India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், வேலப்பன் ஏரிக்கரையில் மது அருந்தி கொண்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்துகொண்டிருந்த செல்லையா (29), சேகர் (54), மற்றும் குணசேகரன் (26) ஆகியோரை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குமரி மாவட்டத்தில் உங்கள் பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், மின்கம்பிகள், திடீர் கரண்ட் கட் உள்ளதா? இது குறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகார் அளிக்கலாம். 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். அவசர உதவிக்கு – 94987 94987 என்ற எண்ணிலும் அழைக்கலாம். இத்தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில், குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 11 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 46 2 சக்கர வாகனங்கள் என மொத்தம் 58 வாகனங்கள் அரசுக்கு ஆதாயம் செய்யும் பொருட்டு, பொது ஏலத்தில் விடப்பட உள்ளது. மயிலாடுதுறை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் முகாம் அலுவலகத்தில், வருகிற 21-ஆம் தேதி காலை 10 மணிக்கு ஏலம் நடைபெறுகிறது. விபரங்களுக்கு 9626169492 தொடர்பு கொள்ளலாம்.

விருதுநகர் அருகே ரோசல்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் குருசாமி(54). இவர் தனது இருசக்கர வாகனத்தில் சிவகாசி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அழகாபுரி முக்கு ரோட்டில் சென்றபோது ராஜபாளையம் சென்ற அரசு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. இதில் குருசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் விபத்து தொடர்பாக ஆமத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தேனி மக்களே, வேளாண்மை கூட்டுறவு சங்கம் (SIMCO) சார்பில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பணிகளுக்கு 52 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 21 வயது நிரப்பிய 10th,12th, டிப்ளமோ, ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் ஜன.20ம் தேதிக்குள் இங்கு <

தஞ்சாவூர், பாபநாசத்தில் உள்ள புகையிரத வீதியில் நேற்று (ஜன.11) காருக்குள் பெண் குழந்தை சிக்கிக்கொண்டுள்ளது. இதனை அடுத்து அந்த குழந்தையின் பெற்றோர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பாதுகாப்பாக குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

சிவகங்கை மக்களே, மின் இணைப்பு மோசடிகளை தடுக்கவும், 100 யூனிட் மின்சாரம் மக்களுக்கு முறையாக கிடைக்கவும் மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதை அரசு கட்டாயமாக்கிருக்கு. இங்கு <

தென்காசி மக்களே,மின் இணைப்பு மோசடிகளை தடுக்கவும், 100 யூனிட் மின்சாரம் மக்களுக்கு முறையாக கிடைக்கவும் மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதை அரசு கட்டாயமாக்கிருக்கு. இங்கு <

கரூர், வாங்கல் பகுதியில் பாலசுப்பிரமணி என்பவர் நேற்று தனது பைக்கில் சென்று கொண்டு இருந்தார். அப்போது பைக் நிலைதடுமாறி அருகிலிருந்த வீட்டின் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வாங்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர் கோட்டை பூங்கா மைதானத்தில் அமர்ந்திருந்த பொறியியல் மாணவர் திலிப்குமார் மற்றும் அவரது உறவினர் சரவணனிடம், அவசரத்திற்கு பேசுவதாகக் கூறி 2 மர்ம நபர்கள் செல்போன் கேட்டுள்ளனர். பின்னர் கத்தியைக் காட்டி மிரட்டி அவர்களிடமிருந்து செல்போன்களைப் பறித்துத் தப்பினர். புகாரின் பேரில் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், வசந்தபுரத்தைச் சேர்ந்த ஆனந்தராஜ், உசேன் ஆகியோரை கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.