India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை மக்களவை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை நாளை(ஜூன் 4) காலை 7 மணிக்கு திட்டமிட்ட நேரத்தில் தொடங்க இருக்கிறது. இதையொட்டி, மாநகர காவல் ஆணையாளர் லோகநாதன் மேற்பார்வையில் துணை ஆணையாளர்கள், உதவி ஆணையாளர்கள், இன்ஸ்பெக்டர்கள், போலீசார் என 1500க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் 5 அடுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட உள்ளது.
தேனி மக்களவை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கையின் போது வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு வரும் கிராம உதவியாளர்களுக்கு தனித்தனியாக பல்வேறு வண்ணங்களில் டி ஷர்ட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுளது. அதன்படி ஆண்டிப்பட்டி சட்டசபை தொகுதிக்கு நீலம், பெரியகுளம்- இளம் சிவப்பு, போடி-மஞ்சள், கம்பம்-பச்சை, சோழவந்தான்-வெண்மை, உசிலம்பட்டி தொகுதிக்கு ஆரஞ்ச் நிறத்திலான டி ஷர்ட்கள் வழங்கப்பட உள்ளன.
வேலூர் பாராளுமன்ற தொகுதியின் வாக்கு எண்ணும் அலுவலர்களை மேசை வாரியாக கணினி குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கும் பணி நேற்று (ஜூன் 2) வாக்கு எண்ணிக்கை பார்வையாளர்கள் ரூபேஷ்குமார், உஜ்வல் போர்வல் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலெட்சுமி, மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று (ஜுன்., 2) மழை பெய்ததால் வெப்பநிலை சற்று குறைந்து பதிவாகியுள்ளது.
இந்த நிலையில் கடலூர் 36 டிகிரி செல்சியஸ், சிதம்பரம் 36 டிகிரி செல்சியஸ், புவனகிரி 36 டிகிரி செல்சியஸ், காட்டுமன்னார்கோயில் 36 டிகிரி செல்சியஸ், நெய்வேலி 38 டிகிரி செல்சியஸ், விருத்தாசலம் 38 டிகிரி செல்சியஸ் மற்றும் திட்டக்குடியில் 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
புதுச்சேரி ஜிப்மரில் மருத்துவ ஆராய்ச்சிப் படிப்புகளான பி.எச்டி. உயிரி வேதியியலில் – 2, தடுப்பு மற்றும் சமூக மருத்துவத்தில் – 1, மருத்துவ புற்றுநோயியலில் – 1, மகப்பேறியியலில் – 1 என மொத்தம் 5 இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வரும் ஜூலை 7 ஆம் தேதி ஆராய்ச்சிப் படிப்புகளில் சேருபவா்களுக்கான நுழைவுத் தோ்வு நடைபெறவுள்ளது.
ஆலங்குடி அருகே நெம்மலிபட்டியை சேர்ந்தவர் மணிவண்ணன் (22). இவர் நேற்று தனது காரில்
பெருங்களூரிலிருந்து புதுக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது தனபால் என்பவர் ஓட்டி வந்த அரசு பஸ்சும், காரும் எதிர் பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது. இதில் படுகாயமடைந்த மணிவண்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி
வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த அரசபாளையம் கிராமத்தில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், அங்குள்ள ஆலமரத்தில் தேனீக்கள் கூடு கட்டி இருந்துள்ளது. திடீரென கூடு கலைந்ததால் , தேனீக்கள் சாலையில் சென்ற நபர்கள், ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்ற நபர்களை கொட்டியது. இதில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மயிலாடுதுறை கச்சேரி சாலையில் நகராட்சிக்கு சொந்தமான கட்டடத்தில் உள்ள தனியார் பிரியாணி கடையில் ஆய்வுக்கு சென்ற நகராட்சி அதிகாரிகளை தாக்கிய விவகாரத்தில் முதல் குற்றவாளியான கடை நிர்வாகி அஃபில் (37). நேற்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.மேலும் அமர் உள்ளிட்ட சிலரை மயிலாடுதுறை போலீசார் தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள கூத்தக்குடி கிராமத்தில் முறையாக குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து இன்று(ஜூன் 3) நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் அரசு பேருந்தை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
நீலகிரியில் ஒரு சட்டசபை தொகுதிக்கு 14 டேபிள்கள் வீதம் மொத்தம் 84 டேபிள்கள் அமைக்கப்பட்டுள்ளன தபால் ஓட்டுகள் எண்ணுவதற்காக கூடுதலாக 7 டேபிள்கள் அமைக்கப்பட்டுள்ளன. 107 பவானிசாகர் (தனி) தொகுதி 22 சுற்று 108 ஊட்டி தொகுதி 18 சுற்று 109 கூடலுார் (தனி) தொகுதி 16 சுற்று 110 குன்னுார் தொகுதி 17 சுற்று 111 மேட்டுப்பாளையம் தொகுதி 23 சுற்று; 112 அவிநாசி (தனி) தொகுதி 23 சுற்றுகளில் ஓட்டு எண்ணப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.