Tamilnadu

News January 14, 2026

நெல்லையில் பொங்கல் வேஷ்டி சேலை இல்லை

image

நெல்லை மாவட்டத்தில் பொங்கலை முன்னிட்டு விலையில்லா வேட்டி, சேலை வழங்குவதில் நிலவும் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். டவுன், களக்காடு, நாங்குநேரி உள்ளிட்ட பகுதிகளில் வேட்டி இருந்தால் சேலை இல்லை என்ற நிலை உள்ளதால், ரேஷன் ஊழியர்களுடன் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதை கிடைக்காததைக் கண்டித்து ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டதாக தகவல் தெரிவிக்கிறது.

News January 14, 2026

ராணிப்பேட்டை: முட்புதரில் சிக்கிய சிறுவன்!

image

மருதாலம் அடுத்த கசத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அரி. இவரது மகன் லிங்கேஷ், அங்குள்ள அரசு பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளிக்கு சென்ற மாணவன் கடந்த ஜன.12ஆம் தேதி இரவு வரை வீடு திரும்பவில்லை. பெற்றோர்கள் அவனைத் தேடி வந்த நிலையில், வீட்டின் அருகே உள்ள முட்புதரில் படுத்து தூங்கியதை அருகில் இருந்தவர்கள் கண்டுபிடித்து மாணவனை மீட்டு நேற்று(ஜன.13) பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

News January 14, 2026

சென்னை: இரண்டரை வயது குழந்தை பரிதாப பலி!

image

பெரம்பூரைச் சேர்ந்தவர்கள் முனீர் பாஷா- பர்வீன். தம்பதியின் இளைய மகளான இரண்டரை வயது குழந்தைக்கு சளி அதிகரித்து, சில தினங்களாக மூச்சுத்திணறலால் அவதியடைந்து வந்தார். நேற்று காலை, குழந்தைக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்த்தபோது, குழந்தை ஏற்கனவே உயிரிழந்ததாக, டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து திரு.வி.க நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 14, 2026

வாழப்பாடி அருகே பயங்கர விபத்து: 2 பெண்கள் பலி!

image

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே கருமாபுரம் பத்தாங்கல் மேடு பேருந்து நிறுத்தம் பகுதியில் நேற்று மதியம் நின்று கொண்டிருந்தவர்கள் மீது, அவ்வழியே வந்த சரக்கு வாகனம் பயங்கரமாக மோதியது. இதில் சின்ன பிள்ளை (60) மற்றும் அவரது மருமகள் காயத்ரி (35) ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 14, 2026

செங்கல்பட்டு: வாகன விபத்தில் 2 மான்கள் பலி!

image

அச்சரப்பாக்கம் அருகே வஜ்ரகிரி மலை அடிவாரத்தில் உள்ள சமூக காட்டில் இருந்து சென்னை – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையை கடந்த, இரண்டு வயது மதிப்புள்ள ஆண் மற்றும் பெண் புள்ளிமான்கள் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், அச்சிறுப்பாக்கம் வனத்துறையினர் மான்களின் உடலை கைப்பற்றி, காப்பு காட்டில் புதைத்தனர்.

News January 14, 2026

தகராறில் ஈடுபட்ட 3 பேர் கைது

image

கிருஷ்ணகிரி: உத்தனப்பள்ளி அடுத்த அந்தேவனப்பள்ளி கிராமத்தில் உள்ள சுரேஷ் என்பவரின் பேக்கரியில் அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை என்பவர் பொருட்களை நேற்று முன்தினம் ஜன-12 வாங்கி கொண்டு பணம் கொடுக்காததால் இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தேன்கனிகோட்டை போலீசார் 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 14, 2026

சாத்தூர் அருகே விபத்தில் ஒருவர் பலி

image

சாத்தூர் வெள்ளையப்பர் தெருவை சேர்ந்தவர் முனியசாமி(62). இவர் சாத்தூர் தாலுகா அலுவலகம் முன்பாக சாலையை கடக்க முயன்ற போது அவ்வழியாக வந்த ஆட்டோ மோதியதில் பலத்த காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் இவரை மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News January 14, 2026

மதுரையில் போக்குவரத்து மாற்றம்!

image

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வருகின்ற 15.1.2026 தேதி அன்று மதுரை மாநகர் அவனியாபுரம் – தி.குன்றம் சாலையில் பத்திரகாளி அம்மன் கோவில் அருகில் அமைந்துள்ள ஜல்லிக்கட்டு மைதானத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் திருப்பரங்குன்றம் செல்லும், அனைத்து வாகனங்களும் அவனியாபுரம் பைபாஸ் – வெள்ளக்கல் வழியாக திருப்பரங்குன்றம் செல்ல வேண்டும் என போலீசார் அறிவித்துள்ளனர்.

News January 14, 2026

குமரி மாவட்டத்தில் சிறந்த போலீஸ் ஸ்டேஷன் இது தான்!

image

குமரி மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக டிசம்பர் மாதத்தில், விரைவான குற்றப் பத்திரிகை தாக்கல், சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் மீதான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருதல் போன்ற வகையில் சிறப்பான காவல் நிலையமாக வடசேரி காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டது. இதற்காக நேற்று (ஜன.13) மாவட்ட எஸ்.பி ஸ்டாலின் வடசேரி காவல் நிலைய அதிகாரிகளுக்கு கேடயம் வழங்கி பாராட்டினார்.

News January 14, 2026

இராம்நாடு: கிணற்றில் தவறி விழுந்தவர் பரிதாபமாக பலி

image

ராமேஸ்வரம் அடுத்த கெந்தமாதன பர்வதம் பகுதியைச் சேர்ந்த நந்தகுமார் என்பவர் தனது வீட்டின் அருகே உள்ள கிணற்றில் தவறி விழுந்து நீண்ட நேரமாக உயிருக்கு போராடி பரிதாபமாக உயர்ந்துள்ளார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்து காவல்துறையினர் உதவியுடன் உடலை பத்திரமாக மீட்டு ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக எடுத்துச் செல்லப்பட்டது.

error: Content is protected !!
↑