India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோடு மக்களவை தொகுதியில் திமுக 14,611 ஓட்டுகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறது. இரண்டாவது இடத்தில் அதிமுக 12786 ஓட்டுகளும், தமாகா 2400 ஓட்டுகள் பெற்று மூன்றாவது இடத்திலும், நாதக 1589 ஓட்டுகள் பெற்று நான்காவது இடத்திலும் உள்ளது.
ஈரோடு மக்களவை தொகுதியின் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை வெளியாகியுள்ளது. இதில் திமுக வேட்பாளர் பிரகாஷ் 4,492 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். அதிமுக வேட்பாளர் ஆற்றல் சிவகுமார் 2,962 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்
கார்மேகம் 327 வாக்குகளும், தமாகா வேட்பாளர் விஜயகுமார் 447 வாக்குகள் பெற்று 4ஆம் இடத்தில் உள்ளார்.
விருதுநகர் மக்களவை தொகுதியின் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை வெளியாகியுள்ளது. இதில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 19,493 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் 19,680 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் 9,022 வாக்குகள் பெற்று முன்றாம் இடத்தில் உள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு 4,379 வாக்குகள் பெற்றுள்ளார்.
தர்மபுரி செட்டிக்கரை அரசு பொறியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. தற்போது நடைபெற்று வரும் இரண்டாவது சுற்று வாக்கு எண்ணிக்கையில் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் சௌமியா அன்புமணி 5,407 வாக்குகள் பெற்று முதல் இடத்திலும், திமுக வேட்பாளர் 2,180 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்திலும், அதிமுக வேட்பாளர் 1917 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளார்.
கோவை தொகுதி பொருத்தவரை திமுக, அதிமுக, பாஜக என மும்முனை போட்டியின் நிலவி வரும் நிலையில் ஆரம்பத்தில் இருந்து தபால் வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் முன்னிலையில் இருந்து வந்தார். இந்நிலையில் இரண்டாம் சுற்று வாக்கு எண்ணிக்கையில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை முன்னிலையில் உள்ளார் நகரப் பகுதி வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
சேலம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் முதல் சுற்றின் முடிவில் அதிமுக முன்னிலை வகிக்கிறது. இங்கு அதிமுக 4012 வாக்குகளும், திமுக 2646 வாக்குகளும் பெற்றுள்ளன. அதிமுக 1366 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையுடன் திகழ்கிறது.
காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியின் முதல் சுற்று முடிவு வெளியாகியுள்ளது. அதன்படி, திமுக – 27368 , அதிமுக – 17122, பாமக – 8409, நாம் தமிழர் – 5778
வாக்குகள் பெற்றுள்ளன. இதில், திமுக வேட்பாளர் செல்வம் 10246 வாக்கு வித்தியாசத்தில முன்னிலை வகிக்கிறார்
தஞ்சை மக்களவைத் தொகுதி முதல் சுற்றில் திமுக முன்னிலை பெற்றுள்ளது.
திமுக – 25,837
தேமுதிக – 9,629
பாஜக – 8,011
நாத – 7,385
16,208 வித்தியாசத்தில் திமுக முன்னிலை.
மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மயிலாடுதுறை மற்றும் பூம்புகார் சட்டமன்ற தொகுதிகளின் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் வேட்பாளர் சுதா 4153 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். தொடர்ந்து அதிமுக வேட்பாளர் பாபு 2125 வாக்குகளும், பாமக வேட்பாளர் ம.க. ஸ்டாலின் 1579 வாக்குகளும், நாதக காளியம்மாள் 911 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
சிவகங்கை மக்களவை தொகுதியில் 5 சட்டமன்ற தொகுதிகளில் முதல் சுற்று நிலவரம் சற்று முன் வெளியானது. இதில், காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் 14,319 வாக்குகள் பெற்று 5,397 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார். முதல் சுற்றுகளின் முடிவில் காங்., 14,319, அதிமுக 9,022 நாம் தமிழர் 4,932, பாஜக 4,878 வாக்குள் பெற்றுள்ளன.
Sorry, no posts matched your criteria.