Tamilnadu

News June 6, 2024

திருப்பத்தூர்: கோர விபத்து – பலி

image

ஆம்பூர் தாலுகா விண்ணமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை 5.45 மணிக்கு மேம்பாலம் தடுப்பு மீது ஆம்பூர் சாலையில் இருந்து வாணியம்பாடி நோக்கி வந்த லாரி தடுப்பு மீதி மோதி தலைகீழாக கவிழ்ந்தது. இதில், லாரி டிரைவர் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆம்பூர் தாலுகா போலீசார் இறந்தவர் யார், எந்த ஊர் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

News June 6, 2024

நான் முதல்வன் திட்டத்தில் 35 ஆயிரம் மாணவா்கள் பயன்

image

தமிழக அரசு செயல்படுத்திய திட்டங்களில் நான் முதல்வன் திட்டம் மிக முக்கியமானது. இந்த திட்டம் மாணவ, மாணவிகளின் தனித்திறமைகளை அடையாளம் கண்டு, அதை ஊக்குவிப்பதாகும். அந்தவகையில், நாகை மாவட்டத்தில் நான் முதல்வன் திட்டத்தில் 34,506 மாணவா்கள் பயன்பெற்றுள்ளனா்.

News June 6, 2024

அரியலூர்: கதிர் அரிவாளால் வெட்டு

image

அரியலூர் மாவட்டம் உதயநத்தம் அடுத்த அமிர்தராயன் கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி. அதே கிராமத்தைச் சேர்ந்த முருகானந்தம் என்பவரது வயலில் திருட்டுத்தனமாக புல் அறுத்ததில் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் ராமசாமி வைத்திருந்த கதிர் அருவாளை பிடுங்கியதில் ராமசாமிக்கு காயம் ஏற்பட்டு ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News June 6, 2024

திண்டுக்கல்: சட்டப்பேரவை வாரியாக பெற்ற வாக்குகள்

image

திண்டுக்கல் மக்களவை தொகுதியில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்.சச்சிதானந்தம் போட்டியிட்டார். இவர் திண்டுக்கல் தொகுதியில் சட்டப்பேரவை வாரியாக பெற்ற வாக்குகள் விபரம். திண்டுக்கல், 1,04,280, பழனி-1,03,002, ஒட்டன்சத்திரம்-1,13,647, ஆத்தூர் -1,39,319, நிலக்கோட்டை-89,361, நத்தம்-1, 17, 782 வாக்குகள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

News June 6, 2024

பாஜக, நாதக வேட்பாளர்கள் உள்பட 52 பேர் டெபாசிட் இழப்பு

image

கரூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் ஏப். 19-ம்தேதி நடைபெற்றது. இதில் தமிழகத்திலேயே அதிக எண்ணிக்கையில் 54 பேர் போட்டியிட்டு முக்கிய வேட்பாளராக காங்கிரஸ் சார்பில் ஜோதிமணியும் , அதிமுக சார்பில் தங்கவேலும் , பாஜக சார்பில் செந்தில்நாதனும் , நாம் தமிழர் கட்சி சார்பில் கருப்பையாவும் களம் கண்டனர். மேலும் தோல்வியுற்ற அதிமுக வேட்பாளர் தவிர மற்ற 52 பேரும் வைப்புத்தொகையை இழந்தனர்.

News June 6, 2024

குரூப்-4 தேர்வு எழுதுவோருக்கு முக்கிய அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குருப் 4 தேர்வு வருகின்ற 09.06.24 ஞாயிற்றுக்கிழமை நடைபெறும். இதற்காக திருவாரூர், குடவாசல், நன்னிலம், நீடாமங்கலம், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, வலங்கைமான் ஆகிய 6 மையங்களில் தேர்வு மைய மாற்றம் குறித்து தேர்வர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்க படும் என மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.

News June 6, 2024

கால்பந்து பயிற்றுநர் தேர்வு 

image

திருப்பத்துார் மாவட்ட கேலோ இந்தியா கால்பந்து மையத்தில் கால்பந்து பயிற்றுநருக்கான காலி பணியிடத்தை நிரப்புவதற்கு தகுதியான கால்பந்து பயிற்றுநர்களிடமிந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 40-வயதுக்குட்பட்டவர்கள் ஜோலார்பேட்டை அரசு சிறு விளையாட்டு அரங்கத்தில் வரும் ஜூன் 11-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். ஜுன் 12-ஆம் தேதி காலை 10 மணிக்கு தேர்வு நடைபெறும்.

News June 6, 2024

தி.மலையில் மரக்கன்று நடும் விழா

image

திருவண்ணாமலை விக்னேஷ் பாலிடெக்னிக் கல்லூரியில், மரக்கன்று நடும் விழா நேற்று நடைபெற்றது.
கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, கல்லூரி முதல்வா் டி.சா்வேசன் தலைமை வகித்தாா். நிா்வாக அலுவலா் ஏ.கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். துறைத் தலைவா்கள், ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் இணைந்து கல்லூரியின் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகளை நட்டனா்.

News June 6, 2024

பழனி: வைகாசி கார்த்திகை வழிபாடு

image

பழனி முருகன் கோயிலில் வைகாசி மாத கார்த்திகையை முன்னிட்டு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றது. திருவிளக்குபூஜை மலைக்கோயிலில்நடைபெற்றது . தங்கமயில் வாகனத்தில்சின்ன குமார சுவாமிபுறப்பாடு நடைபெற்றது. கார்த்திகை நட்சத்திர நாளில் அதிகளவில் பக்தர்கள் தங்கரத புறப்பாட்டில் கலந்து கொண்டனர். 

News June 6, 2024

மதுரையில் ஹைக்கூ மூன்றாவது உலக மாநாடு!

image

மதுரையில் ஜூன் 9ல் தமிழ் ஹைக்கூ மூன்றாவது உலக மாநாடு நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாநாட்டின் ஆலோசகா் கவிஞா் மு.முருகேஷ், ஒருங்கிணைப்பாளா் இனிய நந்தவனம் இதழாசிரியா் கவிஞா் நந்தவனம் சந்திரசேகரன் ஆகியோா் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஹைக்கூ கவிதைப் பற்றிய தெளிவையும் புரிதலையும் உண்டாக்கும் வகையில் மதுரை உலகத் தமிழ் சங்கத்தின் கவிக்கோ அரங்கில் நடக்கும் இந்த மாநாட்டில் உலக அளவிலான கவிஞர்கள் வருகின்றனர்

error: Content is protected !!