India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கரூர் மக்களே.., நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. அதன் மூலம் எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். கரூர் மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 04324-296570 ,தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441 , Toll Free 1800 4252 441, சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126, உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756. உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம். ஈரோடு மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 0424-2214282, தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441, Toll Free -1800 4252 441, சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126, உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756.(ஷேர் பண்ணுங்க)

தேனி மக்களே, 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள அலுவலகங்களுக்கு இனி அலைய வேண்டாம். <

ரேஷன் கார்டில் உங்க புது உறுப்பினர்களை சேர்க்கனுமா? இதற்கு தாலுகா அலுவலகங்கள் அலைய வேண்டியதில்லை. உங்க போன்லேயே புது உறுப்பினர்களை சேர்க்கலாம்.
1.இங்கு <
2. அட்டை பிறழ்வுகள் -ஆ தேர்ந்தெடுங்க
3. உறுப்பினர் சேர்க்கை தேர்வு செய்து உறுப்பினர்களின் விவரங்கள் பதிவு செய்யுங்க..
7 நாட்களில் உறுப்பினர் சேர்க்கை பணி முடிந்துவிடும். SHARE பண்ணுங்க.

பொங்கல் பண்டிகையை கொண்டாட, பல்வேறு மாவட்டங்களில் இருந்து மக்கள் சொந்த ஊருக்கு படையெடுக்க தொடங்கிவிட்டனர். இவ்வாறு ஆம்னி பேருந்துகளில் மதுரைக்கு பயணிக்கும் உங்களிடம், அளவுக்கு அதிகமான கட்டண கொள்ளையில் ஈடுபடுபவர்கள் மீது 9095366394 என்ற எண்ணில், கால் செய்தோ, SMS மூலமாகவோ (அ) Whatsapp மூலம் புகாரளித்தால், உடனடி நடவடிக்கை பாயும் என போக்குவரத்து துறை எச்சரித்துள்ளது. இந்த நல்ல தகவலை ஷேர் பண்ணுங்க..

நெல்லை மக்களே; மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்.
1. விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகவும். (or)
2.pmjay.gov.in இணையதளத்தில் ரேஷன்&ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்
3.10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்கு பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும்.
அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

உ.பி., மாநிலத்தைச் சேர்ந்தவர் ராமாசங்கர் இவர் மப்பேடு பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று அதிகாலை வழக்கம்போல் பணிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது 6 பேர் கொண்ட மர்ம கும்பல் ராமாசங்கரை கொடூரமாக தாக்கி அவரிடமிருந்து ரூ. 10,000 மற்றும் செல்போனை கொள்ளையடித்து சென்றுள்ளனர். தாக்குதலுக்கு ஆளான ராமாசங்கர் திருவள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

புதுச்சேரி மாநிலத்தில், குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3000 பொங்கல் பரிசு வழங்க முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் இந்த தொகை பொங்கலுக்கு முன்னதாகவோ அல்லது பின்னரோ பயனாளிகளின் வங்கித் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும். மேலும் இதற்கான கூடுதல் நிதி உதவி கோரி மத்திய அரசுக்குக் கடிதம் அனுப்பி உள்ளதால், ஒப்புதல் கிடைத்தவுடன் முழுத் தொகையும் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுள்ளது.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் கேஎஸ்.அழகிரியின் மனைவி வத்சலா (65). இவர் நீண்ட நாட்களாக உடல்நலக் குறைவால் சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று (ஜன.11) காலமானார். வத்சலாவின் இறுதிச் சடங்கு கடலூர் மாவட்டம், திருப்பணிநத்தம் கிராமத்தில் இன்று மாலை நடைபெற்றது. இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் உட்பட பலர் இரங்கல் தெரிவித்தனர்.

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (ஜன.12) காலை 8.30 மணி நிலவரப்படி பரங்கிப்பேட்டை 3.2 மில்லி மீட்டர், கொத்தவாச்சேரி 3 மில்லி மீட்டர், மே.மாத்தூர் 3 மில்லி மீட்டர், அண்ணாமலை நகர் 2.7 மில்லி மீட்டர், கடலூர் ஆட்சியர் அலுவலகம் மற்றும் பண்ருட்டி தலா 1.3 மில்லி என மாவட்டம் முழுவதும் 17.5 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
Sorry, no posts matched your criteria.