India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நெல்லை மாநகர காவல்துறை சார்பில் செய்தி குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், உங்களது செல்போனில் ஆன்லைன் பகுதி நேர வேலை என கூறி டாஸ்க் வைத்து சிறிது பணத்தை உங்கள் கணக்கில் காண்பித்து நம்ப வைத்து உங்களிடம் இருந்து பணத்தை பறிக்கும் மோசடி நிகழ்வுகள் தற்போது அதிக அளவில் நடைபெறுகின்றன. இதில் பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்றும், இது குறித்து 1930-க்கு புகார் அளிக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியம், வெடியங்காடு கிராமம், மதுரா புதூர் பகுதியைச் சேர்ந்தவர் வள்ளியம்மாள்(75). இவர் பெங்களூரில் வேலை செய்து வந்தார். இந்நிலையில், பொங்கல் பண்டிகையைக் கொண்டாட நேற்று(ஜன.13) அதிகாலை ஊருக்கு வந்த அவர், வயல் வெளியில் நடந்த போது, மின் கம்பியை மிதித்துள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

நெல்லித்தோப்பு, பெரியார் நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சார்லஸ் (45). மதுப்பழக்கமுள்ள சார்லசுக்கு நீரிழிவு நோய் இருந்துள்ளது. இந்நிலையில் திடீரென வீட்டில் மயங்கி விழுந்துள்ளார். உடனே அவரது மனைவி மேரி கணவரை ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து உருளையன்பேட்டை போலீசார் தற்போது வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஜன.14, 15 ஆகிய தேதிகளில் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இதையொட்டி, கோவையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், கோவை மாநகரின் முக்கிய பகுதிகளில் ஜன.14, ஜன.15-ம் தேதிகளில் காலை 8 மணி இரவு 10 மணி வரை ட்ரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரிசி ரேஷன் கார்டுதாரர்களில் 95 சதவீதம் பேருக்கு ரூ.3000 பரிசுத் தொகையுடன் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. விடுபட்ட 4000 பேருக்கு பொங்கல் தொகுப்பு வாங்குவதற்கு இன்று (ஜன.,14) கடைசி நாளாகும் என மாவட்ட வழங்கல் துறையினர் தெரிவித்தனர். ராமநாதபுரம் மக்களே இன்றே போயி உங்க ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பை வாங்கிக்கோங்க..

ராணிப்பேட்டை: ஆற்காட்டை அடுத்த எசையனூர் கிராமத்தில் பூட்டியிருந்த வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து மர்ம நபர்கள் திருட்டில் ஈடுபட்டனர். இதில் 20 சவரன் தங்க நகைகள், ஒரு கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூ.50,000 ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டன. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளிகளை கண்டறிய தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உசிலம்பட்டி பூதிப்புரத்தை சேர்ந்தவர் மதன்குமார்(18). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த இளைஞர்களுக்கும் கிரிக்கெட் விளையாட்டில் தகராறு ஏற்பட்டது. இதில் கிரிக்கெட் மட்டையால், மதன் குமார் தலை, உடல் என சரமாரியாக தாக்கப்பட்டார். உசிலம்பட்டி போலீசார் அஜித்குமார்(24), புலிப்பாண்டி(23), டார்வின்(19), ஹரி(21), கல்யாணி(23), விக்னேஷ்(27), கார்த்திக்(25) என 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து இன்று விசாரிக்கின்றனர்

மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையம் அருகில் சுஹாஷ் (48) என்பவா் தங்க நகைகளை உருக்கும் பட்டறை நடத்தி வருகிறாா். இவரது கடையில் பணியாற்றிய மகாராஷ்டிர மாநிலத்தைச் சோ்ந்த 16 வயது சிறுவன் 1.5 கிலோ நகைகளை எடுத்துக்கொண்டு தலைமறைவானாா். இதையடுத்து புகாரின் பேரில் தீவிர விசராணை மேற்கொண்ட போலீசார், தங்க நகைகளை திருடிச் சென்ற சிறுவனை வெறும் மூன்றே மணி நேரத்தில் மயிலாடுதுறை ரயில் நிலையம் அருகே கைது செய்தனர்.

ஜவ்வாது மலையடிவாரத்தில் மேல்வன்னியனூரில், சில தினங்களுக்கு முன்பு 4 கன்று குட்டிகள் & 2 நாய்களை மர்ம விலங்கு கடித்து கொன்றுள்ளது. மேலும், நேற்று முன்தினம் கிடாம்பாளையம், வதியன் கோட்டையில் கன்று குட்டிகளை கடித்து கொன்றுள்ளது. இறந்த விலங்குகளில் புலியின் தடயங்கள் இருப்பதாக வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், மக்கள் இரவு நேரங்களில் வெளியே செல்ல வேண்டாம் என வனத்துறை எச்சரித்துள்ளது.

கொடுமுடியைச் சேர்ந்தவர் பழனியப்பன் (65). இவர் நஞ்சை ஊத்துக்குளியில் உள்ள தனியார் ஆலையில் விறகு லோடு இறக்கி கொண்டு இருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்த அவரை அங்கிருந்தவர்கள் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வரும் வழியில் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.