Tamilnadu

News June 1, 2024

ராமநாதபுரம்: அரசியல் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

image

இராமநாதபுரம் மத்திய மாவட்டம் தமுமுக நகர் சார்பாக நேற்று பாலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாகவும், இஸ்ரேல் ராணுவத்தைக் கண்டித்தும் மாவட்ட தலைவர் பிரீமியர் இப்ராஹிம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமுமுக மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் சலிமுல்லாஹ்கான்
கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதில் ஏராளமான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.

News June 1, 2024

30 ஆண்டுக்கு பிறகு ஒரு சந்திப்பு 

image

1992-94 ல் சோளிங்கர் எத்திராஜ் அம்மாள் முதலியாண்டார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் பயிற்சி செயல்பட்டு வந்தது. இங்கு பயிற்சி முடித்த மாணவ, மாணவிகள் தற்போது பல்வேறு ஊர்களில் தலைமை ஆசிரியராகவும், பட்டதாரி ஆசிரியர்களாகவும் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் 30 ஆண்டுகள் கழித்து வாலாஜா தாலுகா காஞ்சனகிரி மலை பகுதியில் சந்தித்துக் கொண்டனர். அப்போது தங்களின் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

News June 1, 2024

கோவையில் இன்று மழைக்கு வாய்ப்பு

image

கோவை மலைப்பகுதியில், இரு நாட்களுக்கு (ஜூன்.1 மற்றும் ஜூன்.2) மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்துள்ளது. அதன்படி கோவையில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழைப் பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சியின் காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்

News June 1, 2024

திருப்பத்தூர்: அதிமுக வேட்பாளர் நிர்வாகிகளுக்கு அழைப்பு

image

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியை சேர்ந்த அதிமுக வேலூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் பசுபதி, அதிமுக நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் அனைவரும் 01.06.2024(இன்று) நடைபெறும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் ஆலோசனை கூட்டத்திற்கு கட்டாயம் கலந்துகொள்ள அழைப்பு விடுத்துள்ளார். ஆலோசனை கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர் பல்வேறு ஆலோசனைகள் வழங்க உள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

News June 1, 2024

திண்டுக்கல் அருகே பொதுமக்கள் சாலை மறியல்

image

திண்டுக்கல் மாவட்டம், அய்யலூர் SK.நகரில் மதுபோதையில் வாகனம் ஓட்டி இரட்டை விபத்து ஏற்படுத்திவிட்டு வழக்கறிஞர் விஜயகுமார் என்பவர் தப்பி ஓடியுள்ளார். அவரை கைது செய்ய வலியுறுத்தியும், விஜயக்குமாருக்கு ஆதரவாக உண்மையை மறைத்து புனைவழக்கு பதிந்து ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு அப்பாவிகளை கைது செய்வதைக் கண்டித்தும் பொதுமக்கள் நேற்று சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News June 1, 2024

திருவள்ளூர்: போலி ஆவணங்கள் மூலம் நில மோசடி

image

அம்பத்தூர் அருகே புத்தகரம் பகுதியில் அருணா (63) என்பவருக்கு ரூ.75 லட்சம் மதிப்பிலான 1800 சதுர அடி நிலம் உள்ளது. இந்த நிலத்தை புத்தகரம், திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்த இனியன் (34) என்பவர் போலி ஆவணங்களை தயாரித்து விற்பனை செய்துள்ளார். புகாரின் பேரில் ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து இனியன் என்பவரை நேற்று கைது செய்தனர்.

News May 31, 2024

பத்திரிக்கையாளர் சந்திப்பு குறித்து ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

நாளை காலை 10.00 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான ச.உமா வாக்கு எண்ணிக்கை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களை சந்திக்கிறார். எனவே அங்கீகரிக்கப்பட்ட அனைத்து செய்தியாளர்களும் இந்த சந்திப்பில் கலந்து கொள்ளுமாறு செய்து தொடர்பு துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 31, 2024

தேர்தல் பணியாளர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை (ஜூன் 1) ஜிடிபி ஹாலில் காலை 10 மணிக்கு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் வாக்கு எண்ணும் மேற்பார்வையாளர்கள், வாக்கு எண்ணும் உதவியாளர்கள் ஆகியோருக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. இந்த பயிற்சி வகுப்பில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று ஆட்சியர் வளர்மதி இன்று தெரிவித்துள்ளார்.

News May 31, 2024

பெட்ரோல் குண்டு வீசிய குற்றவாளி கைது

image

ஓமலூர் அருகே உள்ள காமலாபுரம் மற்றும் பொட்டியபுரம் கிராமம் ஆகிய பகுதிகளில் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்திய வழக்கில் ஏற்கனவே 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் முக்கிய குற்றவாளியான கருப்பூர் குள்ளகவுண்டனூரை சேர்ந்த சாரதியை இன்று போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள 2 பேரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

News May 31, 2024

ஊராட்சித் தலைவரின் அதிகாரம் பறிப்பு

image

தென்காசி மாவட்டம் ஆவுடையானூர் ஊராட்சியில் பல்வேறு நிதி முறைகேடுகள் நடந்துள்ளது என்பதை தணிக்கை குழு கண்டுபிடித்து அறிக்கை வெளியிட்டது. இதனைத்தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவராக உள்ள குத்தாலிங்கம் என்பவரின் காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தைப் பறித்து  ஆட்சியர் கமல் கிஷோர் இன்று நடவடிக்கை எடுத்துள்ளார்.

error: Content is protected !!