India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் வருகிற 14-ம் தேதி பொதுமக்களை ஒருங்கிணைத்து ஒரே இடத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து குக்கிராமங்களிலும் பெரிய அளவிலான தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அனைத்து ஊராட்சிகளிலும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களை கொண்டு கோல போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட உள்ளது என ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.

போகி பண்டிகையான நாளை (ஜன.13) பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்துவதால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுகிறது. எனவே பொதுமக்கள் 2026 போகி பண்டிகை அன்று பிளாஸ்டிக், டயர், ட்யூப் போன்றவற்றை எரிக்காமல் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பண்டிகையை கொண்டாடும்படி மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கந்திலி, பெரியகரம் பகுதியை சேர்ந்தவர் பிரபு. இவரது மனைவி சகுந்தலா (வயது 35). இவருக்கும் அதே தெருவில் வசிக்கும் காமராஜர் மனைவி மகேஸ்வரி என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. நேற்று முன்தினம் இருவருக்கும் ஏற்பட்ட தகராறு, கைகலப்பாக மாறியது. இதுகுறித்து இருதரப்பும் கொடுத்த புகாரின் பேரில் மகேஸ்வரி, காமராஜ், சகுந்தலா, ராஜ்குமார் ஆகிய 4 மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

தஞ்சையில் 100 நாள் வேலை திட்டத்தில் மகாத்மா காந்தி பெயரை நீக்கிய மத்திய அரசை கண்டித்து, காங்கிரஸ் கட்சியினர் நேற்று தஞ்சை தலைமை தபால் நிலையம் அருகில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் பி.ஜி. ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மேலும் இந்த போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

காமன்தொட்டியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் பிரவீன்குமார் (38). கடந்த 7-ம் தேதி காமன்தொட்டி நெடுஞ்சாலையில் 5 பேர் தங்களை போலீசார் என கூறி, பிராவின் குமாரை காரில் கடத்தியுள்ளனர். மேலும் ரூ.30 லட்சம் கேட்டு மிரட்டினர். சுதாரித்து கொண்ட பிரவீன் பணம் காரில் உள்ளது எடுத்து வருகிறேன் என கூறி தப்பினார். இதையடுத்து போலீசார் மல்லேஷ், நெல்சன் (42), வரதராஜன் (30), ராஜசேகர் (50) ஆகியோரை கைது செய்தனர்.

புதுச்சேரி அரசு ராஜீவ் காந்தி கால்நடை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிலைய புல முதல்வா் முருகவேல் வெளியிட்ட செய்தியில், கிராமப்புற ஆதிதிராவிடா் மக்களுக்கு இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் இந்திய வேளாண் பயோடெக்னாலஜி நிறுவனங்களின் நிதியுதவியுடன், ராஜீவ் காந்தி கால்நடை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், நவீன முறையில் கோழி வளா்ப்பு பயிற்சி 19ஆம் தேதி நடைபெறும் என்றார்.

அரூர், மேல் பாட்ஷாபேட்டையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அப்துல் ஹமீது (55). ஆட்டோவில் 2 பயணிகளுடன் மொரப்பூர்-கல்லாவி ரோட்டில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் டிரைவர் அப்துல் ஹமீது பலத்த காயம் அடைந்தார். பின்னர் தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அப்துல் ஹமீது பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும், பொதுமக்கள் “புகையில்லா போகி” கடைபிடிக்க வேண்டும், போகி பண்டிகை அன்று பழைய கழிவுகளை எரிக்காமல் நகராட்சி நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ள ஐந்து இடங்களில், பழைய கழிவுகளை தூய்மை பணியாளர்களிடம் கொடுக்கலாம். அறிவிக்கப்படாத இடங்களில் குப்பைகளை எரித்தால் அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி ஆணையர் வீர முத்துக்குமார் செய்தி வெளியிட்டுள்ளார்.

திண்டிவனம் சந்தைமேடு கூட்டுரோட்டில் ரோஷணை போலீசார் நடத்திய வாகன சோதனையில், ஆந்திராவிலிருந்து கடத்தி வரப்பட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களைப் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 லாரிகளைச் சோதனையிட்டதில், மொத்தம் 330 பாக்கெட் புகையிலை பொருட்கள் சிக்கின. இதையடுத்து லாரி ஓட்டுநர்கள் நடராஜன் (48) மற்றும் சிற்றரசன் (49) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்த்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே, கஞ்சா போதையில் ரகளையில் ஈடுபட்ட இளைஞர்களைத் தட்டிக்கேட்ட பத்திர எழுத்தர் இந்திரன் என்பவரை, அந்த கும்பல் கத்தியால் வெட்டியது. இதில் காலில் பலத்த காயமடைந்த இந்திரனுக்கு, வந்தவாசி அரசு மருத்துவமனையில் 18 தையல்கள் போடப்பட்டன. இதுகுறித்து பொன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான கும்பலைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.