Tamilnadu

News January 14, 2026

சிவகங்கை: 2 நாட்கள் மதுக்கடை மூடல்

image

சிவகங்கை மாவட்டத்தில் வருகின்ற 16.1.2026 (திருவள்ளுவர்  தினம்) மற்றும்  26.1.2026 (குடியரசு தினம்) ஆகிய தினங்களில், மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபானக்கடைகள் மற்றும் அதனுடன் இணைந்து செயல்படும் மதுக்கூடங்கள், FL2, FL3 உரிமம் பெற்ற கிளப், ஹோட்டல்கள் மற்றும் மது அருந்தும் கூடங்கள்  முழுவதுமாக மூடப்படும் என மாவட்ட  ஆட்சித்தலைவர்   கா.பொற்கொடி தெரிவித்துள்ளார்.

News January 14, 2026

நாகை: 220 கிலோ கஞ்சா பறிமுதல்

image

நாகை மாவட்டம், வேட்டைக்காரன் இருப்பு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது அப்பகுதியில் 220 கிலோ கஞ்சா மூட்டைகளை கொண்டு சென்ற காரை மடக்கி பிடித்த போலீசார், ரூ.22 லட்சம் மதிப்புள்ள கஞ்சா மூட்டைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News January 14, 2026

திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

திருச்சி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் மாசு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே இவ்வருடம் பொதுமக்கள் அனைவரும் பிளாஸ்டிக், டயர், டியூப் போன்றவற்றை எரிக்காமல், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் போகிப் பண்டிகையை கொண்டாட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News January 14, 2026

தேனி: மது பிரியர்களுக்கு அதிர்ச்சி தகவல்…

image

தமிழகம் முழுவதும் வருகின்ற ஜனவரி 16ம் தேதி திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு தேனி மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மதுபான கடைகள் மூட வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் தெரிவித்துள்ளார். மேலும், அன்றைய தினம் தனியார் மதுபான கடையில் மது விற்பனை செய்தாலும், கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

News January 14, 2026

திருவாரூர் ஆட்சியர் கொடுத்த முக்கிய அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மாவட்டத்தில் வசித்து வரும் பர்மா மற்றும் இலங்கையிலிருந்து தாயகம் திரும்பியோருக்கு வழங்கப்பட்ட கடன்களுக்கு அடமானம் செய்யப்பட்ட நில ஆவணங்கள் மீது உள்ள கடனை நீக்கிவிட்டு திரும்ப ஒப்படைக்க அரசு அறிவித்துள்ளது. எனவே இது தொடர்பான விவரங்களுடன் உடனே ஆட்சியர் அல்லது ஆர்டிஓ அலுவலகத்தை அணுகலாம்.” என அறிவித்துள்ளார்.

News January 14, 2026

தஞ்சை: ஆற்றில் மிதந்த 2 பிணங்கள்!

image

தஞ்சாவூர் சீதா நகர் மேம்பாலம் கல்லணைக் கால்வாய் ஆற்றில் நேற்று முன்தினம் ஒரு முதியவரின் உடல் மிதந்து வந்தது. தகவலறிந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரித்ததில், உயிரிழந்தவர் சண்முகம் (69) என தெரியவந்தது. இதேபோல, கரந்தை வடவாற்றில் சீனிவாசன் (73) என்ற முதியவரின் உடலும் மீட்கப்பட்டது. இருவரும் ஆற்றில் தவறி விழுந்து இறந்தனரா ? அல்லது தற்கொலையா? என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 14, 2026

புதுச்சேரி: மதுக்கடைகள் அடைப்பு

image

உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவரின் நினைவைப் போற்றும் வகையில், ஆண்டுதோறும் கொண்டாடப்படும் திருவள்ளுவர் தினத்தை (ஜன.16) முன்னிட்டு, புதுச்சேரி யூனியன் பிரதேசம் முழுவதும் மதுக்கடைகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. எதிர்வரும் 16.01.2026 (வெள்ளிக்கிழமை) அன்று ஒரு நாள் முழுவதும் மது விற்பனைக்குத் புதுவை அரசு தடை விதிக்கப்பட்டுள்ளது.

News January 14, 2026

திருத்தணி மாணவிக்கு பாலியல் வன்முறை!

image

திருவள்ளூர்: திருத்தணி அருகே அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு பயின்று வரும் மாணவி நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சிறுமியிடம் அத்துமீறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், போலீசார் அந்த இளைஞரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

News January 14, 2026

குமரி: பைக் மோதி பெண் பலி

image

திங்கள்சந்தை அருகே வாடிவிளையைச் சேர்ந்தவர் மேரி ஜெனட்(50). இவர் அந்தப் பகுதியில் சாலையை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த பைக் அவர் மீது மோதியது. இதில் தலையில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 14, 2026

தூத்துக்குடி: அரிவாளுடன் சிக்கிய 3 சிறுவர்கள்

image

தூத்துக்குடி தென்பாகம் போலீசார் டைட்டில் பார்க் அருகே உப்பளத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த சிவகுமார் மற்றும் 3 இளம் சிறார்களை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர்களிடம் பெரிய அரிவாள் இருப்பது கண்ட போலீசார் அதை பறிமுதல் செய்து 3 சிறார்களையும் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சிவகுமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!
↑