Tamilnadu

News June 1, 2024

நீலகிரி: செல்போன் கொண்டுசெல்ல அனுமதி இல்லை

image

ஊட்டி நீதிமன்ற வளாக அரங்கில் நடக்கும், ‘புவி வெப்பமயம் ஆதல் மற்றும் பசுமை இல்லம் விளைவு’ என்ற தலைப்பில் வரும் 4ஆம் தேதி அன்று நடக்கும் ஓவிய போட்டியில் பங்கேற்கும் கல்லூரி மாணவர்கள், எழுது பொருட்கள், ஓவியத்தாள், அடையாள அட்டை போன்றவற்றை கொண்டு வர வேண்டும். ஓவியம் எழுதும்போது செல்போன் தடை செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

News June 1, 2024

ராம்நாடு: புதுமைப் பெண் திட்டத்தில் 3083 பேர் பயன்

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவிகள் மேற்படிப்பு படிக்க புதுமைப்பெண் திட்டத்தில் மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வரை தமிழ் வழி கல்வியில் பயின்ற மாணவிகள் இத்திட்டத்தில் கடந்த ஆண்டில் 42 கல்லூரிகளில் 3083 மாணவிகள் பயன்பெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.

News June 1, 2024

கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் வெப்பநிலை

image

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மீண்டும் வெப்பநிலை அதிகரித்து கொண்டே வருகிறது.இந்த நிலையில் நேற்று கடலூர் 38 டிகிரி செல்சியஸ், சிதம்பரம் 39 டிகிரி செல்சியஸ், புவனகிரி 39 டிகிரி செல்சியஸ், காட்டுமன்னார்கோயில் 39 டிகிரி செல்சியஸ், நெய்வேலி 41 டிகிரி செல்சியஸ், விருத்தாசலம் 42 டிகிரி செல்சியஸ், திட்டக்குடி 41 டிகிரி செல்சியஸ் மற்றும் பண்ருட்டியில் 41 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

News June 1, 2024

கிருஷ்ணகிரி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

image

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணைக்கு நீர்வரத்து கடந்த 2 நாட்களாக விநாடிக்கு 12 கன அடியாக நீடிக்கிறது. இந்நிலையில் நேற்று கிருஷ்ணகிரி அணையில் இருந்து உபரிநீர், பாரூர் ஏரிக்கு செல்லும் வகையில் விநாடிக்கு 300 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் முதல்போக சாகுபடி குறிப்பிட்ட நேரத்தில் தொடங்க முடியுமா என்கிற அச்சத்தில் இருந்த பாரூர் ஏரி நீர்ப்பிடிப்பு பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

News June 1, 2024

நாமக்கல்: முட்டை விலை 535 காசுகளாக நிர்ணயம்

image

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 530 காசுகளாக இருந்து வந்த நிலையில், நேற்று நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில்,அதன் விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர்.எனவே முட்டை கொள்முதல் விலை 535 காசுகளாக உயர்வடைந்துள்ளது.மேலும் நாமக்கல் மண்டலத்தில் முட்டை கோழி ரூ.98-க்கும்,கறிக்கோழி (உயிருடன்) கிலோ ரூ.140-க்கும் விற்பனையாகிறது.அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை.

News June 1, 2024

காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோயில் சிறப்பு!

image

காஞ்சிபுரம் உத்திரமேரூரில் அமைந்துள்ளது வைகுண்ட பெருமாள் கோயில். இக்கோயில் பல்லவரால் கட்டப்பட்டு, சோழர்களால் விரிவுபடுத்தப்பட்டது. 1ஆம் பராந்தக சோழன் ஆட்சியில் கிராம சபைகளுக்கு பிரதிநிதிகளை ஜனநாயக முறைகளின் தேர்ந்தெடுத்ததைக் குறிக்கும் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. பல அரசியலைப் பார்த்த இக்கோயில் 0.5 ஏக்கர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இக்கோயில் மண்டபத்தில் சோழர் காலக் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன.

News June 1, 2024

வாக்கு எண்ணிக்கைகாக கூடுதல் போலீசார்

image

லோக்சபா தேர்தல் தமிழகத்தில் கடந்த மாதம், 19ம் தேதி நடைபெற்றது. வரும் 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. கோவை மாவட்டத்தில் ஓட்டு எண்ணும் பணியில், 706 ஊழியர்கள் ஈடுபடுகின்றனர். ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் நாளில், அசம்பாவிதங்களை தடுக்க, கோவை மற்றும் பொள்ளாச்சியில், 1000 போலீசார் கூடுதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக இன்று காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

News June 1, 2024

கோவை அரசு கல்லூரி முதல்வர் பணி ஓய்வு

image

கடந்த 1989-ஆம் ஆண்டு கல்லூரி கல்விப் பணியில் வேதியியல் துறையில் சேர்ந்து பல்வேறு கல்லூரிகளில் பேராசிரியராக பணியாற்றிய உலகி கோவை வருவதற்கு முன் கடலூா் பெரியாா் அரசு கலை கல்லூரியின் முதல்வராக இருந்தாா். கடந்த 2021ல் கோவை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநராக நியமிக்கப்பட்ட அவா் பின் கோவை அரசு கலை கல்லூரியின் முதல்வராக கடந்த 2022 டிசம்பா் மாதம் நியமிக்கப்பட்டாா். இவர் நேற்று ஓய்வு பெற்றார்.

News June 1, 2024

ராம்நாடு: புதுமைப் பெண் திட்டத்தில் 3083 பேர் பயன்

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவிகள் மேற்படிப்பு படிக்க புதுமைப்பெண் திட்டத்தில் மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வரை தமிழ் வழி கல்வியில் பயின்ற மாணவிகள் இத்திட்டத்தில் கடந்த ஆண்டில் 42 கல்லூரிகளில் 3083 மாணவிகள் பயன்பெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.

News June 1, 2024

கிருஷ்ணகிரி மல்லசந்திரம் டால்மன்கள் சிறப்பு!

image

கிரிஷ்ணகிரியில் உள்ள மல்லசந்திரம் எனும் பகுதியில் அமைந்துள்ளது மல்லசந்திரம் டோல்மென்ஸ். புதிய கற்காலம் தொடங்கி தற்காலம் வரை, தொடர்ச்சியான வரலாற்றை கொண்ட இம்மாவட்டத்தில், கற்கால சின்னம் ஒன்று உள்ளது. அதிகம் அறியப்படாத பொக்கிஷமாக இருக்கும் இதில் ஆதி மனிதர்கள் இருந்ததற்கான அடையாங்களும் எச்சங்களும் கிடைக்க பெறுகின்றன. இந்த டால்மன்கள் பல சேதமடையாமல் அப்படியே காட்சியளிக்கிறது.

error: Content is protected !!