடப்படவுள்ள போகிப் பண்டிகையை முன்னிட்டு பழைய டயர்கள், பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று அரியலூர் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்கும் வகையில் புகையில்லா போகி கொண்டாடவும், விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

உக்கடம் பகுதியைச் சேர்ந்தவர் முனியப்பன் (62). இவர் அளவுக்கு அதிகமாக மதுகுடித்துவிட்டு நேற்று முன் தினம் வீட்டிற்கு வந்துள்ளார். அவரது மகன், முனியப்பனை கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சல் அடைந்த முனியப்பன், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலூர் வினோபா காலனியை சேர்ந்தவர் துரைப்பாண்டி மனைவி அழகம்மாள்(35). இவருக்கு நுரையீரல் மற்றும் உப்புச்சத்து நோய் ஏற்பட்டது. நேற்று முன்தினம் (ஜன.10) இவர் வீட்டில் மயங்கி விழுந்ததால், மேலூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மதுரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து மேலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியில் தனியார் திருமண மண்டபம் ஒன்று உள்ளது. மண்டபத்தின் மேல்பகுதியில் உள்ள தங்கும் அறையில் பாலியல் தொழில் நடப்பதாக வடசேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் நேற்று சோதனை செய்தனர். அதில் 2 இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் நடப்பது தெரியவந்தது. இதையடுத்து பாலியல் தொழில் நடத்தியதாக டெசின், மிதுன் பாபு உட்பட 4 பேரை போலீசார் கைது செய்து 2 பெண்களையும் மீட்டனர்.

மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் நேற்று காரில் ராமேவரத்திற்கு சாமி தரிசனம் செய்ய வந்துள்ளனர். அப்போது பாப்பாகுடி பகுதியில் முன்னாள் சென்ற காரை முந்த முயன்ற போது எதிரே வந்த லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் காரில் சென்ற சிவ்சரன்பால்(60) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து கார் ஓட்டுநர் யாஸ்சர்மா, லாரி ஓட்டுநர் டெக்கரேஸ்வரன் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரியகுளம் அருகே எ.புதுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பிரபு. இவருக்கு கடன் தொல்லை அதிகமாக இருந்தது. இதனால் கடனை திருப்பி செலுத்த முடியாமல் மன வேதனையில் இருந்து வந்துள்ளார். அதன் காரணமாக நேற்று முன் தினம் பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பெரியகுளம் போலீசார் வழக்குப்பதிவு.

சிவகாசி தட்டாவூரணியை சேர்ந்தவர்கள் பாலகுரு – முருகேஸ்வரி தம்பதியினர். இவர்களது முத்த மகன் சிதம்பரம் பொங்கல் பரிசு தொகுப்பான ரூ.3000 வாங்கி அதனை தாயிடம் கொடுக்காமல் மது குடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சிதம்பரத்திடம் அவரது தம்பிகள் சுப்பிரமணி, அருண்குமார் கேட்டபோது தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சிதம்பரம் தனது தம்பிகள் 2 பேரை கத்தியால் வெட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Sorry, no posts matched your criteria.