India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

இன்று (ஜன.12) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.

சாத்தான்குளம் அருகே உள்ள வடக்கு உடைப்பிறப்பை சேர்ந்தவர் ராஜபாண்டி (71). இவர் நேற்று காலை அவரது ஊரிலிருந்து திசையன்விளைக்கு பைக்கில் சென்றார். இடைச்சிவிளை பகுதியில் வரும்போது எதிரே வந்த தனியார் ஆம்னி பேருந்து இவரது பைக் மீது பயங்கரமாக மோதியது. பலத்த காயமடைந்த ராஜபாண்டி சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இதுகுறித்து தட்டார் மடம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

சென்னை மாவட்டத்தில் இன்று (12.01.2026) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

தென்காசி, ஆலங்குளம், புளியங்குடி,சங்கரன்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் காவல் துறை உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இன்று (12-1-26) தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம். அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100க்கு அழைக்கவும்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும் துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் டியூப், காகிதம், இரசாயனம் கலந்த பொருட்கள் போன்றவற்றை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுகிறது. இதனால் அடர்ந்த புகையின் காரணமாக விமானங்கள் வருகை மற்றும் புறப்பாடுகளில் தாமதம் ஏற்படுகிறது. எனவே சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் போகிப்பண்டிகையைக் கொண்டாடுமாறு, ஆட்சியர் மு.பிரதாப் தெரிவிப்பு.

அரியலூர் மாவட்டம் கடம்பூர் கிராமத்தில் இன்று பொங்கல் விழாவை முன்னிட்டு, பாரதிய ஜனதா கட்சி சார்பாக ஒன்றிய தலைவர் அருண் ஏற்பாட்டில் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் அரியலூர் மாவட்ட பாஜக தலைவர் பரமேஸ்வரி ஆனந்த்ராஜு, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

தேர்வுகளில் எளிதாக வெற்றி பெறுவது எப்படி? என்ற பயிற்சிப்பட்டறை திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் மாணவர்களுக்கு வரும் ஜன.25 ஆம் தேதி நடத்த உள்ளார். இதற்குமுன் பதிவு செய்வதற்காக மேல் உள்ள க்யூ ஆர்-யை ஸ்கேன் செய்ய வேண்டும். மேலும் தகவலுக்கு தொடர்பு கொள்ள: 9445500346 என்ற தொலைபேசி எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இதில் பங்கேற்று பயன் பெறலாம்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அறிவியல் பூங்காவில் பரதநாட்டியம், நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் என (ஜன.15) மற்றும் (ஜன.16) ஆகிய இரண்டு நாட்கள் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. எனவே பொங்கல் விடுமுறை நாட்களில் நடைபெற உள்ள கலைநிகழ்ச்சியில் அனைத்து பொதுமக்களும் கண்டுகளிக்கலாம், என ஆட்சியர் மு.பிரதாப், இன்று தெரிவித்தார்.

பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி வரும் ஜன.23ஆம் தேதி மதுரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அது தற்போது சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளது. மோடியுடன் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் இடம் பின்னர் அறுவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மதுரையில் பொதுக்கூட்டத் திடலை நயினார் இன்று மாலை ஆய்வு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு மதுபானம் (உரிமம் & அனுமதி) விதிகள் 1989 விதி 23 நிபந்தனைகளின் படி, திருவள்ளுவர் தினம் (16.01.2026, வெள்ளிக்கிழமை) குடியரசு தினம் (26.01.2026, திங்கள் கிழமை) ஆகிய நாட்களில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து இந்திய தயாரிப்பு அயல்நாட்டு டாஸ்மாக் மதுபான கடைகள் (IMFL) அதனுடன் இணைந்த மதுபானக் கூடங்கள் மூடப்பட வேண்டும், என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் கலைசெல்வி மோகன் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.